25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

Jun 26, 2025

கண்பார்வை குறைபாடுசரியாக முல்லை பூ.

முல்லை மலரை தலையில் சூடிக்கொண்டு அதன் மனத்தை முகர்ந்தாலே மனோ வியாதிகள் நீங்கி, மனத்தெளிவு உண்டாகும். முல்லை பூவின் சாரை எடுத்து மூக்கில் ஒரு சொட்டு விட்டால் அடிக்கடி வரும் தலைவலி வராது.கண்பார்வை குறைபாடு உள்ளவர்கள்'வாரம் மூன்று நாட்களுக்கு கண்ணில் ஒரு சொட்டு விட்டால் கண்பார்வை குறைபாடுசரியாகும். மாதவிடாய் சமயத்தில் வரும் அதிகமான வயிற்றுவலி ஏற்பட்டால் முல்லை பூவை கசாயம் செய்து குடித்தால் சரியாகும்.கருப்பை பிரச்சனை இருந்தால் முல்லை பூகசாயம் செய்து வாரம் ஒரு மூன்று அல்லது நான்கு நாள் குடித்தால் கருப்பை பிரச்சனை சரியாகும்.ஒரு கைப்பிடி அளவுள்ள முல்லை பூவை எடுத்துக் கொண்டு அதைத் தண்ணீர் விட்டுக் காய்ச்சி அது வற்றியதும் 15 மில்லி அளவு அதை இரண்டு முறை ஒரு நாளுக்குக் குடித்து வர மாதவிடாய் கோளாறுகள் குணமாகும்.உடலில் சொறி, சிரங்கு இருந்தால் வேறு வேலையே ஓடாது. எப்போதும் கை சொரிந்து கொண்டிருப்பதிலேயே மும்முரமாக இருக்கும். எனவே, முல்லைப் பூவை அரைத்து உடல் முழுவதும் தடவி அரை மணி நேரம் கழித்து குளிக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாளாக 3 நாட்கள் செய்து வர நல்ல குணம் கிடைக்கும்.முல்லைப் பூ மட்டுமல்லாமல், அதன் இலை, வேர்ப் பகுதிகளுக்கும் அதிக சிறப்பு உள்ளது.

Jun 24, 2025

செவ்வாழை சாப்பிடுவதால் சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். 

 செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது.  செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும்.   செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது.   செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது.   தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம்.  செவ்வாழைப் பழத்தில் ஏராளமான நன்மைகள் இருக்கின்றன. 

Jun 23, 2025

உடலுக்கு தேவையான புரதச்சத்து  நிறைந்த  பழங்கள் 

உடல் வளர்ச்சி, தசை சக்தி, மற்றும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த புரதம் முக்கியம். உடலுக்குத் தேவையான புரதம் அதிகம் உள்ள சில பழங்கள்: அவகேடோ – 1 கப்: 3 கிராம் புரதம்கொய்யா – 1 கப்: 4 கிராம் புரதம்கிவி – 1 கப்: 2 கிராம் புரதம்மாதுளை – 100 கிராம்: 1.7 கிராம் புரதம்சர்க்கரை பாதாமி (ஆப்ரிகாட்) – 100 கிராம்: 1.4 கிராம் புரதம்கிரேப் புரூட் – 1 கப்: 1.3 கிராம் புரதம்குழிப்பேரி (பீச்) – 1 கப்: 1 கிராம் புரதம்வாழைப்பழம் – 1 கப்: 1.6 கிராம் புரதம்செர்ரி–1கப்:1.6கிராம்புரதம் பலாப்பழம் – 1 கப்: 3 கிராம் புரதம் இந்த பழங்களை உணவில் சேர்த்து உடலுக்கு தேவையான புரதத்தை எளிதில் பெறலாம்.

Jun 21, 2025

தேனடையில் தான் தேனீக்கள், தேனை சேமித்து வைக்கும்.

தேனடையில் தான் தேனீக்கள், மகரந்தம் மற்றும் தேனை சேமித்து வைக்கும். இதுமெழுகுபோன்றுஅமைந்திருக்கும், வணிகரீதியாக விற்பனை செய்யப்படும் தேன், பல்வேறு நிலைகளில் சுத்திகரிக்கப்பட்டு விற்பனைக்கு வருகிறது. ஆனால், தேனடை இயற்கையானது.தேனடையில் இருக்கும் தேனில் தேனீக்கள் சேகரித்த மகரந்தம், புரோபோலிஸ் மற்றும் ராயல் ஜெல்லி என்ற மெழுகு இருக்கும். இதனால், தனி தேனை விட மகரந்தம், ராயல் ஜெல்லி மெழுகு அடங்கிய தேனில் மருத்துவ குணங்கள் அதிகம் என்று நம்பப்படுகிறது. தேன் கூட்டில் செறிந்து கிடக்கும் தேனில் புரதங்கள், தாதுக்கள்,நீர்,மகரந்தம், பிரக்டோஸ், குளுக்கோஸ், கரிம அமிலங்கள் மற்றும் என்சைம்கள் ஆகியவை தாராளமாக உள் ளன. இவற்றை உண்ணும்போது மனித உடல் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற நச்சு உயிரிகளை எதிர்த்து போராடும் வலிமையை அதிகரிக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.தும்மல், சளி மற்றும் கண்களில் நீர் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு மருந்தாக தேனடையை நம் முன்னோர்கள் மென்று சாப்பிட்டு உள்ளனர். இதில் காணப்படும் கொலாஜன்கள் உள்பட பல் வேறு பொருட்கள் தோல் சுருக்கத்தை தடுக்கின்றன. குடல் நுண்ணுயிரிகளை மீண்டும் உருவாக்கி உணவு செரிமானத்தில் பங்களித்து உண்ட உணவின் சத்துகள் தகுந்த முறையில் உடலுக்கு கிடைக்க உதவுகிறது. தைராய்டு உள்பட அனைத்து ஹார்மோன் சுரப்பை நிலைப்படுத்துகிறது. மேலும், கல்லீரலில் நச்சுகளை நீக்கி கல்லீரல் நன்கு செயல்பட உதவுகிறது. எனவே தேனடையை சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது என டாக் டர்கள் தெரிவிக்கின்றனர். வெளிநாடுகளில் கருத்தரித்தல் மருத்துவத்தில் தேனடை முக்கிய ஊட்டச்சத்து உணவாக பரிந்துரைக் கப்படுகிறது.

Jun 17, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பேரிச்சம் பழம்.

பேரிச்சம் பழம், இனிமையான சுவையுடன் கூட, நம் உடலுக்கு மிகவும் அவசியமான பல சத்துக்களை கொண்ட ஒரு அற்புதமான பழம். நார்ச்சத்து: பேரிச்சம் பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது நமது செரிமானத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது. பொட்டாசியம்: இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், இதய ஆரோக்கியத்திற்குவும் பொட்டாசியம் மிகவும் முக்கியம். பேரிச்சம் பழத்தில் இது நிறைந்துள்ளது.இரும்பு: இரத்த சோகையைத் தடுக்க இரும்பு அவசியம். பேரிச்சம் பழத்தில் உள்ள இரும்பு, உடலில் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. கால்சியம்: எலும்புகள் மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம் மிகவும் முக்கியம். பேரிச்சம் பழத்தில் கால்சியம் நிறைந்துள்ளது. வைட்டமின் பி6: நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் பி6 அவசியம். பேரிச்சம் பழத்தில் இது நிறைந்துள்ளது. மெக்னீசியம்: இது தசை மற்றும் நரம்புகளின் சரியான செயல்பாட்டிற்கு அவசியம். பேரிச்சம் பழத்தில் மெக்னீசியம் நிறைந்துள்ளது. ஆன்டிஆக்ஸிடன்ட்கள்: இவை உடலில் ஏற்படும் அழற்சியைக் குறைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகின்றன. பேரிச்சம் பழத்தில் பல வகையான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. பேரிச்சம் பழத்தின் நன்மைகள்: எடை இழப்பு: பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து நீண்ட நேரம் வயிறு நிறைந்திருக்கும் உணர்வைத் தருகிறது, இதனால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கிறது.எலும்பு ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள கால்சியம் மற்றும் பிற தாதுக்கள் எலும்புகளை வலுப்படுத்த உதவுகின்றன. இதய ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. செரிமான ஆரோக்கியம்: பேரிச்சம் பழத்தில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை சீராக வைத்து, மலச்சிக்கலைத் தடுக்க உதவுகிறது.

Jun 16, 2025

ஆப்பிளை விடவும் சத்து நிறைந்த பேரிக்காய்.

பெண்களுக்கு ஏற்படக்கூடிய மாதவிடாய் கோளாறுகளை ஒழுங்குப்படுத்தக்கூடியது. 50 வயதிற்குட்பட்ட பெண்களுக்கு தினசரி தேவையான நார்ச்சத்து அளவில், 24 சதவீதம் பூர்த்தி செய்கிறது. கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவு ம் உள்ள பேரிக்காய், ஆப்பிளை விடவும் சத்து நிறைந்தது.இதனை பெண்களுக்கான வரப்பிரசாதம்.கர்ப்பிணி பெண்கள் இந்த காயை சாப்பிட்டால், கருவில் உள்ள குழந்தையின் எலும்பு வலிமை பெறும். குழந்தை பெற்ற பெண்கள் காலை மாலை 1 பேரிக்காய் வீதம் தினமும் சாப்பிட்டால், தாய்ப்பால் சுரப்பு  அதிகரிக்கும்.ஹீமோகுளோபின் பிரச்சனை மற்றும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருக்கும் பெண்கள், இந்த பேரிக்காயை அதிக அளவில் உட்கொள்ள வேண்டும்.இதில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் கெட்ட கொழுப்பை நீக்குகிறது. செரிமானத்தை மேம்படுத்துவதுடன், மலச்சிக்கல் பிரச்சனையையும் போக்குகிறது. சிறுநீரகத்தில் படிந்துள்ள கற்களை வெளியேற்ற உதவுகிறது.உணவு சாப்பிடுவதற்கு முன் இந்த பழத்தை சாப்பிட்டால், உணவிலுள்ள கொழுப்பு உடலில் தங்குவது தடு க்கப்படுகிறது. 100  கிராம் பேரிக்காயில் 56கலோரிகள் இருப்பதால் உடல் எடையை  குறைப்பதில் உதவுகிறது.பேரிக்காய் கிட்டத்தட்ட 84 சதவீதம் நீர்ச்சத்து நிறைந்தது. இதனால், உடலை நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.உடலுக்கு ஆற்றலை தந்து, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கவும் உதவுகிறது.வளரும் குழந்தைகளுக்கு தேவையான சுண்ணாம்புச்சத்தும், இரும்புச்சத்தும் இந்த பேரிக்காயில் நிறைந்துள்ளது. இரவு சாப்பிட்ட பிறகு குழந்தைகளுக்கு சாப்பிட கொடுக்கலாம்.உடல் சூட்டை குறைக்கும் ஆற்றல் இந்த பேரிக்காய்க்கு உண்டு. பேரிக்காய் சாப்பிட்டால், எலும்புகள், பற்கள் உறுதியாகும். இதில் அதிக நார்ச்சத்து இருப்பதால் டைப் 2 நீரழிவு நோயின் அபாயத்தை குறைக்கிறது.பேரிக்காயை தோல் நீக்காமல் சாப்பிட்டால், புற்றுநோய் மற்றும் இதய நோய்கள் நீங்கும். வாய்ப்புண மற்றும் வயிற்றுப்புண்களை நீக்குகிறது.

Jun 14, 2025

சிறுநீரக கற்களை வெளியேற்றும் ரணகள்ளி

சிறுநீரக கற்களை இயற்கையாக வெளியேற்றவும், மஞ்சள் காமாலையின் தீவிரத்தை படிப்படியாக குறைக்க வும் பயன்படக்கூடிய முக்கியமான மூலிகை ரணகள்ளி செடி. இந்த செடியின் ஒரு இலையை மட்டும் எடுத்து நன்கு சுத்தம் செய்து, காலை வெறும் வயிற்றில் மென்று விழுங்கிவிட வேண்டும். ஒரு நாளைக்கு ஒரு இலைதான் சாப்பிட வேண்டும். அதன்பின் அரை கிளாஸ் வெந்நீர் குடிக்க வேண்டும். தொடர்ந்து 10 நாட்களுக்கு ஒரு இலை வீதம் சாப்பிட்டு வந்தால், சிறு நீரக கல் இயல்பாக சிறு நீரில் வெளியேறி விடும். இதில் டயுரட்டிக் தன்மை அதிகம் இருப்பதால், சிறு நீரக கற்களால் ஏற் படும் வலியை குறைக்கவும் இது உதவும்.சிறுநீர் பாதையில் உள்ள தொற் றுகளையும் குணப்படுத்தும். மஞ்சள் பாதிப்பு நோய் இருந்து சிகிச்சை எடுப்பவர்களும் இந்த இலையை 10 நாட்கள்  சாப்பிடலாம். நோயின்  தீவிரம் குறையும்.சர்க்கரை கோளாறு  இருந்தால், ரத்தத்தில்  சர்க்கரையின் அளவை  10 நாட்களும் கட்டுப்பாட்டில் வைக்கும். 10 நாட்களுக்கு  மேல், மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் சாப்பிட வேண்டாம். மைக்ரேன் உட்பட எந்தவிதமான தலைவலியாக இருந்தாலும், ரணகள்ளி இலைகளை ஒரு கைப்பிடி அளவுக்கு எடுத்து அரைத்து பற்று போடலாம். ஒரு வாரம் இப்படி செய்யும் போது, தலைவலியின் பாதிப்பு படிப்படியாக குறைந்து விடும்.

Jun 10, 2025

தினமும் பாதங்களின் கீழ் தேங்காய் எண்ணெய் தடவினால்….

தூக்கமின்மையால் அவதிப்படுபவர்கள் இரவில் தூங்கும் முன்பு தங்களுடைய கால்களின் பாதங்களை தேங்காய் எண்ணெயால் குறைந்தபட்சம் 2 முதல் 3 நிமிடங்கள் நன்கு மசாஜ் செய்தால் போதும், நல்ல தூக்கம் வரும். உடலில் இருக்கும் சோர்வு பறந்துபோகும்.சாதாரண வயிற்றுப் பிரச்சனைகள் உள்ளவர்கள் கால்களில் தேங்காய் எண்ணெய் பூசி மசாஜ் செய்து வர குணமாகும். உங்களுடைய குழந்தைகளின் பாதங்களில் தினமும் தேங்காய் எண்ணெயால் மசாஜ் செய்தால்  80 வயதிலும் மூட்டு வலி, முதுகு வலி என்று ஒரு வலியும் வராது!அவர்கள் புத்துணர்வாகவும் ஆரோக்கியமாகவும் இருப்பதை கண்கூடாக காண்பீர்கள்.தூங்க செல்லும் முன் இரண்டு நிமிடங்கள் தேங்காய் எண்ணெயால் பாதங்களை மசாஜ் செய்வதால் கால்களில் இருக்கும் வீக்கம், வலி ஆகியவை குணமாகும். இதனை செய்ய ஆரம்பித்த இரண்டு நாட்களில் பலனை அனுபவிப்பீர்கள் தொடர்ந்து செய்வதால் நல்ல தூக்கம், வலியில்லாத கால்கள் வசப்படும்.  சிலருடைய கால்களில் எரிச்சல் உணர்வும் வலியும் காணப்படும் அதற்கும்  இது நல்ல தீர்வு.

Jun 09, 2025

இஞ்சி நன்மைகள்.

பழங்கால மருத்துவத்தின் பகுதியாகவும், அதன் சக்திவாய்ந்த குணப்படுத்தும் பண்புகளுக்காகவும் இஞ்சி பெயர்பெற்றது.வெதுவெதுப்பான இஞ்சி நீரைக் குடிப்பதன் மூலம், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம். சளி மற்றும் காய்ச்சல் இஞ்சி நீர் குணப்படுத்தும் .இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள், சளி மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுக்கு ஒரு சிறந்த தீர்வாக அமைகிறது. இது உடல் தொற்றுக்களை எதிர்த்துப் போராட உதவுகிறது.வெதுவெதுப்பான இஞ்சி நீரைக் குடிப்பது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. இது தலைவலி மற்றும் ஒற்றைத் தலைவவியையும் போக்கலாம்.வெதுவெதுப்பான இஞ்சி தண்ணீரைக் குடிப்பதன் மூலம், இஞ்சியில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டுகளில் வீக்கம் மற்றும் விறைப்புத்தன்மையைக் குறைக்க உதவுகிறது.மாதவிடாயின்போதுபெண்கள்வெதுவெதுப்பானஇஞ்சிநீரைக்குடிப்பதுதசைப்பிடிப்புமற்றும்அசௌகரியத்தைகுறைக்கவும், கருப்பையின் தசைகளை தளர்த்தவும் உதவுகிறது.

Jun 08, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பீர்க்கங்காய்

பீர்க்கங்காவில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்று  நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.இதன் இலை, விதைகள் மற்றும் வேர் என, அனைத்தும்மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வர, நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.மஞ்சள் காமாலை நோய்க்கு, பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில், இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள‎ இடங்களில் பீர்க்கங்காய் இலை சாற்றை பூச,நிவாரணம் கிடைக்கும்.பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது. தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.கண் பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தோல் நோயாளிகள் தவறாமல் இதை சேர்த்துக் கொண்டால், விரைவில் குணமடையலாம்.வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து, வயிற்றில், புண்கள் வராமல் காக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

1 2 ... 15 16 17 18 19 20 21 ... 37 38

AD's



More News