புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும் கரும்புச்சாறு
கரும்புச்சாறு சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை விட உடலுக்கு அதிக நன்மைகளை வழங்குகிறது.240 மில்லி கரும்புச் சாறில் 250 கலோரிகள், 50 கிராம் கார்போஹைட்ரேட், இரும்பு, மக்னீசியம், கால்சியம்,பொட்டாசியம்,மாங்கனீசு, வைட்டமின்கள் கரும்பின் மருத்துவ குணங்கள் உள்பட பல நுண்ணூட்ட சத்துக்கள் உள்ளன.
கல்லீரலை வலுவூட்டி நன்கு செயல்பட வைப்பதற்கு கரும்பில் உள்ள சத்துகள் உதவுகின்றது.சோர்வாக இருக்கும்போது கரும்புச்சாறு குடித்தால் கரும்பில் உள்ள குளுக்கோஸ் மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உடனடியாக உடலால் உறிஞ்சப்பட்டு புத்துணர்ச்சியை வழங்கி சோர்வை நீக்கும்.
கரும்புச்சாறில் உள்ள பொட்டாசியமானது செரிமான திறனை மேம்படுத்துகிறது. மேலும், அது குறைந்த கிளை செமிக் குறியீட்டை கொண்டுள்ளதால் இது ரத்த குளுக் கோஸ் அதிகரிப்பதை தடுக்கும் திறன் கொண்டதாகவும் கூறப்படுகிறது...கரும்புச்சாறில் உள்ள கால்சியம் சத்தானது எலும்புகள் மற்றும் பற்களின் உறுதியை அதிகரிக்கச்செய்யும். கர்ப்பிணிகள் கரும்புச்சாறு உட்கொள்வதால் அதில் உள்ள இரும்பு மற்றும் போலிக் அமிலம், சிசுவின் சரியான வளர்ச்சியை ஊக்குவிப்பதாக மருத்துவ ஆய்வுகள்கூறுகின்றன. டாக்டர்கள் பரிந்துரைக்கும் அளவில், கரும்புச்சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.
பொங்கல் சமயத்தில் கிடைக்கும் கரும்புகளை கடித்து சாப்பிட்டாலும் சரி, ஜீஸ் செய்து சாப்பிட்டாலும் இந்த நன்மைகளை பெறலாம் .
0
Leave a Reply