முருங்கை மரத்தில் எல்லாமே சத்துக்கள்தான். இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் என ஒவ்வொரு பாகமும், உடலிலுள்ள நோய்களை தீர்க்கக்கூடியது.அந்தவகையில், முருங்கைக்காய்களும் தவிர்க்க முடியாதவை.புரதம், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் என்ற 4 சத்துக்களின் மிகச்சிறந்த ஆதாரமாக முருங்கை திகழ்வதே இதன் பிளஸ் பாயிண்ட்டாகும்.. இதிலுள்ள வைட்டமின் C சத்தானது, ஆரஞ்சுப் பழத்தைவிட அதிகம். மற்ற அனைத்து கீரைகளில் இருப்பதைவிட, இந்த முருங்கையில் ஏகப்பட்ட இரும்புச் சத்துக்கள் உள்ளன. இதிலிருக்கும் பொட்டாசிய சத்து, வாழைப்பழத்தை விடவும் அதிகம். இதிலிருக்கும் புரோட்டின் சத்துக்களோ, முட்டைக்கு இணையானது. கால்சியம் சத்துக்கள், பசும்பாலைவிட,4 மடங்கு அதிகம். முருங்கைக்கீரைகள் ரத்தவிருத்தியை தருவதைப்போலவே, இந்த காய்களும் இரும்புச்சத்து கொண்டிருக்கின்றன. அனிமியா பிரச்சனை உள்ளவர்கள் தவறாமல் முருங்கையை உணவில் சேர்த்து கொள்ளலாம்.இரும்புச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த இந்த முருங்கை உதவுகிறது.. வைட்டமின்கள், மினரல்கள், இரும்புச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் Cயின் சிறந்த ஆதாரமாக உள்ளதால், ரத்த சோகை வருவதைத் தடுக்கிறது.முருங்கைக்காயில் உள்ள இரும்புச்சத்து உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் உதவுகிறது. தொற்றுக்கள் உண்டாக்குவதை தவிர்க்கக்கூடிய வைட்டமின் C முருங்கைக்காயில் உள்ளது. வைட்டமின் A உள்ளதால், மூளை மற்றும் கண்பார்வை வளர்ச்சியும் மேம்படும். கர்ப்பிணிகள் முருங்கையை அடிக்கடி சாப்பிட வேண்டும். தாய்க்கு மட்டுமல்லாமல், வயிற்றிலுள்ள குழந்தைக்கும், அதிக நன்மையை தருவதால், முருங்கைக்காய் கர்ப்ப காலத்தில் ஒரு சிறந்த சப்ளிமெண்டாகவே செயல்படுகிறது. கர்ப்ப காலத்தில் 100 கிராம் அளவு முருங்கைக்காய் சாப்பிடுவதால், வயிற்றிலுள்ள கருவினுடைய உறுப்புகள் நன்றாக வளரும். எனவே டாக்டர்களின் முறையான ஆலோசனையை பெற்று கர்ப்பிணிகள் இந்த காயை உணவில் சேர்த்து கொள்ளலாம்.நுரையீரல் பிரச்சனை இருப்பவர்கள், மூலநோயால் அவதிப்படுபவர்கள், வயிற்றில் புழு பிரச்சனை உள்ளவர்கள், கணையம், கல்லீரலில் வீக்கம் உள்ளவர்கள் முருங்கைக்காயை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். அதிலும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த காய் சிறந்த மருந்தாகும்காரணம், ரத்த சர்க்கரை அளவை சீராக்கி, கட்டுக்குள் வைக்கும்.
சுரைக்காய்வெள்ளரிக்காய் குடும்பத்தைச் சேர்ந்தது.இது 96 சதவீதம்நீர்ச்சத்துநிரம்பியது.நம்உடலைகுளிர்ச்சியாகவும், புத்துணர்ச்சியாகவும் வைக்க உதவும்.பரோட்டீன், வைட்டசின் பி1. பி5. பி6. சி, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், சோடியம் பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன.சுரைக்காயின் சதைப் பகுதியை வெட்டி சாறு பிழிந்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து பருகி வர, சிறுநீரக தொடர்பான பிரச்னைகள் குணமாகும்.அதிகளவு சுரைக்காயை உணவில் சேர்ப்பது உங்க ஞாபக சக்தியை அதிகரிக்கும். இதன் மூலம் வயதான காலத்தில் . ஏற்படும் மறதி நோயான அல்சைமர் போன்ற நோய் வராமல் தடுக்க முடியும்.சுரைக்காயில் உள்ள உயர்ந்த அளவு பொட்டாசியம் உங்க இதயஆரோக்கியத்திற்கு சிறந்ததாக இருக்கும். இது உங்க உயர் ரத்த அழுத்தத்தை சீராக்குதல், உயர் கொழுப்பை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது.சுரைக்காயில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது.
சீத்தாப்பழமானது அமெரிக்கா மற்றும் இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஒரு சிறிய மரம்.சீத்தாபழத்தின் தோல், விதை, இலை, மரப்பட்டை என அனைத்துமே அரிய மருத்துவ பண்புகள் அடங்கியுள்ளது.உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான இரும்புசத்து, பாஸ்பரஸ், நீர்ச்சத்து, மாவுசத்து போன்றவை காணப் படுகிறது.உடலில் உள்ள புண்கள் ஆற, இதின் இலைகளை அரைத்து புண்களின் மேல் பூசினால், விரைவில் புண் ஆறும்.விதைகளை பவுடராக்கி 2 நாள் தொடர்ந்து தூவினால் எறும்பு, கரப்பான் பூச்சி, பல்லி, கொசு தொல்லையை விரட்டலாம். கருவை கலைக்கும் அளவுக்கு விதைகளுக்கு சக்தி உள்ளது.நன்மை தரும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன.இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.கல்லீரல் ஆரோக்கியத்தை ஆதரிக்க முடியும்.குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.நோயெதிர்ப்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கும்.இதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.2,3 முறை பழத்தை சாப்பிட்டுவந்தால் எலும்பு மற்றும் பல்லும் உறுதியாகும், காசநோய் மட்டுப்படும்.பழத்தின் விதையை பொடியாக்கி, அதே அளவில் சிறுபயிறு மாவு சேர்த்து தலை தேய்த்து குளித்துவர பேன்கள் ஒழிந்துவிடும், முடி பளபளப்பாகும்.முகத்தில் அடிக்கடி வரும் பருக்களை நீக்க, பழத்தின் சதையோடு சிறிது உப்பு சேர்த்து பருக்கள் மேல் பூசிவர, பருக்கள் உடைந்து சீக்கிரம் ஆறிவிடும்.விதையின் பொடியோடு கடலைமாவு, சிறிது எலுமிச்சைசாறு கலந்து, குளித்துவர முடி உதிர்வதை தடுக்கும்.
ரத்த ஓட்டம் தடைபடுவதால் வலி, தசைப்பிடிப்பு, உணர்வின்மை, செரிமான பிரச்சினைகள் மற்றும் கைகள் அல்லது கால்கள் மரத்துப் போவது போன்ற அறிகுறிகளை ஏற்படுத்தும், எனினும் ஒரு சில உணவுகள் மூலம் ரத்த ஓட்டத்தை சீராக்க முடியும். எனவே சரியான ரத்த ஓட்டத்தை உறுதிசெய்ய சில பயனுள்ள உணவு மாற்றங்களை செய்யலாம்.மீனில் உள்ள ஒமேகா -3 அமிலங்கள் செயல்பாட்டிற்கு நன்மை பயக்கும், அவை ரத்தக் குழாய்களை இரத்தக் கட்டிகளிலிருந்து தடுக்கின்றன. ரத்த அழுத்தத்தை பராமரிக்கின்றன. இது இரத்த ஓட்டம் மற்றும் சுழற்சியை எளிதாக்குகிறது. வஞ்சரம் கானாங்கெளுத்தி ஆரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன
வேர்க்கடலை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாது. சாப்பிட்ட உடனேயே தண்ணீர் குடிப்பதால் இருமல், தொண்டை வலி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.இனிப்பு சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது இவ்வாறு செய்வதால் உடலில் சர்க்கரை அளவு அதிகரித்து, டைப் 2 சர்க்கரை நோய்க்கு வழிவகுக்கும்.பழங்கள் சாப்பிட்ட பிறகு தண்ணீர்குடிக்காமல் இருப்பது நல்லது. பழங்களில்சர்க்கரை அல்லது சிடரிக் அமிலம் இருப்பதால் 45 நிமிடங்களுக்கு தண்ணீர் குடிக்க வேண்டாம். ஐஸ்கிரீம் சாப்பிட்ட பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது ஐஸ்கிரீம் சாப்பிட்ட 15 நிமிடம் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.காபி, சூடான பானங்கள் அருந்திய பிறகும் தண்ணீர் குடிக்கக் கூடாது. குளிர்ச்சியாகவோ அல்லது சூடாகவோ எடுத்துக் கொண்டால், எடை வாயு, அமிலத்தன்மை மற்றும் பிற உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
படிகளில் ஏறி இறங்குவது. அடிக்கடி நடப்பது. கண்களுக்கு பயிற்சி கொடுப்பது, கைகால்களை நீட்டி மடக்குவது, மூச்சுப் பயிற்சி என ஏதோ ஒரு உடற்பயிற்சியை தினமும் செய்யுங்கள்.தினமும் 5 முறை காய்கறிகள் மற்றும் பழங்களை உண்ணுங்கள், பெரும்பாலானவை வேக வைக்காத காய்கறிகள், சில காய்கறிகள் பாதி வேக வைத்து உண்ணலாம்.. டீ அல்லது காபி, புகை பிடித்தல், மது அருந்துதல், எதிர் மறை எண்ணங்கள் போன்றவை வேண்டாம்..சீஸ், சிப்ஸ், பிரன்ச் பிரைஸ், பீட்சா போன்ற அதிக கொழுப்பு உணவுகளை ஒதுக்கித் தள்ளுங்கள். அதிக உப்பு ரொம்ப ரொம்ப தப்பு என மனதுக்குள் எழுதி வைத்துக் கொள்ளுங்கள்.சாப்பிட்ட பிறகு குளிர்ந்த நீரை குடிப்பதை விட சூடான தண்ணீர் குடிப்பது நன்மையை தரும்.இனிப்பு சுவை உள்ள தீனியை அதிகம் சாப்பிடுவதை குறைத்து கொள்ளுங்கள்.உடலுக்குக் கால்சியம் கிடைக்கக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். மேலும் காலை வெயிலிலும் கொஞ்ச நேரம் உலவுங்கள்.தேவையான அளவு ஓய்வு தூக்கம் அமைதி ஆகியவை மிக மிக தேவை.
ஓமத்தை, தண்ணீரில் கொதிக்க வைத்து, பனை வெல்லம் சேர்த்து, காலை வேளையில் அருந்தி வர, உடல் பலம் பெறும். 100 கிராம் ஓமத்தில் 1 லிட்டர் தண்ணீர் சேர்த்து, கொதிக்க வைத்து குடித்தால், அஜீரணக் கோளாறு சரியாகும். ஓமம், கடுக்காய் தோல், முக்கடுகு. சித்தரத்தை, அக்கரகாரம் மற்றும் திப்பிலி வேர் பொடியை சம அளவு எடுத்து, அதனுடன் சரிபாதி பனங்கற்கண்டு சேர்த்து, காலை மற்றும் மாலை வேளைகளில் சாப்பிட, தொண்டையில் புகைச்சல் நீங்கும்.ஓமம். சுக்கு, சித்திர மூல வேர்ப்பட்டை சம பங்கு பொடித்து, கடுக்காய் பொடி சேர்த்து, மோரில் கலந்து குடித்து வர, மந்தத்தைப் போக்கும்.ஓம கஷாயம் அருந்தினால், பசியை துாண்டும்.ஜலதோஷம் குறைய, ஓமத்தை பொடித்து. உச்சந்தலையில் வைத்து தேய்க்கலாம்.ஓமப் பொடியை துணியில் கட்டி நுகர்ந்தால், மூக்கடைப்பு நீங்கும்.ஓம எண்ணெயை மூட்டு வலிக்கு தடவ, நாளடைவில் வலி குணமாகும்.ஓம எண்ணெயை, பஞ்சில் தோய்த்து, பல் மீது வைத்து அழுத்திக் கொண்டால், வலி நீங்கும்.ஓமம், சீரகம் சம அளவு சேர்த்து, வாணலியில் வறுத்து, சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் பொடிக்க வேண்டும். உணவு உண்ட.. 20 நிமிடங்களுக்கு பிறகு, ஒரு தேக்கரண்டி சாப்பிட, வயிற்றுக் கடுப்பு சரியாகும்.
இன்றைய வேகமான வாழ்க்கையில், சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்க ஆரோக்கியமான இதயத்தை பராமரிப்பது மிகவும் முக்கியமானதாகிவிட்டது. பிஸ்தாவை உட்கொண்டால், அவை உங்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இது தாவர ஸ்டெரால்கள், அமினோ அமிலங்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்களால் நிரம்பியுள்ளது. இது தமனிகள் மற்றும் இரத்தக் கட்டிகள் உருவாவதைத் தடுப்பதன் மூலம் இதயத்தை கணிசமாக மேம்படுத்துகிறது.மொபைல் அல்லது கம்ப்யூட்டர் திரைகளைப் பார்ப்பதற்கு அதிக நேரம் செலவழித்தால், உங்கள் கண்களை சரியான முறையில் கவனித்துக்கொள்வது அவசியம். உணவில் பிஸ்தாவைச் சேர்ப்பது, கண் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. முக்கியமான லுமன் மற்றும் ஜியாகசாந்தின் ஆகியவற்றை உங்களுக்கு வழங்குகிறது. மேலும், பிஸ்தாவில் ஏராளமான மோனோசாச்சுரேட்ட்ட கொழுப்பு அமிலங்கள். வைட்டமின்கள் ஏ மற்றும் துத்தநாகம், கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. அலை வீக்கத்தைக் குறைக்கவும் எலும்பு மற்றும் மூட்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் உதவுகின்றன.
பாதாம் பால் அல்சருக்கு நல்லது. குளிர்ந்த பால் குடிப்பது * வலியைக் குறைக்கும். உண்ணும் போது கோபம், தாபம், வருத்தங்களை தவிர்க்க வேண்டும். மாதுளம் பழத்தை மிக்சியில் போட்டு அரைத்து வடிகட்டி ஜூசாக குடிக்கலாம். அகத்திக் கீரையை தினமும் உணவில் சேர்த்தால் குடல் புண் குணமாகும். அத்திக் காயை சிறுபருப்புடன் சேர்த்து சாப்பிட அல்சருக்கு நல்ல தீர்வு கிடைக்கும் உலர்ந்த திராட்சைப் பழங்களை சேர்க்க வேண்டும்.
1.இஞ்சி சாறை பாலில் கலந்து சாப்பிட வயிறு நோய்கள் தீரும். உடம்பு இளைக்கும். 2.இஞ்சி துவையல், பச்சடி வைத்து சாப்பிட மலச்சிக்கல், களைப்பு, மார்பு வலி தீரும். 3. இஞ்சியை சுட்டு உப்பில் தோய்த்து சாப்பிட பித்த, கப நோய்கள் தீரும். 4. இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும். 5. இஞ்சியை புதினாவோடு சேர்த்து துவையலாக்கி சாப்பிட பித்தம், அஜீரணம், வாய் நாற்றம் தீரும். சுறு சுறுப்பு ஏற்படும். 6. இஞ்சியை, துவையலாக்கி சாப்பிட வயிற்று உப்புசம் இரைச்சல் தீரும். 7. காலையில் இஞ்சி சாறில், உப்பு கலந்து மூன்று நாட்கள் சாப்பிட பித்த தலைச்சுற்று, மலச்சிக்கல் தீரும். உடம்பு இளமை பெறும்.