சீஸனின் முதல் மாம்பழத்தைக் கையிலேந்தும்போது கிடைக்கும் சந்தோஷம் அளவில்லாதது. அந்த வருடத்தின் சீஸன் முடியும்போது ஏற்படும் வருத்தமும் விவரிக்க முடியாதது வருடம் முழுவதும் கிடைத்தால் என்னவென்று ஏங்க வைக்கும் அருஞ்சுவை கொண்டது மாம்பழம்..பலருக்கும் நம் நாட்டின் தேசியப்பறவையில், தேசிய மலர் தாமரை என்பது போன்ற தகவல்கள் தெரிந்திருக்கும். மாம்பழம் நம்முடைய தேசியக்கனி என்பது எல்லோருக்கும் தெரியாது. அதேபோல் மாம்பழத்துக்காகவே ஜூலை 22ம் தேதி தேசியமாம்பழதினம் கொண்டாடப்படுகிறது என்பதும் தெரிந்திருக்கும் வாய்ப்புக் குறைவு.இந்தியாவில் நூற்றுக்கணக்கான வகை மாம்பழங்கள் விளைவிக்கப்படுகின்றன. மல்கோவா, கிளி மூக்கு,நடுசாலை, பங்கனப்பள்ளி, அல்போன்சா, மும்பை அல்போன்சா மாம்பழங்களுக்கும், ஐதராபாத் பங்கனப்பள்ளி மாம்பழங்களுக்கும் பெயர் பெற்றது. தமிழ்நாடு இமாம்பசந்த், மல்கோவா மற்றும் செந்தூரா மாம்பழங்களுக்குப் பெயர் பெற்றது.மாம்பழத்தில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி, கொலாஜன் புரதத்தை உடலில் சுரக்கவும் உதவி புரிகிறது. ரத்தக் குழாய்களையும் உடலில் உள்ள இணைப்புத்திசுவையும் காக்க கொலாஜென் உதவுவதால் முதுமைத் தோற்றம் தள்ளிப்போகும். இளமை இன்னும் சிறிது காலம் நீடிக்கும்..மாம்பழம் வாங்கும்போது தோல் பளபளவென்று இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம். பளபளவென மினுக்கும் மாம்பழம் செயற்கை முறையில் ரசாயனத்தால் கனிய வைக்கப்பட்டதாக இருக்கலாம். கருப்புப் புள்ளிகள் உள்ள பழங்கள் இயற்கையாகப் பழுத்தவை. சுவையும் அதிகமாக இருக்கும்.தேங்காயைத் தட்டிப் பார்த்து வாங்குவதுபோல, மாம்பழங்களைத் தட்டிப் பார்த்துவாங்கலாம். தட்டும்போது சத்தம் சற்று குறைந்திருந்தாலோ, சத்தம் கேட்காமல் இருந்தாலோ அழுகியது என்றோ அல்லது அதிகம் கனிந்தது என்றோகண்டுகொள்ளலாம்.மாம்பழத்தால் பாதிப்பு ஏதும் வருமோ என்ற அச்சம் இருந்தால் தண்ணீரில் ஊறவைத்துக் கழுவிய பிறகு பயன்படுத்தலாம். இதன்மூலம் பழத்தின் மேல் இருக்கும் ரசாயனம் மற்றும் பூச்சி மருந்து போன்றவை நீங்கிவிடும்.மாம்பழங்களைத் தோல் சீவி, வெட்டிச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் குறையும். வயிற்றில் அசௌகரியம் உண்டாகாமலும் இருக்கும். வயிற்று வலியும் ஏற்படாது. மாம்பழத்தில் புழுக்கள் இருக்கிறதா என்றும் கண்டறியவும் இந்த முறை உதவும்.
பாகற்காய் கசப்பு சுவைமிக்கது. இது உடல் நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது. இதற்கு மருத்துவப் பயன்களும் உண்டு.பாகல் இலையின் சாறு ஓர் அவுன்சில் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத் தூளைக் கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நின்று விடும்.பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் போதும் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. பாகல் இலைச் சாற்றில் காசிக் கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாகத் தடவி வந்தால் ரத்தம் சுத்தம் செய்யப் பெற்றுச் சிரங்கு உதிர்ந்து விடும். பாகல்வேரை சந்தனம் போல் அரைத்து நல்லெண்ணெயில் குழைத்து ஜனனேந்திரியத்தின் உள்ளும், புறமும் தடவி வந்தால் பெண்களுக்குக் கருப்பை நோய் தீரும். பிரசவத்துக்கு பின் வரும் மண்குத்தி நோய்க்கு இது கைகண்ட மருந்தாகும்.இரண்டு அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றிலே ஒரு அளவு வெல்லத்தைக் கரைத்துச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப் பூச்சிகள் சீக்கிரத்தில் வெளியேறிவிடும்.நீரழிவுக்குக் குணம் தெரியும் வரை ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றில் உளுந்தளவு பெருங்காயப் பொடியைக் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.ஓர் அவுன்ஸ் பாகல் இலைச் சாற்றுடன் சமபாகம் ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து மூன்று நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை மட்டுப்படுத்தும்.பாகற்காய் சாப்பிட்டால் உடல் எடை குறைக்க, அழர்ச்சி நோய் சரியாக, குடல் பூச்சிகள் வெளியேற, இன்சுலின் சுரப்பை அதிகரிக்கச் செய்ய, உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும்.பாகற்காய் ஜூஸ் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.பாகற்காயாகவோ அல்லது ஜூஸ் போட்டு குடித்தால் சர்க்கரை நோய் குணமாகும்.
ஹார்மோன் குறைவாக சுரப்பதே'ஹைப்போ தைராய்டிசம்' எனப்படும். தைராய்டுஉடலின் வளர்சிதை மாற்றத்துக்கு உதவும்.கழுத்தில் உள்ள பட்டாம்பூச்சி வடிவ தைராய்டு சுரப்பியில் உருவாகும். இந்த ஹார்மோன் குறைபாடு, இந்தியாவில் பத்து பேரில் ஒருவருக்கு உள்ளது. இது பெண்களிடையே அதிகம் காணப்படுகிறது.அயோடின் கலந்த உப்பு, மீன், இறால் போன்ற கடல் உணவுகள்(ஒமேகா-3 சத்து), செலினியம் நிறைந்த கோழி, காளான், பூண்டு, பால் பொருட்கள், முட்டை, முழு தானியங்கள்(பழுப்பு அரிசி, ஓட்ஸ்), மெலிந்த புரதங்கள், காய்கறிகள், பெக்டின் நிறைந்த பெர்ரி, ஆப்பிள், ஆரஞ்சு போன்ற பழங்கள் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்வது தைராய்டு செயல்பாட்டை மேம்படுத்த உதவும்.தைராய்டு குறைபாடு உள்ளவர்கள் முட்டைக்கோஸ், காலிஃபிளவர் போன்ற காய்கறிகள், சோயா பொருட்கள், பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள், எண்ணெயில் பொரித்த உணவுகள், துரித உணவுகள், குளிர்பானங்கள், காபி, மதுபானங்கள் மற்றும் செயற்கை இனிப்பூட்டிகளை தவிர்க்க வேண்டும். இவற்றில் உள்ள சில கூறுகள் தைராய்டு ஹார்மோன் உற்பத்தியைப் பாதிக்கலாம்.
குங்குமப்பூ, ‘சிவப்பு தங்கம்’ என அறியப்படும், உலகிலேயே மிகுந்த மதிப்பைக் கொண்ட ஒரு மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் பூக்களில் இருந்து பெறப்படுகிறது மற்றும் அதன் தனிப்பட்ட ஆரஞ்சு-சிவப்பு நிறத்தால் பிரபலமானது.குங்குமப்பூவில் இரும்பு சத்துஅதிகமாக உள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.குங்குமப்பூ, கர்ப்பிணிகளுக்கு உணவு மற்றும் மனநிலையை மேம்படுத்த உதவுகிறது. அது, திடமான மன நிலையை ஏற்படுத்தும். குங்குமப்பூ, உடலுக்கு குளிர்ச்சி தரும் மேலும் உதடுகளின் வறட்சி மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை அகற்ற உதவுகிறது. ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி மனஅழுத்தத்தை குறைக்கும் தன்மைகள் கொண்டது. குங்குமப்பூ, அதிமதுரம் போன்ற பொருட்கள் குழந்தையின் வளர்ச்சிக்கு உதவுகின்றன. சிறிது குங்குமப்பூவை சூடான பாலில் ஊறவைத்து குடிக்கலாம்.குங்குமப்பூவை பொடி செய்து பயன்படுத்தலாம்.குங்குமப்பூ அதிகமாக எடுத்துக் கொள்வதால் தலைச்சுழலல், வயிற்றுப் போக்கு போன்ற விளைவுகளை உண்டாக்கலாம். மருத்துவரிடம் கலந்து ஆலோசிக்கவும்.
நன்னாரி வேர் ஏராளமான மருத்துவ குணங்களைகொண்டது .தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும்.அன்றாடம் நாம் பயன்படுத்த வேண்டிய மூலிகைகளில் இது மிகவும்முக்கியமான ஒன்று.கொடி வகையைச் சேர்ந்த நன்னாரியின் வேர், சித்த, ஆயுர்வேத, மற்றும் ஹோமியோபதி மருத்துவத்தில் பரவலாக பயன்படுத்தப்படுகிறது. நன்னாரி வேரை நீரில் போட்டுவைத்து, அந்த நீரை குடித்து வந்தால், உடல் வெப்பம் சமநிலைப்படும். இது குடிப்பதற்கு இதமாக இருப்பதுடன், சிறுநீர் போக்கை அதிகரித்து, இரத்தத்தில் கலந்துள்ள நச்சுக்களை வெளியேற்றி, இரத்தத்தைத் தூய்மைப்படுத்தவும் உதவுகிறது. கோடைக்காலம் வந்துவிட்டால் ஏற்படும் நாவறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக சிறந்தது. இது உடலின் உள் வெப்பத்தைத் தணித்து, உடலுக்குக் குளிர்ச்சியைத் தருகிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரைக் கட்டி போட்டுவிட்டு, அந்த நீரைக் குடித்து வந்தால் உடல் நன்கு குளிர்ச்சி பெறும்.
குடமிளகாய் உணவில் சேர்த்து கொள்வதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. குடமிளகாய் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, பீட்டா-கரோட்டின் மற்றும் ஆந்தியக்சிடென்ட் போன்ற சத்துக்கள் நிறைந்தது. இது நோயெதிர்ப்பு திறனை அதிகரிக்க உதவுகிறது. இதில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் லூட்டின் போன்ற பியானோகெமிக்கல்கள் கண்கள் மற்றும் பார்வையின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.குடமிளகாயில் தண்ணீரின் அளவு அதிகமாக உள்ளதால், உடலில் நீர்சத்து இல்லாமையை தவிர்க்கிறது. இதனுடன், கழிவுகளை வெளியேற்றவும் உதவும். குடமிளகாயில் காலோரிகள் குறைவாக இருப்பதால், இதை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் எடையை கட்டுப்படுத்த உதவுகிறது. குடமிளகாயில் இருக்கும் ஆந்தியக்சிடென்ட்கள் மற்றும் இழை அதிகமுள்ளதால், இதை உணவில் சேர்ப்பது தாமதமாக ஜீரணமாகும், மற்றும் கோலஸ்டிரால் அளவை குறைக்கும். குடமிளகாயில் உள்ள சில வேதிப்பொருட்கள் மூட்டுவலியை குறைக்கவும், உடல் அழற்சிகளை தணிக்கவும் உதவுகின்றன.
ஆப்பிள், பீட்ரூட் ,கேரட் ஜூஸ் செய்து நாட்டுசர்க்கரை சேர்த்துச் பருகலாம் .முருங்கை கீரை சூப் ,முருங்கை கீரை பொரியல் உண்ணலாம்.தினமும் ஏதாவது ஒரு வகையான கீரை வகை சேர்த்து கொள்ளுங்கள்.தினமும் கருப்பு திராட்சை இரண்டுm இரவே ஊற வைத்து மறுநாள் அதை சாப்பிட்டு ஊற வைத்த தண்ணீர் அருந்தலாம்.அசைவம் என்றால் வாரம் ஒரு முறையோ, இரண்டு முறையோ, ஆட்டின் சுவரொட்டி, ஈரல் ,உணவில் சேர்க்கலாம்.அத்திப்பழம், மாதுளை பழங்கள் உண்ணலாம்.கருப்பட்டி காபி பருகலாம். சுத்தமான தேனில் பேரிச்சை பழம் ஊறவைத்து தினமும் 2 சாப்பிடலாம்.பீட்ரூட் பொரியல், பீட்ரூட் சாறு, பீட்ரூட் பச்சடி என பீட்ரூட் அதிக அளவில் சேர்த்து கொள்ளுங்கள். சீனி தவிர்ப்பது நல்லது. அதிகஅளவு புளிப்பு சுவை சேர்ப்பது வேண்டாம்.
பலரும் உடல் எடையை குறைக்க பழங்களை தவிர்ப்பது வழக்கமாகி விட்டது. ஆனால், இது தவறான நடைமுறை என மருத்துவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக மாம்பழம் சாப்பிட்டால் அது கூட எடையை குறைக்க உதவும்!"மாம்பழம் ருசிகரமானது. ஆனால், அதை அதிகமாகச் சாப்பிட்டால் கலோரிகள் கூடும். எனவே, ஒரு நாளுக்கு ஒரு மாம்பழம் சாப்பிடலாம். மாம்பழத்தில் நார்ச்சத்து அதிகம். இது நீண்ட நேரம் பசியில்லாமல் வைத்திருக்க உதவுகிறது. இதனால் இடைச்சிறு உணவுகள் குறையும்.மாம்பழம் இனிப்பானது என்றாலும், அதில் உள்ள நார்ச்சத்து, சர்க்கரையை சீராக வெளியிடும். பழமாக சாப்பிடுவதுதான் சிறந்தது, ஜூஸ் வேண்டாம்.மாம்பழம் வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது. குறைந்த கலோரி கொண்டதால், உடலை சோர்வில்லாமல் வைத்து எடையை கட்டுப்படுத்த உதவும்.உடல் எடையை குறைக்க ஆசைப்படுபவர்கள், உணவிலிருந்து பழங்களை தவிர்க்க வேண்டாம்.மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் அளவோடு உண்டால் தான் நலம்! பருவத்திற்கு ஏற்ற பழங்களை சீராக சேர்த்துக்கொள்வதே சீரான ஆரோக்கியத்திற்கு வழி.
மணத்தக்காளி கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் வயிற்றுப் புண் மற்றும் அல்சர் விரைவில் சரியாகும்.மணத்தக்காளி கீரை வயிறு மற்றும் வாய் அல்சருக்கு மிகவும் நல்லது.எனவே அந்த கீரையை சூப்செய்தோ அல்லது பொரியல் செய்தோ வாரத்திற்கு3 முறை உட்கொண்டு வர விரைவில் அல்சர் சரியாகும்.அல்சர் இருப்பவர்கள், தினமும் சாதத்தில் தேங்காய் பால் சேர்த்து உட்கொண்டு வர, விரைவில் வயிற்றில்உள்ள புண் குணமாகும். மேலும் கொப்பரை தேங்காயை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர அல்சர் காணாமல் போகும்.பச்சை வாழைப்பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், குடல்களில் பழுதுபட்ட மெல்லிய சவ்வுத்தோல்களை விரைவில் வளரச் செய்து புண்ணை ஆற்றும்.தினமும் காலையில் வீட்டில் தயாரித்த ஆப்பிள் ஜூஸ் குடித்து வந்தால் அல்சரால் ஏற்படும் கடுமையான வலியைக் சரியாகும்.பாகற்காயை விட பாகற்பழம் மிகவும் சிறந்தது. இதனை சமைத்து உண்ண வயிற்றில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் குடல் பலம் பெறுகிறது. மலத்தை இளக்கி வெளிப்படுத்துவதுடன் பித்தத்தை தணிக்கிறது.வேப்பிலையை தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சிறிது உட்கொண்டு வர, அல்சர் மட்டுமின்றி, வயிற்று பிரச்சனைகளும் நீங்கிவிடும்.தண்டுக் கீரையில் இரும்புச் சத்தும், சுண்ணாம்புச் சத்தும் மிகுந்துள்ளதால் உடல் குளிர்ச்சியடைந்து மூலநோய் மற்றும் குடல்புண் ஆற்றி விடும்.அல்சர் உள்ளவர்கள், தினமும் முட்டைக்கோஸை உணவில் சேர்த்து வந்தால், விரைவில் அல்சரை குணமாக்கிவிடும்.புழுங்கள் அரிசி சோற்றின் வடிகஞ்சியை வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.அல்சருக்கு அகத்திக்கீரை நல்லது. தினமும் ஒரு கப் அகத்திக்கீரையை சமைத்து உட்கொண்டு வர அல்சர்சீக்கிரம் நீங்கிவிடும். அகத்திக்கீரை சூப் செய்தும் குடிக்கலாம்.துளசி இலை சாற்றில் மாசிக்காயை, வயிற்றுப் புண் உள்ளவர்கள் குடித்தால் நல்ல குணம் பெறலாம்.வயிற்று அல்சருக்கு மற்றொரு சிறப்பான தீர்வு நெல்லிக்காய். அதிலும் நெல்லிக்காய் ஜூஸில் தயிர் சேர்த்துகலந்து குடித்து வர நல்ல நிவாரணம் கிடைக்கும்.அத்தி மரப்பட்டை சாற்றுடன் சம அளவு பசும்பால் சேர்த்து சிறிதளவு கற்கண்டும் கூட்டி100மிலி அளவுகுடித்துவர வயிற்றுப் புண் மற்றும் வாய் புண் குணமாகும்.அத்தி இலையுடன் சம அளவு வேப்பிலை சேர்த்து தண்ணீர் விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வரலாம்.சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சைஅளவு எடுத்துப் பாலில் கலந்து பருகி வரலாம்.
கோடைக் காலத்தில் அதிகம் கிடைக்கும் ஒரு சத்தான பழம் முந்திரி பழம் . இது சிறிது இனிப்பும், துவர்ப்பும் கலந்த தனித்துவமான சுவையைக் கொண்டது. மென்மையான தோற்றம் கொண்ட இந்த பழம் உடலுக்கு பல வகையான ஊட்டச்சத்துகளை வழங்குகிறது.முந்திரி பழத்தில் வைட்டமின் C, இரும்புச் சத்து, பொட்டாசியம், நார்ச்சத்து, மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் போன்ற பல நன்மைகள் அடங்கியுள்ளன. இதில் அடங்கிய ஆன்டி-ஆக்ஸிடன்ட் குணம் செல் அழிவைத் தடுக்கும். அதிக நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து கொண்ட இந்த பழம், செரிமானத்திற்கு உகந்ததாகவும், சர்க்கரை அளவை கட்டுப்படுத்துவதிலும் உதவியாக இருக்கிறது. முந்திரி பழத்தை அடிக்கடி உணவில் சேர்த்தால் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். மேலும், எலும்புகளின் வலிமை உயரும், இரத்த சோகை குறையும், உடலின் வெப்பம் தணியும். இதில் உள்ள பொட்டாசியம், இரத்த அழுத்தத்தை சீராக்குவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.கோடையில் உடலுக்கு தேவைப்படும் ஈரப்பதத்தையும், குளிர்ச்சியையும் வழங்கும்.