25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ஆரோக்கியம்

Mar 23, 2025

சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற அத்திப்பழம்.

அத்திப்பழம் உடலுக்கு பல்வேறு நன்மைகள் வழங்கக்கூடியது, குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு இது மிகவும் ஏற்றதாக இருக்கிறது. ஒரு அத்திப்பழத்தில் சுமார்30 கலோரிகள்,9 கிராம் கார்போஹைட்ரேட்,6 கிராம் இயற்கைச் சர்க்கரை,1 கிராம் நார்ச்சத்து ஆகியவை காணப்படுகின்றன. மேலும், இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, சி, இரும்புச்சத்து, நியாசின், போலேட், மெக்னீசியம், துத்தநாகம், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஆன்டி ஆக்சிடன்டுகள் நிறைந்துள்ளன.அத்திப்பழத்தில் உள்ள அழற்சி எதிர்ப்பு தன்மைகள் மற்றும் நார்ச்சத்து, இன்சுலின் சுரப்பை அதிகரித்து அதன் செயல்பாட்டை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.35 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளதால், இது சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்ற பழமாக பார்க்கப்படுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை மந்தமாக்கி, ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு திடீரென அதிகரிக்காமல் தடுக்கும். மேலும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி மலச்சிக்கலை தவிர்க்க உதவுகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்கிறது.சர்க்கரை நோயாளிகள் அத்திப்பழத்தை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம், ஏனெனில் இது அவர்களுக்கு பல்வேறு உடல்நல நன்மைகளை வழங்குகிறது.

Mar 20, 2025

ஆரோக்கியத்தை அள்ளி தரும் புளி.

 தமிழர்களின் வாழ்வியலோடு ஒன்றிணைந்த சமையலில் பிரிக்க முடியாதது புளி. இந்த புளியை தவிர்த்து பெரும்பாலும் எந்த உணவையும் சுவையாக செய்துவிட முடியாது. இப்படி சமையலில் எப்படி தவிர்க்க முடியாத பொருளாக மாறியுள்ள புளியானது, உடல் ஆரோக்கியத்திலும் பல நன்மைகள் நமக்கு வழங்குகிறது. செரிமானத்தை தூண்டவும், கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தவும் புளி முக்கிய பங்கு வகிப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். புளியில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, ஃபிளாவனாய்டுகள், கரோட்டின்கள், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை உள்ளது. இது நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தவும் வலுப்படுத்தவும் உதவுகிறது.புளியில் பொட்டாசியம் நிறைந்துள்ளதால், இதயத் துடிப்பைக்கட்டுப்படுத்தவும்திரவத்தைசமநிலைப்படுத்தவும் பயன்படுகிறது.புளியில் ஃபிளாவனாய்டுகள் போன்ற பாலிபினால்கள் உள்ளன. இவை கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவும். மேலும் ரத்த அழுத்தத்தை பராமரிக்க உதவும் மெக்னீசியம் அதிகமாக உள்ளது.புளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது, பூஞ்சை எதிர்ப்பு செயல்பாட்டை அதிகரிக்கும். புளி ஒரு டானிக் போலவும், கிளீனிங் ஏஜென்ட் போலவும் செயல்படுகிறது. இது குடல் மற்றும்பிறசெரிமானஉறுப்புகளின்செயலிழப்பைக்கட்டுப்படுத்துகிறது.புளியானது சட்னிகள் முதல் கறிகள் வரை, உணவில் சுவையை சேர்க்கிறது. அதுமட்டுமல்லாமல் ஆரோக்கியத்தை வளப்படுத்துகிறது..

Mar 18, 2025

பற்களை ஆரோக்கியமாக்கும் கிராம்பு .

கிராம்புகளில் ஃபிளாவனாய்டுகள், ஃபீனாலிக் கலவைகள் மற்றும் யூஜெனால் ஆகியவை மற்ற ஆக்ஸிஜனேற்றங்களைக் கொண்டுள்ளன. இந்த ஆன்டிஆக்ஸிடன்ட்கள் ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்கின்றன, வீக்கத்தைக் குறைக்கின்றன மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுகின்றன. புற்றுநோய், இதய நோய் மற்றும் நரம்பியல் கோளாறுகள் உள்ளிட்ட நாள்பட்ட நோய்களைத் தடுப்பதன் மூலம், வழக்கமான கிராம்பு பயன்பாடு ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும்  தொற்று நோய்களுக்கு எதிராக பாதுகாக்கும் . பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் கிராம்பு மிகவும் சிறந்தது என்பதால், அவை அடிக்கடி வாய்வழி பராமரிப்பு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன. அவற்றின் வலி நிவாரணி குணங்கள் பல்வலியைக் குறைக்கும் மற்றும் வாய்வழி பாக்டீரியாவை எதிர்த்துப் போராடும். கிராம்பு எண்ணெயுடன் சிகிச்சையளிக்கப்பட்ட பற்கள் கட்டுப்பாட்டுப் பற்களைக் காட்டிலும் குறைவான டிகால்சிஃபிகேஷனை வெளிப்படுத்தியதாக NIH தெரிவிக்கிறது.

Mar 14, 2025

கடின வேலை  செய்பவர்கள் புத்துணர்வு பெற கம்பங்கஞ்சி.

வெயிலில் அதிகம் அலைகிறவர்கள். கடின வேலை செய்பவர்கள் அதிகம் சோர்வடைகின்றனர். இவர்கள் புத்துணர்வு பெற கம்பை கூழாக்கி, அதனுடன் மோர் கலந்து, மதிய வேளையில் அருந்தி வந்தால், உடல் சோர்வு நீங்கி,புத்துணர்வு கிடைக்கும்.கம்பங் கஞ்சியை அருத்தி வந்தால் கோளாறுகள் நீங்கி, நன்கு பசியெடுக்கும். வயிற்றில் புண்கள் உண்டானால், வாயிலும் புண்கள் ஏற்படும். மேலும், வயிற்று புண்களை குணப்படுத்தும் குணம், கம்புக்கு உண்டு.கம்புடன் அரிசி சேர்த்து, நன்கு குழையும்படி சோறாக்கி, மதிய உணவில் சேர்த்துக் கொண்டால் குடல்புண், வயிற்றுப்புண் மற்றும் வாய்ப்புண் குணமாகும்.உடல் வலுவடைய கம்பு மிகச் சிறந்த உணவாகும். அடிக்கடி  கம்பங்கஞ்சி சாப்பிட்டு வந்தால் உடல் வலுவடையும்கண் நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து, பார்வையை தெளிவாக்கும். இதயத்தை வலுவாக்கும். சிறுநீரைப் பெருக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வைக் கொடுக்கும். ரத்தத்தை  சுத்தமாக்கும்.உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றும், நோய் எதிர்ப்பு சக்தியைத் துண்டும். தாதுவை விருத்தி செய்யும். இளநரையைப்  போக்கும்.அதிகமாக கம்பங்கஞ்சி அருந்தினால் சில சமயங்களில் இருமல், இரைப்பு போன்றவற்றை உண்டாக்கும். அதனால், அளவோடு சாப்பிட்டு  ஆரோக்கியமாக வாழலாம்.

Mar 10, 2025

பல  நோய்களை நீக்கும்அதிமதுரம்.

அதிமதுரம் சர்வதேச மருத்துவ மூலிகை,. இதன் மருத்துவ குணங்கள், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.அனேக நோய்களை நீக்குகிறது. மனிதர்களுக்கு தீங்கு செய்யும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் சக்தி நிரம்பியது.அதிமதுரத்தில் உள்ள பசைப் பொருளும், பிசின் பொருளும் உணவு மண்டலத்தில் செயல்பட்டு உணவு செரிப்பதற்கு உதவுகிறது. மலச்சிக்கலை நீக்குவதில் சிறப்பாக செயல்படுகிறது.ஊட்ட சத்தாகவும்,ரத்தப்  போக்கை கட்டுப் படுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை திவர்த்தி செய்யவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும், கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறதுஅதிமரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து, வறுத்து, சூரணம் செய்து வைத்து, 3 கிராம் அளவில் தேனில் குழைத்து சாப்பிட்டால், அதிகச் சூட்டால் ஏற்படும் இருமல் தீரும்.அதிமதுரம், சீரகம் சரிசமமாக எடுத்து பொடித்து, 20 கிராம் பொடியை, 200 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். 100 மில்லியாக சுண்டியதும் வடிகட்டி, காலை வேளையில், பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நிவர்த்தி ஆகும்.அதிமதுரம் மற்றும் தேவதாரம், தலா, 35 கிராம் எடுத்து, வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால், சுகப்பிரசவம் ஏற்படும். பெண்களுக்கு ஏற்படும் கருப்பை தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும்அதிமதுரச் சூரணம் 2 கிராம் எடுத்து, தேனில் குழைத்து, தினம், மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக்கட்டு, இருமல், சளி குணமாகும். உடல் பலமும் ஆரோக்கியமும் விருத்தியாகும்.அதிமதுரம், ரோஜா மொட்டு, சோம்பு இவற்றை சம அளவில் எடுத்து, இடித் சலித்து, இரவு படுக்கும் போது, பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது.அதிமதுரச் சூரணம் கலப்படம்  சந்தனச் சூரணம், தலா, 0.8 கிராம் எடுத் பாலில் கலந்து, நான்கு வேளை சாப்பிட்டால்  வாந்தியுடன் ரத்தம் வருதல் நிற்கும்.உள்  உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள். அதிமதுரச் சூரண 1கிராம் எடுத்து, பாலில்  கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் அதிகம்  சுரக்கும். இதன் மூலம்  குழந்தைகளுக்கு கூடுதலாக ஊட்டச்சத்து  கிடைக்கும்அதிமதுரம். வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக தலா, 10 கிராம் அளவில் எடுத்துக் கொள்ளவும். 250 கிராம் சர்க்கரையை தண்ணீர் சிறிதளவு விட்டு, பாகு பதம் வரும் வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும் போது, மேற்கண்ட சூரணங்களைக் கொட்டி, லேகியம் தயாரித்துக் கொள்ளவும். தினம். மூன்று முறை, இரண்டு தேக்கரண்டி அளவு சாப்பிட்டால், வறட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப்புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.அதிமதுரத்தை நன்றாக அரைத்து, பசும்பாலில் கலந்து தலைக்கு தேய்த்துக் குளித்து வந்தால்,இளநரை ஏற்படாமல் தடுக்கும். முடி உதிர்தல் இருக்காது.அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால், உமிழ்நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால், தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கிவிடும். தொண்டையில் உள்ள சளிக்கட்டு கரைந்துவிடும்ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்த அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிடவும்...

Mar 09, 2025

கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ்

சிறுதானியங்களில் 11.8 சதவீ தம் என்ற அளவில் அதிகமான புரதச்சத்து கம்பு தானியத்தில் தான் உள்ளது.வைட்டமின்-ஏ உடலில் உருவாவதற்கு முக்கிய காரணியான பீட்டா கரோட்டீன், என்ற சத்துப்பொருள் கம்பு பயிரில் அதிகம் உள்ளது. இதுதவிர, கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின்-சி, ரிபோ பிளேவின், நியாசின் சத்துக்கள் உள்ளன.கோடை காலத்தில் உடலில் ஏற்படும் வறட்சியை போக்க கம்பங் கூழ் உதவுகிறது.   கம்பு தானியத்தை அடிக்கடி உணவாக உட்கொள்ளும்போது 2-ம் வகை நீரிழிவு நோய்க்கான அபாயத்தை குறைக்கிறது. கம்பு தானியத்தில் உள்ள அதிக நார்ச்சத்து குடலில் கார்போஹைட்ரேட் எனும் மாவுச்சத்து செரிமானத்தை மெதுவாக செய்வதால் ரத்த குளுக்கோஸ் அளவு விரைவாக அதிகரிப்பது தடுக்கப்படுகிறது. மேலும், கம்பில் உள்ள மெக்னீசியம், இன்சுலின் சுரப்பை தூண்டுகிறது. இதனால், ரத்த சர்க்கரை அளவு உடலில் கட்டுப்படுகிறது. கம்பு தானியத்தில் காணப்படும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மாரடைப்பு மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தை குறைக்க ஒன்றிணைந்து செயல்படுவதால் இதயம் சீராக இயங்க உதவுகிறது.பெண்களுக்கு ஏற்படும் பாலி சிஸ்டிக் ஒவரி சிண்ட்ரோம் எனும் கர்ப்பபை கட்டிகள், ஹார்மோன் சுரப்பு பாதிப்பு காரணமாக ஏற்படுகிறது. இதனை தடுக்க கம்பு உத வுகிறது. கம்பு தானி யத்தில் உள்ள அதிக நார்ச்சத்து மற் றும் மெக்னீசியம் ரத்த சர்க்கரை மற்றும் இன் சுலின் அளவைக் கட்டுப்படுத்துவதால் கட்டிகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. 

Mar 04, 2025

தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்த வெண்டைக்காய்  நீர்.

தினமும் இரண்டு அல்லது மூன்று வெண்டைக் காய்களை சுத்தம் செய்து முனையையும், அடிப் பகுதியையும் வெட்டி எடுத்துவிட்டு துண்டு துண்டாக நறுக்கி ஒரு கப் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்திருந்து, மறுநாள் காலையில் வெறும் வயிற்றில் அந்த நீரை மட்டும் எடுத்து குடித்து வந்தால், ஒரு சில மாதங்களில் ரத்த புற்றுநோய், சர்க்கரை நோய், உடல் எடை காரணமாக கால்கள் வீங்குதல் மற்றும் கால் வலி போன்ற இன்னும் பல பிரச்சனைகள் இருந்த இடம் இல்லாமல் போகும் என ஆயுர் வேத வைத்தியர்கள் கூறுகின்றனர்.

Mar 02, 2025

 புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் மனுகா தேன் (Manukahoney). 

மனிதகுலம்  இனிப்புக்காக தேனைப் பயன்படுத்தி வருகிறது. அதன் மருத்துவ குணங்களுக்காகவே பல நாடுகளின் பாரம்பரிய வைத்தியத்தில் தேன் முக்கிய இடம் பிடித்துள்ளது. தேனில் பல வகைகள் உள்ளன. குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள பூக்களிலிருந்து ,தேனீக்கள் தேனைச் சேகரித்து வைக்கும்போது, அவற்றின் சுவை, மருத்துவ குணம் தனித்து வம் நிறைந்ததாக இருக்கும்.அப்படியான ஒன்று தான் மனுகா தேன்(Manukahoney). ஆஸ்திரேலியா, நியூசிலாந்து பகுதிகளில் மட்டுமே காணப்படும் ஒரு வகை மரம் மனுகா. இதிலிருந்து தேனீக்களால் சேக ரிக்கப்படும் தேனில் மருத்துவ குணம் அதிகம். பாக்டீரியா எதிர்ப்பு, நோய் எதிர்ப்புத் திறன்இந்தத் தேனுக்கு உண்டு என்பது ஏற்கனவே அறியப்பட்ட ஒன்று தான். ஆனால், அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை, இந்தத் தேனை மார்பகப் புற்றுநோய்க்கான சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும் என்று கண்டறிந்துள்ளது. பொதுவாக மார்பகப் புற்றுநோய் செல்கள், ஈஸ்ட்ரோஜன் எனும் நாளமில்லா சுரப்பியைத் தங்கள் வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொள்ளும். இதைத் தடுக்கவே ரசாயன மருந்துகள் உப யோகப்படுகின்றன. இதற்கு மாற்றாகத் தான் தேனைப் பயன்படுத்தலாம் என்கிறது ஆய்வு. விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்தில் செயற்கையாக மார்பகப் புற்றுநோய் கட்டிகளை உருவாக்கினர். அவற்றின் வளர்ச்சியை மனுகா தேன் கட்டுப்படுத்துவதை உறுதி செய்தனர். இதைத் தொடர்ந்து எலிகள் மீது சோதித்தனர். மனிதர்களின் உடலில் உருவான புற்றுநோய்க் கட்டிகளை எலிகளில் பொருத்தினர். எலிக ளுக்குத் தேனை உண்ணக் கொடுத்தனர். இது, எலிகளின்   உடலில் வளர்ந்த கட்டிகளைப் பிற செல்களுக்கு எந்தச் சேதாரமும் இல்லாமல்84 சதவீதம் வரை அழித்துவிட்டது.மனுகா தேனுக்கு புற்றுநோயைக் கட்டுப் படுத்தும் திறன், மேற்கண்ட சோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டது. இதனால், இந்த தேனை புற்றுநோய் சிகிச்சைக்கு பயன்படுத்த லாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

Feb 28, 2025

தினமும் ஒரு கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் சில ஆச்சரியமான நன்மைகள்

தினசரி கிராம்புகளை மெல்லுவது போன்ற சிறிய உணவு மாற்றங்கள் ஆரோக்கியத்தை  மேம்படுத்துகின்றன, கிராம்புகளின் ஆக்ஸிஜனேற்றங்கள் நாள்பட்ட நோய்களைத் தடுக்கின்றன, அவற்றின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன, மேலும் அவை பல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. கூடுதலாக, கிராம்பு கல்லீரலை சுத்தப்படுத்துகிறது மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த உதவுகிறது, இது வகை2 நீரிழிவு நோயாளிகளுக்கு பயனளிக்கிறது. பொது ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, சிறிய உணவு மாற்றங்கள் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். சாதுவான உணவில் சுவை சேர்ப்பதோடு, ஒரு துண்டு கிராம்பு  சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு குணங்களைக் கொண்ட ஒரு சிறிய மசாலா, உங்கள் உடலுக்கு நோய்கள் மற்றும் தொற்றுநோய்களைத் தடுக்கக்கூடிய ஊட்டச்சத்துக்களின் ஊக்கத்தை அளிக்கிறது. 

Feb 24, 2025

ஜீரண உறுப்புகள் நன்கு செயல்பட பச்சைப் பட்டாணி

பச்சை பட்டாணியில் மாவுச்சத்து, கொழுப்பு, தயாமின், நயாசின், ரைபோஃப்ளேவின், புரதச்சத்து(இறைச்சியிலிருந்து கிடைக்கும் சக்திக்கு ஈடானது), கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, பொட்டாசியம், வைட்டமின் ஏ, பி, சி, நார்ச்சத்து,போன்ற ஊட்ட சத்துக்கள் உள்ளன.உடலுக்குச் சக்தியைத் தரும், பாஸ்பரஸ் அதிகம் இருப்பதால் மூளைக்குத் தேவைப்படும் ஊட்டத்தைத் தரும், மூளை நோயைத் தடுக்கும்.ஜீரண உறுப்புகள் பலமடையும். குடல் புண்ணை ஆற்றும், வாய் துர்நாற்றமும் நீங்கும், வாய்,நாக்குப் புண் குணமாகும், ஜீரண உறுப்புகள் நன்கு செயல்படும்.கண் பார்வைக்கு வைட்டமின் ஏ இன்றியமையாதது.உடல் வலி, தலைவலி ஆகியவை ஏற்படாமல் இருக்கவும், பல், எலும்பு முதலியவை உறுதியுடன் இருக்கவும் இதிலுள்ள வைட்டமின் சி பயன்படுகிறது.நுரையீரல் நோய் குணமடையும், நுரையீரலுக்கும் இதயத்துக்கும் பலத்தைக் கொடுக்கக்கூடியது, இதயம், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படாது.மருந்துபோல இதைத் தினமும் ஒரு கைப்பிடி அளவுபிறகாய்கறிகளுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுங்கள்.

1 2 ... 9 10 11 12 13 14 15 ... 26 27

AD's



More News