கருப்பு திராட்சை என்றவுடன், அனைவருக்கும் நினைவுக்கு வருவது, புளிப்பு சுவை தான். திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.கருப்பு திராட்சை விதையில், புரோஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக்கொதிப்பு போன்ற பிரச்னைகளை நீக்குகிறது.மூல நோயால் ஏற்படும் ரத்தப் போக்கை கட்டுப்படுத்த பெரிதும் உதவுகிறது.ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது.சிறுநீரக செயல்பாட்டிலுள்ள குறைகளை சரி செய்கிறது. மேலும், மாலைக்கண் நோய் மற்றும் கண்புரை போன்ற கண் தொடர்பான பிரச்னைகள் வராமல் பாதுகாக்கிறது.பெண்களின் மார்பக புற்றுநோய், கருப்பை கோளாறுகள் மற்றும் ஆண்களுக்கு ஏற்படும். புரோஸ்டேட் புற்றுநோய் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கிறது.நம் உடலிலுள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும்,புற்றுநோய் செல்களை அழித்து, புதிய ஆரோக்கியமான செல்கள் அதிக அளவில் உற்பத்தி செய்ய உதவுகிறது.எனவே, திராட்சைப் பழத்துடன் விதைகளை சேர்த்து உண்பது, நல்ல பலனை தரும்.உடல் வளர்ச்சியில் குறைபாடு, உடல் பலகீனம், தோல் வியாதி, மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் ஆகிய பிரச்னை உள்ளோர், திராட்சை விதை தொடர்ந்து சாப்பிட்டு வர, விரைவில் நிவாரணம் கிடைக்கும். நினைவாற்றலை பெருக்கவும் இது பயன்படுகிறது.
முருங்கைக்காய் ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணைய வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.இது உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்பு சம்பந்தமான பிரச்சனைகள் சரியாகும்.மலச்சிக்கல்,வயிற்றுப் புண், கண் சம்பந்தமான நோய்களுக்கு பயன்படுகிறது.இதை சாப்பிட்டால் சிறுநீரகம் பலப்படும்,தாது உற்பத்தி அதிகரிக்கும்.இதில் ஜிங்க சத்து அதிகம் உள்ளதால் மலட்டுத்தன்மை விந்து வேகமாக வெளியேறுதல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கிறது.சர்க்கரையை கட்டுப்பாட்டில் வைக்க மாத்திரை சாப்பிடுபவர்கள் முருங்கைக்காய்உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ளாமல் இருப்பது நல்லது.இதில் உள்ள அதிகளவு நார்ச்சத்து உடலில் சேரும்போது வயிற்றுப்போக்கு மலசிக்கல், குடல் பிரச்சினைகள், வாயுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் ஏறபட வாய்ப்புள்ளது.முதியவர்கள் மூட்டு நோய் உள்ளவர்கள் இதயம் சம்பந்தப்பட்ட நோயாளிகள் இதனை குறைந்த அளவு உட்கொள்ள வேண்டும்.
கரும்புச்சாறு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.240 மில்லி கரும்புச் சாறில் 250 கலோரிகள், 50 கிராம் கார்போஹைட்ரேட், இரும்பு, மக்னீசியம், கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீசு, வைட்டமின்கள் கரும்பின் மருத்துவ குணங்கள் உள்பட பல நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.கல்லீரலை வலுவூட்டி நன்கு செயல்பட வைப்பதற்கு கரும்பில் உள்ள சத்துகள் உதவுகின்றது.சோர்வாக இருக்கும்போது கரும்புச்சாறு குடித்தால் கரும்பில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடியாக உடலால் உறிஞ்சப்பட்டு புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும். கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியமானது செரிமான திறனை மேம்படுத்துகிறது. மேலும், அது குறைந்த கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது ரத்த குளுக் கோஸ் அதிகரிப்பதை தடுக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது...கரும்புச்சாறில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை அதிகரிக்கச்செய்யும். கர்ப்பிணிகள் கரும்புச்சாறு உட்கொள்வதால் அதில் உள்ள இரும்பு மற்றும் போலிக் அமிலம், சிசுவின் சரியான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக மருத்துவ ஆய்வுகள்கூறுகின்றன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில், கரும்புச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.பொங்கல் சமயத்தில் கிடைக்கும் கரும்புகளை கடித்து சாப்பிட்டாலும் சரி, ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் இந்த நன்மைகளை பெறலாம் .
மூச்சுப் பிரச்சினைகள், ஆஸ்துமா, சளித் தொல்லை நுரையீரல் போன்ற பல பிரச்சனைக்கு தீர்வாகும் தேனில் ஊற வைத்த சின்ன வெங்காயம்.இரவு நேரங்களில் இதை சாப்பிட்டால் காலையில் மலத்தின் மூலம் சளி வெளியேறும்.வெங்காய சாறை சம அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர நெஞ்சு சளி குணமாகும்.தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் கலந்துள்ள கெட்ட கொழுப்புகளை வெளியேற்ற உதவியாக இருக்கும்.தினமும் காலையில் சாப்பிட்டுவர உடல் எடை குறையும், இடுப்பை சுற்றியுள்ள சதை குறையும்.தேன் கலந்த சின்ன வெங்காயம் செய்வது ஒரு பெரிய கண்ணாடி பாத்திரத்தை எடுத்து அதில் சின்ன வெங்காயத்தை லேசாக கீறி அதில் போட்டுக்கொள்ளவும். பின் அதில் தேனை ஊற்றி ஊறவிடவும். இரண்டு நாட்கள் கை படாமல் ஊறவிட்ட பிறகு நீங்கள் தினமும் சாப்பிடலாம்.
கத்திரிக்காயில் வைட்டமின் ஏ, பி,சி,கால்சியம், மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு சத்து மற்றும் நார்ச்சத்து என பல்வேறு ஊட்டச்சத்துக்கள் உள்ளது.அரிப்பு, சரும அலர்ஜி, கண் எரிச்சல் மற்றும் கண்களில் ஏதேனும் பிரச்சனை உள்ளவர்கள் சருமம் சார்ந்த பிரச்சனை உள்ளவர்கள் சுத்தரிக்காயை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.கத்தரிக்காயில் உள்ள ஆக்சலேட்டுகள் சிறுநீரக கல் பிரச்சனையை மோசமாக்கும் என்பதால் சிறுநீரகம் தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நல்லது.கத்திரிக்காயில் இயல்பாகவே கருச்சிதைவை ஏற்படுத்தும் பண்பு உள்ளதால் கருவுற்ற பெண்கள் மருத்துவரின் ஆலோசனையின் படி சாப்பிடுவது நல்லது.கத்தரிக்காயை அதிகம் சாப்பிடுவதால் செரிமானக் கோளாறு, நெஞ்சு எரிச்சல் வாயு பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் அளவாகசாப்பிடுவது நல்லதுசர்க்கரை நோய், நுரையீரல் பிரச்சனை மற்றும் ஞாபக சக்திகுறைவாக உள்ளவர்கள் கத்தரிக்காயை உணவில் தாராளமாகஎடுத்துக்கொள்ளலாம்.
கேழ்வரகில் சமைத்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். எள்ளில் செய்த உணவை சாப்பிட வேண்டும்.பப்பாளி, பீன்ஸ், பாதாம் ,முந்திரி,நட்ஸ். பிரண்டை ஆகியவற்றை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் உறுதியாக. வலுவாக இருக்கும்.கீரைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள எலும்புகள் பலமாக இருக்கும்.வாழைத்தண்டு, முள்ளங்கி, சுரைக்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய் போன்ற நீர்க் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொண்டால் சிறுநீரக கற்கள் உருவாகாமல் தடுக்கலாம். ஆஸ்துமா, மார்பு சளி போன்றவை நீங்க, மலட்டுத்தன்மையை அகற்ற முருங்கை கீரை சூப் நல்லது.மஞ்சளை அனலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரித்து, பின்பு அந்த சாம்பலை தேனில் கலந்து சாப்பிட குடல் புண் குணமாகும்.
குளிர்காலம் துவங்கும் போது, பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, ஜலதோஷம் மற்றும் காய்ச்சல் வைரஸ்களால் நாம் அதிகம் பாதிக்கப்படுகிறோம். பேரீச்சம் பழத்தில் உள்ள ஆன்டி ஆக்ஸிடெண்ட்கள் மற்றும் வைட்டமின்கள், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில், முக்கிய பங்கு வகிக்கின்றன என்கின்றனர், நிபுணர்கள்.பேரீச்சம் பழங்களை சாப்பிடுவதால். உடலின் தொற்று நோய்களை எதிர்த்துப் போராடும் திறன் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்,ஆற்றலையும் மேம்படுத்துகிறது.ஜலதோகஷத்தை எதிர்த்து போராடுவதற்கான சிறந்த வழிகளில் ஒன்று, பேரிச்சம் பழம். தண்ணீர் இரண்டு அல்லது மூன்று பேரீச்சம்பழம், ஒரு சிட்டிகை கருப்பு மிளகு மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். இந்நீரை படுக்கும் முன் குடித்து வந்தால் சளி குறையும். குளிர் காலத்தில், நம் உடலுக்கு அதிக ஆற்றல் தேவை. பேரீச்சம் பழத்தில் குளுகோஸ், ப்ரக்டோஸ் சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் நிறைய உள்ளது. இது, ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து, உடலுக்கு ஆற்றலை வழங்கும்.போதிய நார்ச்சத்துஇல்லாதஉணவுகளைஉண்ணும்போதுஏற்படும்மலச்சிக்கலைதீர்க்கபேரீச்சம்பழம்உதவுகிறது.பொதுவாக, குளிர் காலத்தில்இதயம் சீராக இயங்க, அதிகமான ஆற்றல் தேவை. பேரிச்சம் பழத்தில் பொட்டாசியம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. அவை, இதயத்தின் செயல்பாட்டுக்கு மிகவும் உதவுகிறது.அதேபோன்று, குளிர் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக, மலச்சிக்கல் ஏற்படும். பேரீச்சம் பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது, நம் உடல் இயக்கத்திற்கான நீர்ச்சத்து தேவையைபூர்த்தி செய்கிறது. குளிர் காலத்தில் சீரான ரத்த ஓட்டம் தேவை. அதற்கு, இரும்புச்சத்து அவசியம்.ஒவ்வொரு பேரீச்சம் பழத்திலும், 2 மில்லி கிராம் இரும்புச்சத்து உள்ளது.ரத்த சோகை பிரச்னை உள்ளவர்கள், மூன்று அல்லது நான்கு பேரீச்சம்பழங்களை நீரில் ஊற வைத்து, அதை மறுநாள் காலை சாப்பிடுவதால், ரத்த சோகை குணமாகும். பேரீச்சம் பழத்தில் மெக்னீசியம் மற்றும் டிரிப்டோபான் என்ற அமினோ அமில மூலக்கூறும் உள்ளது.இவை, குளிர் காலத்தில் நல்ல துாக்கத்திற்கு உதவும். தூங்குவதற்கு ஒன்று அல்லது இரண்டு மணி நேரத்திற்கு முன், பேரீச்சம் பழங்களை சாப்பிட வேண்டும். அதைதேனில் ஊற வைத்த பேரீச்சம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், மன அழுத்தம், பதட்டம், உடல் சோர்வு உள்ளிட்டவை நீங்கி, உடல் ஆரோக்கியமாக இருக்கும். மேலும், ஞாபக மறதி, ரத்த அழுத்தம், நரம்பியல் பிரச்னைகள் மற்றும் சரும பிரச்னைகளை சீர்செய்யும். முதியோர் நலன் காக்கும். வைட்டமின் பி 12,பேரிச்சம் பழத்தில் உள்ளது.
வேகவைத்த முட்டைகள் கலோரிகள் அல்லது ஆரோக்கியமற்ற கொழுப்பைச் சேர்க்கக்கூடிய பொருட்கள் இல்லாமல் எளிதான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவை. குறைந்த தயாரிப்பு நேரத்துடன் எடுக்கப்பட்ட புரதச்சத்து நிறைந்த விரைவான உணவுக்கு வேகவைத்த முட்டை மற்றும் ஆம்லெட்டுகள் அவற்றின் தனிப்பட்ட ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளன. வேகவைத்த முட்டைகள் குறைந்த கலோரி எண்ணிக்கையுடன் மிகவும் எளிமையானவை, அதே நேரத்தில் ஆம்லெட்டுகள் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன மற்றும் ஆரோக்கியமான பொருட்களால் நிரப்பப்பட்டால் அதிக ஊட்டச்சத்து உட்கொள்ளலை வழங்குகின்றன.ஆம்லெட்டுகள் காய்கறிகள் போன்ற கூடுதல் சேர்க்கைகள் மற்றும் அதிக அளவு சீஸ் அல்லது கெடுதலான எண்ணெய்கள் இல்லாமல் தயாரிக்கப்படும் போது இன்னும் கூடுதலான ஊட்டச்சத்து மதிப்பைச் சேர்க்க இடமளிக்கிறது.
குளிர்காலத்தில் இனிப்பு, புளிப்பு. உப்புச்சுவை மற்றும் பசைத்தன்மை உள்ள உணவுகள் நல்லது. கோதுமை கஞ்சி மற்றும் ஆட்டுக்கால் சூப்பை சாதத்துடன் சேர்த்து சாப்பிடலாம். இது உடலுக்கு சூட்டைத் தரும். சுரைக்காய், பறங்கிக்காய் போன்ற நீர்க்காய்கள் பனிக்காலத்தில் தவிர்க்கப்பட வேண்டியவை. பப்பாளி, அன்னாசி பழங்கள் சாப்பிடலாம். நாட்டுக்கோழி மற்றும் வெள்ளாட்டுக் கறி உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.கதகதப்பான உடைகளுடன் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வது, குளிர்கால தசை இறுக்கத்தை சீராக்கும். வெயில் படும்படியாக இருப்பது நல்லது. குளிர்காலங்களில் பச்சைத் தண்ணீரை தவிர்த்து, சுடு தண்ணீரில் குளிக்கலாம். உங்களின் உடைகள், விரிப்புகள் கதகதப்பாக இருக்கட்டும்.குளிரால், சளி உறைந்து போகும். தொண்டையைச் செருமித் துப்பினால் கூட சளி வராது. நல்லெண்ணெயில் மிளகு, சீரகம் பொரித்து வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். வெதுவெதுப்பாய் இருக்கும் எண்ணெயை,ஐந்தாறு சொட்டு மூக்கு வழியாக விட்டால், தொண்டை வழியாக இறங்கி சளியை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து வெளியேற்றும்ஒரு லிட்டர் தண்ணீரில், கோரைக் கிழங்கு (நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்) 10 கிராம், சுக்கு -5 கிராம் சேர்த்து, அரைலிட்டராக கொதிக்க வைத்து குடிக்க, மார்பில் சளி கட்டாது. துளசி தீர்த்தமும் பலன் தரும்சுற்றிலும் பனியாய்,வானம், மப்பும் மந்தாரமுமாய் இருந்தால், சாம்பிராணி புகை போட்டு, அந்தப் புகையில், போர்வையை காட்டுங்கள். அந்த துணியால் உடம்பைப் போர்த்த கதகதப்பு கூடும். இதுவும் பழங்காலத்தில் இருந்த ஒரு பழக்கம்.
புரதச்சத்து அதிகம் நிறைந்த ஆரோக்கியமான தானியங்களில் ஒன்று சோளம், சோளத்தை ஆங்கிலத்தில் Great millet (கிரேட் மில்லெட்) என்று அழைப்பார்கள். இதற்கு சொர்கம் (Sorghum). ‘மைலோ’ என்ற வேறு பெயர்களும் உண்டு.வட அமெரிக்காவில் இருக்கின்ற மெக்சிகோ நாட்டை பூர்விகமாகக் கொண்ட ஒரு பயிர் வகையாகும்.அந்த நாட்டில் வாழ்ந்த பழங்குடியினர் சோளத்தை உணவிற்கு மட்டுமல்லாமல் பல மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினர்.சோளத்தில் வெண்சாமரச் சோளம், சிவப்பு சோளம், வெள்ளை சோளம், பழுப்புநிற சோளம் என பல வகைகள் இருக்கின்றன.அரிசியுடன் ஒப்பிடும்போது இதில் நார்ச்சத்து அதிகம், இதனை பச்சையாகவோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் நார்ச்சத்து முழுமையாக கிடைக்கிறது, எனவே வயிறு மற்றும் குடல் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கிறது.கோதுமை போன்ற தானியங்களை ஒப்பிடுகையில் சோளத்தில் குளுட்டன் இல்லை, குளுட்டன் அதிகமாக உட்கொண்டால் செரிமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், ஆனால் சோளத்தில் குளுட்டன் கிடையாது, எனவே இதை தாராளமாக சாப்பிடலாம்.உடல் எடையை அதிகரிக்க விரும்பும் மக்கள், சோளத்தை உட்கொள்ள வேண்டும். இதில், போதிய அளவில் கார்போஹைட்ரேட்களும் உள்ளன, இவை உடல் எடையை அதிகரிக்க உதவுகிறது.சோளத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஏராளமான இரும்புச்சத்துகள் உள்ளன, இவை இரத்தத்தை சுத்திகரிக்க உதவுகிறது, இது உடலில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதால் இரத்த சோகையால் பாதிக்கப்படுபவர்கள் சோளத்தை தாராளமாக உட்கொள்ளலாம்.இதில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் கெட்ட கொழுப்புகளின் அளவை குறைத்து விடுகிறது, எனவே இதயம் தொடர்பான நோய்கள் உங்களை நெருங்காது, இதுதவிர ஆன்டி ஆக்சிடன்டுகள், மெக்னீசியம், விட்டமின் பி மற்றும் இ இருப்பதால் இதய நோய்களிலிருந்து பாதுகாக்கிறது.சோளத்தில் போலிக் ஆசிட் நிறைந்துள்ளதால், கருவுற்ற பெண்கள் மருத்துவர் அறிவுறுத்திய அளவின்படி சோளம் சாப்பிட்டு வருவது அவர்களுக்கும், அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தையின் சீரான வளர்ச்சிக்கும் பெருமளவு உதவுகிறது.சர்க்கரை நோய் இருப்பவர்கள் தினமும் சோளத்தை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நல்ல பலனை பெறலாம். இதில் இருக்கும் கார்போஹைட்டிரேட் இரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து விடாமல் பாதுகாக்கின்றது. இதனால் உடல் எடை குறைந்து சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்க உதவுகின்றது. புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள் உள்ளன.