* வேப்பங்கொழுந்து பொடியுடன், அதிமதுர பொடியை சேர்த்து, நீர் விட்டுக் கலந்து உலர வைக்கவும். உலர்ந்ததும் உருண்டைகளாக உருட்டி தினமும், மூன்று வேளை உட்கொள்ளவும். இப்படி செய்துவர, அம்மை நோய் விரைவில் உடலை விட்டு அகலும்*வேப்ப இலையை அரைத்து புண் மற்றும் கட்டி உள்ள இடத்தில் பற்றுப் போட்டால், புண் விரைவில் ஆறும்* வேப்பம் பூவை ரசம் வைத்து, உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால், பித்தம் சம்பந்தப்பட்ட நோய்கள் தீரும்* வேப்பிலையை அரைத்து முகப்பரு உள்ள இடத்தில் பூசினால், முகப்பரு மறைந்து, முகம் பொலிவு பெறும்*வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து,உடல் முழுவதும் தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளித்தால், உடம்பில் உள்ள கொப்புளங்கள் பொரிந்து விடும்* வேப்ப இலையை அரைத்து சாறெடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால், பித்தம் தணியும்*தினமும் காலை, வெறும் வயிற்றில், சிறிது வேப்பங்கொழுந்துடன், ஐந்து மிளகு சேர்த்து சாப்பிட்டு வர, வைரஸ் காய்ச்சலாக இருந்தாலும் குணமாகும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கும் இது நல்ல தீர்வை கொடுக்கும்.வேப்பிலையை அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால், பித்த மயக்கம் தெளியும்வேப்ப இலையுடன் மஞ்சள் சேர்ந்து அரைத்து, கால் வெடிப்பு, நகச்சுற்று போன்றவற்றிற்கு பற்றுப் போட்டால், நல்ல பலன் கிடைக்கும்வேப்ப இலையை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிட்டு வர, தீராத நோய்கள் அனைத்தும் தீரும்.சொரியாசிஸ், புழுவெட்டு நோய் மற்றும் சிரங்கு போன்ற நோய்களை போக்கும் வல்லமை வேப்பிலைக்கு உண்டுவேப்பிலையை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளித்தால், சரும நோய்கள் அனைத்தும் தீரும்.* வேப்பிலையை பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டால், சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்விவசாயத்தில் வேப்பிலை மிகச் சிறந்த கிருமி நாசினியாகவும், இயற்கை உரமாகவும் பயன்படுகிறது.
சிலருக்கு பசியே ஏற்படாது. அவர்கள் உணவில் தினசரி பூண்டு சேர்த்துவர நன்றாக பசியெடுக்கும்.ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் இருப்பவர்கள் ஒரு பூண்டை எடுத்து அதை சுடுநீரில் போட்டு குடித்தால் உடனே நிவாரணம் கிடைக்கும்.தலைமுடி உதிர்வதைத் தடுக்க பூண்டை அரைத்து, அதோடு எலுமிச்சை கலந்து தலையில் மசாஜ் செய்தால் முடி உதிர்வு பிரச்சனை சரியாகும்.பூண்டு, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, உடலில் உள்ள நச்சுப் பொருட்களை நீக்க உதவுகிறது. மேலும், இது பாக்டீரியா மற்றும் அழற்சிக்கு எதிராகப் போராடி, சளி போன்ற சுவாசப் பிரச்சனைகளைக் குறைக்கிறது, அத்துடன் புற்றுநோய் ஆபத்தையும் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இரத்தக் கொழுப்பைக் குறைத்து, இரத்த நாளங்களில் கொழுப்பு படிவதைத் தடுப்பதால், இதயத்தைப் பாதுகாக்கிறது.உயர் இரத்த அழுத்தம், பக்கவாதம் மற்றும் மாரடைப்பு போன்ற நோய்களைத் தடுக்க உதவுகிறது.நோயெதிர்ப்பு சக்தியை பலப்படுத்தி, தொற்றுநோய்களுக்கு எதிராகப் போராட உதவுகிறது.பூண்டில் உள்ள கந்தக சேர்மங்கள், பாக்டீரியா மற்றும் அழற்சியை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளன.ஒவ்வாமை நாசியழற்சி போன்ற அழற்சிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.பூண்டில் உள்ள கந்தக சேர்மங்கள், உடலில் உள்ள நச்சுக்கள் மற்றும் கன உலோகங்களை அகற்ற உதவுகிறது.தினசரி பூண்டு உட்கொள்வது, சளி ஏற்படும் எண்ணிக்கையைக் குறைக்கும்.அதிலுள்ள பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், தொண்டை எரிச்சல் மற்றும் மேல் சுவாசப் பாதை தொற்றுக்களைக் குறைக்க உதவும்.சில ஆய்வுகளின்படி, பூண்டு புற்றுநோய் அபாயத்தைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.பூண்டு, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த உணவுப் பொருளாகும்.பச்சை பூண்டாக சாப்பிடுவது அதன் நன்மைகளை அதிகரிக்கிறது, ஏனெனில் சமைக்கும்போது சில நன்மை பயக்கும் சேர்மங்களின் ஆற்றல் குறையக்கூடும்.
கர்ப்பப்பை கோளாறு குணமாக- தினசரி ஒரு நெல்லிக்காயை உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும் நெல்லி ரத்தத்தை சுத்தமாக்கித் தருகிறது.சுகபிரசவம் ஆக குங்குமப் பூவை வெற்றிலை பாக்குடன் சேர்த்து சாப்பிட்டு வரலாம்.மாதவிலக்கில் ரத்தப் போக்கு நிற்க: இலவங்கப்பட்டையை பொடி செய்து இரண்டு கிராம் அளவு தினமும் சாப்பிட வேண்டும்.மலச்சிக்கல் தீர முட்டைக்கோஸை பொடிபொடியாக அரிந்து, மிளகு, சீரகம், இஞ்சி, பூண்டு, வெங்காயம் சேர்த்து சூப் வைத்து இரவு தூங்கும் முன் ஒரு டம்ளர் குடிக்கவும்.நன்கு பசி எடுக்க இஞ்சி, கிராம்பு, சோம்பு இவைகளை வாயில் போட்டு மென்ற வெந்நீரில் வாய் கொப்பளிக்கவும்.பல் வலி தீர: மிளகுத் தூளுடன் உப்புசேர்த்து பல் துலக்கவும். மிளகுத் தூளுடன் கிராம்புத் தைலம் சேர்த்து பல் ஈறுகளில் தடவலாம்.கெட்ட கொழுப்பு கரைய: பசலைக் கீரையுடன் மிளகு, பூண்டு, வரமிளகாய் சேர்த்து கூட்டு அல்லது குழம்பு வைத்து சாப்பிட்டு வரலாம்.சர்க்கரை சரியாக: வெந்தயம், நாவல் கொட்டை, நெல்லி ஓமம் இவைகளை சேர்த்து பொடியாக்கி வெந்நீரில் கலந்து இரண்டு வேலையும் குடிக்கவும்.காயங்கள் ஆற: வேப்ப மரத்தின் கொழுந்து இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து காயங்கள் அல்லது புண்கள் மீது தடவ வேண்டும்.அரிசியை இரண்டாவது முறை கழுவிய நீரில் முருங்கைக்கீரை, உப்பு, தக்காளி, சின்ன வெங்காயம் சேர்த்து குக்கரில் வைக்கவும். ஒரு விசில்விட்டு இறக்கி, நீரை வடிகட்டி குடித்து வந்தால்,உடம்பில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.பப்பாளி இலைகளை அரைத்து கை,கால் குடைச்சலுக்கு பற்று போட்டு, வெந்நீரில் கழுவி வர வலி குறையும், 2.மாம்பழ துண்டுடன் தேன், குங்குமப்பூ, ஏலப்பொடி, பச்சைக் கற்பூரம், பால் ஆகியவை சேர்த்து சாப்பிட்டு வர உடல் பலம் பெறும்.
தேங்காய் பூ, ருசியாக இருக்கும். இது எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்தது. தேங்காய் பூவில், மிக அதிக ஊட்டச்சத்து இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி இரு மடங்கு அதிகரிக்கும். பருவ காலதொற்று நோய்களிலிருந்து முழுமையான பாதுகாப்பை கொடுக்கும்.மன அழுத்தம் அல்லது வேலைப்பளு அதிகம் இருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டால், முழு எனர்ஜி கிடைக்கும். ஜீரண சக்தி குறைவாக இருந்தால், தேங்காய் பூ சாப்பிடலாம். இதிலுள்ள, மினரல் வைட்டமின், குடலுக்கு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் மலச்சிக்கலை நீக்குகிறது.இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்தத்தில் அதிகப்படியானசர்க்கரையை கட்டுப்படுத்துகிறது. இதயத்தில் படியும் கொழுப்பை, கரையச் செய்கிறது. ரத்தத்தில் சேரும் கெட்ட கொழுப்பை கரைக்கிறது.தைராய்டு பிரச்னையில் பாதிக்கப்பட்டிருப்போர், தேங்காய் பூவை சாப்பிட்டு வர, தைராய்டு சுரப்பை ஒழுங்குபடுத்துகிறது. தைராய்டு பாதிப்பைகுணப்படுத்துகிறது.உடல் எடையை கட்டுக் கோப்பாக வைத்திருக்க உதவுகிறது. இதில், குறைந்த அளவு கலோரி இருப்பதால் உடல் எடை குறைய உதவுகிறது. வளர்சிதை மாற்றத்தை தூண்டுவதால், கொழுப்பு சேராமல் வேகமாக உடல் எடையை குறைக்கும். சிறுநீரக தொற்று நோய்களை ஏற்படுத்தும் நச்சுக்களை வெளியேற்றி, சிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. சுருக்கங்கள், வயதான தோற்றம், சரும தொய்வு போன்றவற்றை நம்மை நெருங்காமல். முதுமையை தடுக்கும் ஆன்டி ஆக்ஸிடென்ட் நிறைந்துள்ளது. சூரியனால் உண்டாகும் சரும பாதிப்புகளையும் தடுக்கிறது.
வாழை இலையில் பாபினால்ஸ் சுரப்பி உள்ளதால் இலையில் சாப்பிடும்போது உணவில் கலந்து புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது.வாழை இலையில் இருக்கும் பச்சையம் நச்சுக்கிருமிகளை அழித்து நமக்கு ஆரோக்கியமான உணவைத் தருகிறது.வயிற்றுப் புண்கள் வாழை இலையில் இருக்கிற குளோரோஃபில் எனும் வேதிப்பொருள். நாம் சாப்பிடும் உணவை நன்கு செரிமானம் செய்ய உதவுகிறது. மேலும், வயிறு மற்றும் குடல் பகுதிகளில் இருக்கிற புண்களையும் ஆற்றுகிறது.உணவுச் சத்துகள் வாழை இலையில் தினமும் உணவைக் கட்டி எடுத்துச் சென்று சாப்பிடுபவர்களுக்கு உணவின் சத்துகள் குறையாமல் முழுவதுமாகக் கிடைக்க வழிவகை செய்கிறது.மனிதர்களின் உடலில் வாதம், பித்தம்,கபம் என்கிற முக்குணங்கள் இருக்கின்றன. இதில் ஏதேனும் ஒன்று சமநிலை மாறும் பட்சத்தில் உடல் நோய்கள் ஏற்படுகின்றன. வாழை இலையில் சாப்பிடுவதால் இந்த 3 குணங்களின் சமநிலை சீராகக் காக்கப்பட்டு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
கருப்பு திராட்சை என்பது ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்த பழம் ஆகும். இது செரிமானத்தை மேம்படுத்துகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, இதய ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது, மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. கருப்பு திராட்சையை நேரடியாக சாப்பிடலாம், ஜூஸ் தயாரிக்கலாம், அல்லது சாலட்களில் சேர்க்கலாம்.கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும்.இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நிறைவாக சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கவும் செய்யும்.கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் ,வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்.மற்ற பழங்களை விடகருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.
வாழைப்பழத்தில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நலம் சேர்க்கும்.ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவும். இதயம் அதிகம் வேலை செய்ய வேண்டியிருக்காது.புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த வாழைப்பழங்கள் உதவும்.அதிலிருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் கலவையானது நிக்கோடின்ஏற்படுத்தும் ஏக்கங்களை குறைக்க உதவும். உடலுக்கு தேவையான ஆற்றலை வாழைப்பழத்தில் இருக்கும் இயற்கையான சர்க்கரை அளிக்கும்.வாழைப்பழத்தில் இருக்கும் வைட்டமின் பி6, செரோடோ னின் மற்றும் டோபமைன் என்ற நல்ல ரசாயனங்களை உற்பத்தி செய்ய மூளையை ஊக்கப்படுத்தும். எனவே பரபரப்பாக இருக்கும்போது வாழைப்பழம் சாப்பிடுவது மனதை அமைதிப்படுத்தவும், கடினமான தருணங்களை நிர்வகிக்கவும்உதவிடும்.வாழைப்பழத்தில் இருக்கும் இரும்புச்சத்து உடலில் அதிக ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவும்.ரத்த சோகையை எதிர்த்து போராடவும் வித்திடும். பகலில் சோர்வாக உணர்ந்தால், உடலில் இரும்புச்சத்து குறைவாக இருக்கலாம்
மாதுளம் பழத்தை விட மாதுளம் பூவில் அதிக அளவிலான நன்மைகள் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ளன. மாதுளம் பூவில் இரும்புச் சத்து, கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின்கள் உள்ளிட்ட ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.தண்ணீரைக் கொதிக்க வைத்து பிறகு மாதுளம் பூவை நன்கு கசக்கி சாறை பிழிந்து இந்த தண்ணீரை வடிகட்டி, அதனுடன் தேன் கலந்து சாப்பிட தொண்டை புண் நீங்கும்.மாதுளம் பூவை அப்படியே சாப்பிட்டால் இரத்த விருத்தி அதிகமாகும். இரத்த சோகை உள்ளவர்கள் இதனை சாப்பிடலாம். மாதுளம் பூ, கசகசா, வேப்பம் பிசின் ஆகியவற்றை அரை ஸ்பூன் அளவு எடுத்து காலை, மாலை என இரு வேளையும் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் சிறுநீருடன் இரத்தம் கலந்து வருவது விரைவில் நிற்கும்.அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அதனால் வாயு சீற்றம், வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டால், மாதுளம் பூவை கஷாயம் செய்து அருந்துவது மிகவும் நல்லது. அருகம்புல் சாறுடன் மாதுளம் பூ சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகள் விரைவில் சரியாகும்.மாதுளம் பூக்களை உலர்த்தி, பின்னர் பொடியாக்கி, நாள் ஒன்றுக்கு மூன்று வேளையும், ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால் இரு நாட்களில் இருமல் குறையும். மாதுளம் பூவை பசும்பாலில் வேக வைத்து, சிறிது தேன் கலந்து அருந்தி வந்தால் நரம்புகள் வலிமை பெறும். குறிப்பாக நரம்புத் தளர்ச்சியினால்அவதிப்படுபவர்களுக்கு இது ஒரு நல்ல அருமருந்து.
தும்பை பூ செடி முழுவதும் மருத்துவ குணம் கொண்டது. நாள்பட்ட மார்பு சளி குறைக்க கூடியது தும்பைப்பூ. தும்பை பூவை சட்னியாக செய்து சாப்பிட்டால் மார்புச்சளி நீங்கும்.தும்பை முழுத்தாவரமும் இனிப்பு, காரச் சுவைகளும், வெப்பத் தன்மையும் கொண்டது. எந்த விதமான விஷ பூச்சிகள், விஷ ஜந்துக்கள் கடித்தாலும் தும்பைப்பூவும், தும்பை இலையும் அதன் விஷத்தை முறித்து விடும்.தும்பைப்பூ மற்றும் தும்பை இலைகளை சம அளவு எடுத்து சுத்தம் செய்து, அம்மியில் வைத்து நசுக்கி சாறு எடுத்து, அந்தச் சாற்றில் கால் அவுன்ஸ் வடிகட்டி குடிக்க வேண்டும். அதே பூவையும், இலையையும் அரைத்து பூச்சி கடித்த இடத்தில் கனமாக பற்று போட வேண்டும். இவ்வாறு செய்தால் விஷம் முறிந்துவிடும்.தும்பைப்பூவை சுமார்50 கிராம் அளவில் சேர்த்து இரண்டு ஆழாக்கு நல்லெண்ணெய்யில் போட்டு தைலமாகக் காய்ச்சி வைத்துக் கொள்ளவும். இநதத் தைலத்தை தலைக்குத் தேய்த்து குளித்து வந்தால் ஒற்றைத் தலைவலி, தலைபாரம், தலை நீரேற்றம், மூக்கடைப்பு ஆகியன நீங்கும்.உலர்ந்த தும்பைப் பூ50 கிராம், சுக்கு, மிளகு, திப்பிலி, கஸ்தூரி மஞ்சள், ஓமம், பூண்டு, சித்தரத்தை ஆகியவை தலா10 கிராம் எடுத்துக் கொள்ள வேண்டும்.அனைத்தையும் நன்றாக இடித்து, கால் லிட்டர் நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொள்ளவும். மூக்கடைப்பு தோன்றும்போது இந்த எண்ணெய்யில் 2 துளிகள் மூக்கில் விட்டால் மூக்கடைப்பு நீங்கும். மூக்கில் சதை வளர்ந்திருந்தாலும் மறையும்.தலைவலி, தலை பாரம் குணமாக சிறிதளவு தும்பைப் பூவைச் சேகரித்து, அதனை பசும்பால் விட்டு அரைத்து ஒரு துணியில் தடவி, அதை நெற்றிப் பொட்டின் மீது வைத்தால் தலைவலி குணமாகும். நெற்றியிலும் துணியைப் போட்டு வைத்து தலைபாரம் இறங்கும்.
தினமும் ஒரு செவ்வாழை சாப்பிடுவதால் ஏராளமான நன்மைகள் இருக்கும் .செவ்வாழைப்பழத்தில் மற்ற பழங்களை விட குறைவான கலோரி அளவு கொண்டுள்ளது. இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால், உடல் எடையை குறைக்க உதவுகிறது. செவ்வாழைப்பழத்தில் அதிக அளவில் பொட்டாசியம் உள்ளது. இது சிறுநீரகத்தில் கற்கள் உருவாகாமல் தடுக்கும். செவ்வாழைப் பழம் சருமத்தில் உள்ள குருதி சுற்று இயக்கத்தை மேம்படுத்துகிறது. இதில் 75% நீர் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடென்டுகள் உள்ளதால், சருமத்திற்கு தேவையான ஈரப்பதம் கிடைக்க உதவுகிறது. செவ்வாழைப் பழத்தில் உள்ள வைட்டமின் B6, ரத்தத்தின் தரத்தை மேம்படுத்தி ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. செவ்வாழையில் இரும்புச் சத்து சுண்ணாம்புச்சத்து மற்றும் உயிர்ச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இதனை குழந்தைபேறு வேண்டும் தம்பதியினர் அனுதினமும் உண்டு வந்தால் உடலில் உயிர் அணுக்கள் போதுமான அளவில் உற்பத்தி ஆகி கருத்தரிக்கும் வாய்ப்பினை உருவாக்கும். செவ்வாழையில் அதிக அளவு நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் எ, புரதம், ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், போன்ற பலவித சத்துக்கள் நிறைந்துள்ளது.கண் பார்வையால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும். கண் பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழை பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.பல் வலி, பல்லசைவு போன்ற பல வகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். நெஞ்செரிச்சலால் கஷ்டப்படுபவர்கள் தினமும் செவ்வாழையை உட்கொண்டு வந்தால், நல்ல நிவாரணம் கிடைக்கும்.தினமும் செவ்வாழைப் பழம் சாப்பிடுபவர்களுக்கு அஜீரண கோளாறு ஏற்படாது. மலச்சிக்கல் இருப்பவர்கள், மூல நோய் குறைபாடு உள்ளவர்கள் தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வந்தால் அந்த குறைபாடுகளில் இருந்து விடுபடலாம்.செவ்வாழையில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது சிறுநீரக கற்கள் உருவாவது, இதய நோய் மற்றும் புற்றுநோய் தாக்குதலைத் தடுக்கும்.தலைமுடியில் உள்ள பொடுகு மற்றும் வறட்சி குறைய, செவ்வாழைப் பழத்தை தேங்காய், எள் அல்லது பாதாம் எண்ணெய்யுடன் கலந்து தலையில் தேய்க்கலாம்.