25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

Nov 12, 2025

மருத்துவர் பரிந்துரைக்கும் ஆரோக்கிய சமையல் .

எண்ணெய் அளவு குறைச்சு சமைக்கணுமா?வதக்கும்போது எண்ணெய்க்கு பதிலாக தண்ணீரில் வதக்கு- சுவைகுறையாது. கொழுப்பு கூடாது. உப்பை கட்டுப்படுத்தணுமா?மிதமாக உப்புப் பயன்படுத்துங்க. அதற்குப் பதிலா மிளகு, இஞ்சி, பூண்டு போடுங்க- ருசியும். ரத்த அழுத்தமும் சமநிலை!சர்க்கரை நோயாளிகளுக்கா சமைக்கிறீங்க?வெள்ளை அரிசிக்கு பதிலாக பூரண சாமை அல்லது பசுமை புழுங்கல் அரிசி பயன்படுத்துங்கள் - இன்சுலின் அளவை கட்டுப்படுத்த உதவும்.தூள் மசாலா குறைக்கணுமா?அதிக சாம்பார் தூள், கிராம்பு, மிளகு எல்லாம் சிறிதாகவே போடுங்க மூலநோய், அமிலம் வராம பார்த்துக்கொள்ளும்சரியான கிரீன் சாப்பாடுவேண்டுமா?வாரத்துக்கு 3முறை முருங்கைக் கீரை மேத்தி கீரை போல் சத்தும் நாரும் நிறைந்த கீரைகளைச் சேர்க்கவும்.வெந்தயம் - மூட்டுவலி இல்லாம வைக்கும்!அடிக்கடி உணவுகளில் சிறிது வெந்தயம் சேர்த்துசமைக்கவும் -அது எலும்புகளுக்கு நல்லது.

Nov 11, 2025

இதய நோய் அபாயத்தை குறைக்கும் கருப்பு திராட்சை .

கருப்பு திராட்சையில் வைட்டமின்கள் சி, ஈ ஆகியவை உள்ளன. இவை வீக்கத்தைக் குறைப்பதன் மூலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகின்றன. சூரிய கதிர்கள் உமிழும் வெப்பம் மற்றும் சுற்றுப்புற மாசுபாடுகளில் இருந்து சருமத்தை காப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.கருப்பு திராட்சையில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கும். இவை பசி உணர்வை கட்டுப்படுத்துவதன் மூலம் உடல் எடையை குறைக்க உதவும். நிறைவாக சாப்பிட்ட உணர்வை நீண்ட நேரம் தக்கவைக்கவும் செய்யும்.திராட்சையில் ரெஸ்வெராட்ரோல், குர்செடின் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் நிறைந்துள்ளன. இவை தமனிகளில் அடைப்பு உருவாவதை தடுப்பதன் மூலம் இதய நோய் அபாயத்தை குறைக்கின்றன.கருப்பு திராட்சையில் உள்ளடங்கி இருக்கும் வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்று நோய்களின் அபாயத்தைக் குறைக்கவும் வழிவகை செய்யும்.கருப்பு திராட்டையில் இருக்கும் ரெஸ்வெராட்ரோல்,குவெர்செடின் போன்றவை புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளன. ப்ரீ ரேடிக்கல்களால் உடலுக்கு ஏற்படும் பாதிப்பைக் குறைத்து, செல்களை சேதமடையாமல் பாதுகாக்கின்றன. இதன் மூலம் புற்றுநோய் அபாயத்தை தடுக்கின்றன.கருப்பு திராட்சையில் கொழுப்பின் அளவைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை இதன் மூலம் தவிர்க்கலாம்.மற்ற பழங்களை விட கருப்பு திராட்சையில் நார்ச்சத்துக்கள் நிறைவாக உள்ளன. செரிமானத்தை மேம்படுத்தி மலச்சிக்கலைத் தடுப்பதற்கு அவை உதவுகின்றன.கருப்பு திராட்சையில் வீக்கத்தைக் குறைக்க உதவும் கலவைகள் உள்ளன. நீரிழிவு, இதய நோய் மற்றும் புற்றுநோய் போன்ற நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்க இவை உதவும்.கருப்பு திராட்சையில் பாலிபினால்கள், அந்தோசயின்கள் போன்ற ஆன்டிஆக்சிடெண்டுகள் அதிகம் உள்ளன. அவை செல்களுக்கு சேதம் ஏற்படாமல் பாதுகாக்கும்.கருப்பு திராட்சையில் உள்ள ஆன்டிஆக்சிடெண்டுகள் நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவும். முதுமைக் காலத்தில் அறிவாற்றல் குறையாமல் பாதுகாக்கவும் வழிவகை செய்யும்.ரத்தக் குழாய்களில் உள்ள கொலஸ்டிராலை கரைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு காலில் மரத்துப்போகும் தன்மை, கண் புரை வளருதல் ஆகியவற்றை தடுக்கிறது.கண் புரை வந்தாலும் நீக்குகிறது.சிறுநீரகக் செயல்பாட்டின் குறைகளை சரி செய்யப் பயன்படுகிறது.

Nov 10, 2025

நீர்ச்சத்து நிறைந்த வெள்ளரிக்காய் .

வெள்ளரிக்காய் என்பது நீர்ச்சத்து நிறைந்த, புத்துணர்ச்சி அளிக்கும் ஒரு காய்கறி ஆகும். வெள்ளரிக்காயில்95% வரை நீர்ச்சத்து நிறைந்துள்ளது. குறிப்பாக கோடை காலங்களில், உடல் நீரேற்றத்துடன் இருக்க இது உதவுகிறது. உடலில் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்வதால், ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. அதிக நீர்ச்சத்து காரணமாக, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும், சிறுநீரகங்களின் செயல்பாட்டை மேம்படுத்தவும் வெள்ளரிக்காய் உதவுகிறது.வெள்ளரிக்காயில் கலோரிகள் மிகக் குறைவு. இதனால் எடை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த சிற்றுண்டியாகும். இதில் உள்ள நார்ச்சத்து, வயிறு நிறைந்த உணர்வை தந்து, தேவையில்லாத உணவு பழக்கத்தை குறைத்து, எடையை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.வெள்ளரிக்காயில் உள்ள சிலிக்கா மற்றும் அதிக நீர்ச்சத்து காரணமாக, சருமத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது. கண்களுக்கு கீழே வைப்பதன் மூலம் வீக்கம் மற்றும் கருவளையங்கள் குறையும்.

Nov 07, 2025

உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் புடலங்காய்  .

உடல் எடை குறையவும்.மலச்சிக்கலை நீக்கவும், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது, மேலும், சரும் பிரச்சனைகளான பொடுகு மற்றும் அரிப்பையும் போக்க வல்லது.புடலங்காய் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துள்ள காய். எனவே உடல் எடையை குறைக்க உதவுகிறது.இதில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது.நீரிழிவு நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்க புடலங்காய் உதவுகிறது.சருமத்தில் ஏற்படும் பொடுகு மற்றும் அரிப்பு போன்ற பிரச்சனைகளுக்கு புடலங்காய் ஒரு நல்ல தீர்வாகும்.செரிமானத்தை மேம்படுத்துகிறது, உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

Nov 06, 2025

நார்ச்சத்து நிறைந்த கொத்தவரங்காய். 

கொத்தவரங்காய் என்பது தென்னிந்திய உணவுகளில் பரவலாக பயன்படுத்தப்படும் ஒரு காய்கறி. இது சுவையில் சற்று கசப்புத்தன்மை கொண்டிருந்தாலும், அதில் அடங்கியுள்ள ஊட்டச்சத்துக்களின் காரணமாகப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், இரும்பு, கால்சியம், பொட்டாசியம் மற்றும் ஃபோலேட் போன்ற பல முக்கிய சத்துக்களைக் கொண்டிருக்கும் கொத்தவரங்காயை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகளை பற்றி இங்கு விரிவாகக் காணலாம்.கொத்தவரங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, இரத்தத்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் உள்ள'குவாரான்' என்ற கலவை, குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைத்து, இரத்த சர்க்கரை அளவைச் சீராகப் பராமரிக்கிறது.  இதய ஆரோக்கியத்திற்கு தேவையான நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் கொத்தவரங்காயில் நிறைந்துள்ளன. இதில் உள்ள நார்ச்சத்து, உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது.  கொத்தவரங்காயில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவை எலும்புகளின் அடர்த்தியை மேம்படுத்தி, அவற்றை பலப்படுத்துகின்றன.  கொத்தவரங்காயில் உள்ள அதிக நார்ச்சத்து, சாப்பிட்டவுடன் வயிறு நிரம்பிய உணர்வை நீண்ட நேரத்திற்கு தக்கவைக்க உதவுகிறது. இதனால், பசி உணர்வு குறைந்து, அதிகப்படியான உணவு உட்கொள்வதைத் தவிர்க்கலாம். இது, உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது.

Nov 05, 2025

கருப்பு புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால்...

வாழைப்பழம்நன்குபழுத்துதோலில்கருப்புஅல்லதுபழுப்புநிறமாற்றம்அடைந்தபழங்களில்தான்சத்துக்கள்கொட்டிகிடைக்கின்றன.வாழைப்பழத்தில் ரிப்டோபின் அதிகளவில் இருக்கிறது. இது நாள்பட மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களால் இயற்கையான முறையில் தேவையான அளவு செரடோனினை சுரக்க வைக்க முடியாது. கருப்பு புள்ளியுள்ள வாழைப்பழம் உண்பதன் மூலம் ரிப்டோபின், செரடோனினாக மாற்றப்படுகிறது. இதனால் மன அழுத்தம் குறைகிறது.வாழைப்பழத்தில் பிராக்டோஸ், குளுக்கோஸ், சுக்ரோஸ் என மூன்றின் கலவை அதிகமாக இருக்கின்றது. இது உடலுக்கு தேவையான சக்தியை முழுமையாக அளிக்கின்றது. மேலும் உடலின் வளர்சிதை மாற்றம் சீராக்கவும் உதவுகிறது.தினமும் 2 புள்ளி விழுந்த வாழைப்பழம் சாப்பிட்டால் மூளையின் நலன் காக்கப்படுகிறது. இதில் உள்ள பொட்டாசியம் செல்லுலார் செயல்பாட்டை சீராக்குகிறது.ரொம்ப பழுத்த வாழைப்பழம் உண்பதால் இதய ஆரோக்கியம் மேம்படும். உங்களுக்கு இதயத்தில் அடிக்கடி வலி ஏற்பட்டால், பழுத்த வாழைப்பழங்களை உங்கள் உணவில் சேர்க்க வேண்டும். இவை கொலஸ்ட்ராலைக் கூட கட்டுப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளன. இதனால் இருதய நோய்களின் அபாயம் குறையும்.  தசைவலி பிரச்சனை இருந்தால், நன்கு பழுத்த வாழைப்பழத்தை சாப்பிட வேண்டும்.பழுத்த வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் இருப்பதால் வலியிலிருந்து நிவாரணம் பெற அவற்றைப் பயன்படுத்தலாம். பழுத்த மஞ்சள் வாழைப்பழத்தில் உள்ள கரும்புள்ளிகள், புற்றுநோய் கட்டிகளை அழிக்கும் ஒரு பொருளான ட்யூமர் நெக்ரோசிஸ் ஃபேக்டர்(TNF) அதிக அளவில் இருப்பதை குறிக்கிறது. பழுத்த வாழைப்பழங்கள் மலமிளக்கியாகவும் செயல்படும். மலச்சிக்கல் இருப்பவர்கள் வாழைப்பழம் உண்ணலாம். ஆனால் வாழைப்பழமும் பாலும் எடையை கூட்டி விடும் என்பதால் எடை குறைப்பு செய்பவர்கள் கவனமாக எடுத்து கொள்ளுங்கள். சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் பரிந்துரையின் பேரில் உண்ணலாம்.

Nov 04, 2025

இரும்பு சத்து அதிகம் உள்ள அகத்திக்கீரை.

அகத்திக்கீரை கசப்பு சுவையும் ,துவர்ப்பு சுவையும் கொண்டது. இதனை பொறியல் செய்தும், கூட்டு செய்தும் சாப்பிடலாம். இதன் கசப்பு சுவை தெரியாமல் இருக்க துவரம் பருப்பு அல்லது பாசிப் பருப்புடன் தேங்காய் துருவலும் சேர்த்து சமைக்கலாம்.அகத்திக் கீரையில் இரும்பு சத்து அதிகம் உள்ளதால் ரத்த சோகையை குணமாக்கும். தாய்ப்பால் நன்கு சுரக்கும்.நெஞ்சு சளி, தோல்நோய் போன்றவைகளுக்கு அகத்திக்கீரை நல்ல பலனை தரும். ஒரு டம்ளர் மோரில் ஒரு தேக்கரண்டி அகத்திக்கீரை கலந்து அதிகாலையில் குடித்து வந்தால் பித்தம் குணமாகும்.வாய்ப்புண்ணால் அவதிப்படுபவர்கள் அகத்திக்கீரையுடன் தேங்காய் துருவல் சேர்த்து சாப்பிட்டுவந்தால் வாய்ப்புண் விரைவில் குணமாகும்.குழந்தை பிறந்ததும் உடல் பருமன் ஆகாமல் இருக்க வாரத்திற்கு இரண்டு வேளை பாலூட்டும் பெண்கள் அகத்திக் கீரையை உணவில் சேர்த்து வந்தால் உடல் பருமன் ஆகாமல் இருக்கும்.அகத்தி கீரையில் சுண்ணாம்பு சத்து அதிகமாக இருப்பதால், அது பல் மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. உயர் இரத்த அழுத்தம் இருப்பவர்கள் குறைந்தது வாரத்திற்கு ஒருமுறையாவது அகத்தி கீரை எடுத்துக் கொள்வது நல்லது.அகத்திக் கீரையை வாரம் ஒரு முறை சாப்பிட்டுவர உடல் உஷ்ணம் குறையும். கண்கள் குளிர்ச்சியாகும். நீராடைப்பு, பித்த மயக்கம் குணமாகும். சிறுநீர் தடையில்லாமல் போகும்.அகத்திக்கீரை உடல் சூட்டை தணித்து உடலுக்கு குளிர்ச்சியை தரும். பித்தத்தை குறைக்கும். ஜீரண சக்தியை அதிகரிக்கும். கண் நோய்கள் வராமல் பாதுகாக்கும். உடலில் உள்ள விஷங்களை முறியடிக்கும் சக்தியும் இதற்கு உண்டு.அகத்திக்கீரையை வெயிலில் காய வைத்து பொடி செய்து தினமும் இரண்டு கிராம் அளவுக்கு வெந்நீரில் கலந்து குடித்து வந்தால் நெஞ்சுவலி குணமாகும்.அகத்திக்கீரையுடன் தேங்காய்த்துருவல் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அகத்திக்கீரையை அரைத்து புண்கள் மீது தடவினால் அவை விரைவில் ஆறும்.சித்த மருந்துகள் எடுத்துகொள்ளும் போது அகத்திகீரை சாப்பிடக் கூடாது. பொதுவாக அகத்தி கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது.

Nov 03, 2025

குறைவான கலோரி உள்ள வெள்ளரிக்காய்.

காய்கறியிலேயே குறைவான கலோரி சக்தி உள்ளது வெள்ளரிக்காய்தான். 100 கிராம் வெள்ளரிக்காயில் 18 கிராம் கலோரிதான் கிடைக்கும். வெள்ளரிக்காய் குளிர்ச்சியானது. அப்படியே உண்ணத் தூண்டும் சுவை உடையது.நன்கு ஜீரணம் ஆகக்கூடியது. சாதாரணமாக வெள்ளிக்காயைப் பச்சையாகக் கடித்துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், இதை மிக்ஸியில் அரைத்துச் சாறாக்கியும் அருந்தலாம். இளநீரைப் போன்று ஆரோக்கிய ரசமாக வெள்ளரிச் சாறு திகழ்கிறது.தயிரில் வெள்ளரிக்காய்த் துண்டுகளை நறுக்கிப் போடவும். அத்துடன் கேரட், பீட்ரூட், தக்காளி, முள்ளங்கி ஆகியவற்றைச் சிறுசிறு துண்டுகளாக நறுக்கிச் சேர்த்துக்கொள்ளவும். இந்தக் காயில் உள்ள சுண்ணாம்புச் சத்து ரத்தக்குழாய் இறக்கத்தைத் தளர்த்தி உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. மலச்சிக்கலுக்குச் சிலர் ஏதாவது ஒரு பழம் சாப்பிடுவார்கள். அதற்குப் பதிலாகத் தினசரி இரண்டு வெள்ளரிக்காய்களைச் சாப்பிட்டால் மலச்சிக்கலின்றிக் குடல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.உங்கள் எலும்பு, முடி மற்றும் சருமத்தை வலுவாக வைத்திருப்பதிலும் தாக்கம் செலுத்துகின்றன.வெள்ளரிகளில் அதிக நீர்ச்சத்து உள்ளது மற்றும் வைட்டமின் சி மற்றும் கே ஆகியவை உள்ளது. இதில் எடை இழப்புக்கு உதவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. நீங்கள் கூடுதல் கிலோவைக் குறைக்க , உங்கள் தினசரி உணவில் வெள்ளரிக்காயை  சேர்க்க வேண்டும் .இரத்த உறைவு, எலும்பு வளர்சிதை மாற்றம் மற்றும் இரத்த கல்சியம் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெள்ளரிக்காயின் விதைகள் மலச்சிக்கலை எதிர்த்துப் போராட உதவுகின்றன. நீரிழிவு எதிர்ப்பு நன்மைகளைக் கொண்டுள்ளன.வெள்ளரிக்காய் தோல் மற்றும் நமது கூந்தலுக்கு மிக நல்லது. வெள்ளரிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், முடி வளர்ச்சி நன்றாக இருக்கும். மேலும், சருமமும் பளபளப்பாகும். வெள்ளரிக்காய் சாறு குடிப்பதால், சருமத்தில் உள்ள கறைகள் மறைந்துவிடும்.வெள்ளரிக்காய் எல்லாவகையான சத்துக்களையும் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயை சமைக்கக் கூடாது ஏனெனில் அதிலுள்ள பொட்டாசியம் பாஸ்பரஸ் ஆகியவை அழிந்துவிடும். பச்சையாக சாப்பிடுவது மிக நல்லது.கீல்வாதத்தை குணப்படுத்தும் பித்தநீர், சிறுநீரகம் ஆகியன சம்பந்தப்பட்ட அனைத்துக் கோளாறுகளையும் குணமாக்குவதில் தலைசிறந்து விளங்குகிறது.ஊட்டச்சத்து அதிகம் நிறைந்த வெள்ளரிக்காயை சாப்பிடுவதால் உடல் உற்சாகமடைந்து சுறுசுறுப்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகிறது.உடலுக்கு அற்புத நன்மைகளை தரும். வாரம் மூன்று நாட்கள் தொடர்ந்து சாப்பிடுங்கள். கண்பார்வை, சருமம் ஆகியவை ஆரோக்கியமாக திகழும். உடல் எடையும் குறையும்.

Nov 01, 2025

ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும் எலுமிச்சை.

மயக்கம் மற்றும் வாந்தி ஏற்படும் போது எலுமிச்சம் சாறை உப்பு மற்றும் சர்க்கரை கலந்து குடிப்பது நிவாரணம் அளிக்கும்.குறைந்த ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் மயக்கத்திற்கு எலுமிச்சை உடனடி பலன் தரும்.குளவி மற்றும் தேனி கடியால் ஏற்பட்ட வலிக்கு தனி எலுமிச்சம் பழச்சாறை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.எலுமிச்சம் பழச்சாறுடன் ஆலிவ் எண்ணையை சேர்த்து சாப்பிட்டால் பித்தக்கற்கள் கரையும். தினமும் புதிதாக பறிக்கப்பட்ட ஒரு எலுமிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் "சிறுநீரக கற்களை நீக்கி சுத்தப்படுத்தும்.எலுமிச்சை ஜூஸ் பகலில் உணவு சாப்பிடுவதற்கு அரைமணி நேரம் அல்லது 1 மணி நேரத்திற்கு முன்பு, எலுமிச்சை சாற்றில் சிறிது இஞ்சி சாறு கலந்து அதனுடன் சிறிது கல் உப்புசேர்ந்து குடித்தால், ஜீரண மண்டலம் நன்றாக வேலை செய்யும். உணவு நன்றாகசெரிக்கும். மேலும், இதனால் உடலில் தேவையற்ற கொழுப்பு சேராமல்பாதுகாப்பதனால், உடல் பருமன் பிரச்சனை நீங்கும். வயிறு செரிமானபிரச்சனைகள்வராமல் காக்கும்.

Oct 31, 2025

உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ள துவரம் பருப்பு .

உடல் எடை கூட ஒரு சிலர் உடலில் அதிக சதைப்பற்று இல்லாமல் மிகவும் மெலிந்த தேகம் கொண்டிருப்பர். இவர்களின் உடல்வாகு பெருக்க துவரம்பருப்பை பசு வெண்ணெய் விட்டு வதக்கி,அரிசி சாதம் சாப்பிடும் போது இந்த கலவையுடன் பசுவின் நெய்யை கலந்து சாப்பிடுவதால் மெலிந்த தேகம் கொண்டவர்கள் உடலில் சதைபிடிப்பு உண்டாகும். உடலுக்கு வலிமை கிடைக்கும். துவரம் பருப்பில் உள்ள பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது இரத்த ஓட்டத்தை சீராக நடைபெறச் செய்கிறது. இதனால் இரத்த அழுத்தம் குறைந்து, உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனவே ரத்த அழுத்த பிரச்சனை தீர அடிக்கடி உணவில் துவரம் பருப்பை சேர்த்து கொள்வது அவசியம்.உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும். துவரம் பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகம் உள்ளது. புரதமானது செல்கள், திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் துவரம் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும்.வளரும் நாடுகளில் பிறக்கும் குழந்தைகளை அதிகம் பாதிக்கும் ஒரு குறைபாடாக இரத்த சோகை இருக்கிறது. ரத்தத்தில் ஃபோலேட்டுகளின் குறைபாட்டினால் ரத்த சோகை ஏற்படுகிறது. துவரம் பருப்பில்  ஃபோலேட்டுகள் இருக்கின்றன. எனவே வளரும் நாடுகளில் குழந்தைகளிடம் காணப்படும் அனீமியா எனப்படும் ரத்த சோகைக்கு துவரம் பருப்பு ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.துவரையில் உள்ள கனிமச்சத்துக்கள் வீக்கத்தைக் குறைப்பதோடு எதிர்ப்பு அழற்சி தன்மையையும் அதிகம் கொண்டுள்ளன. மேலும் அடிபட்ட இடத்தில் உண்டாகும் வீக்கம் மற்றும் இரத்தகட்டிற்கு துவரம் பருப்பை அரைத்துப் போடுவதால் வீக்கம் விரைவில் குறையும்.சிறிது துவரம்பருப்பு,உளுந்து, கடலைப்பருப்பு, புளி சிவப்பு மிளகாய், சிறிது தேங்காய் கலந்து வதக்கி, துவையல் செய்து சாப்பிட்டு வரஉடலில் இரத்தத்தில் உள்ள கொழுப்பு சத்தை கரைக்கும் சிறுநீர் தொற்றை தடுக்கும் வல்லமை துவரைக்கு உண்டு.

1 2 ... 10 11 12 13 14 15 16 ... 37 38

AD's



More News