25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

Jun 08, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் பீர்க்கங்காய்

பீர்க்கங்காவில் எல்லா விதமான வைட்டமின்களும், தாது உப்புக்களும் இருப்பதால், தொற்று  நோய் கிருமிகள் தாக்காமல் உடலைக் காத்து, நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.இதன் இலை, விதைகள் மற்றும் வேர் என, அனைத்தும்மருத்துவக் குணம் கொண்டவை. பீர்க்கங்காய் இலைகளை சாறாக்கி சிறிது நேரம் சூடுபடுத்தி, அதில் ஒரு தேக்கரண்டி எடுத்து சாப்பிட்டு வர, நீரிழிவு கட்டுக்குள் இருக்கும்.மஞ்சள் காமாலை நோய்க்கு, பீர்க்கங்காய் சாறு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது. சர்க்கரை நோயாளிகள் பாகற்காய்க்கு பதில், இதை உணவில் சேர்த்து கொள்ளலாம்.சொறி, சிரங்கு, புண், காய்ச்சல் உள்ளவர்கள், பீர்க்கங்காய் சேர்த்துக் கொள்ளலாம். புண்கள், சொறி, சிரங்கு உள்ள‎ இடங்களில் பீர்க்கங்காய் இலை சாற்றை பூச,நிவாரணம் கிடைக்கும்.பீர்க்கங்காய் விதைகளில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது. தோல் நோய், தொழுநோய் முதலியவற்றுக்கு மேல் பூச்சு எண்ணெயாக பயன்படுகிறது.கண் பார்வை நன்றாக தெரியவும், நோய் எதிர்ப்பு சக்தி மேம்படவும், பீர்க்கங்காயை சமையலில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.தோல் நோயாளிகள் தவறாமல் இதை சேர்த்துக் கொண்டால், விரைவில் குணமடையலாம்.வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து, வயிற்றில், புண்கள் வராமல் காக்கும். மேலும், உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.

Jun 06, 2025

முந்திரி பழம் .

முந்திரி பழம் கோடை காலங்களில் அதிகளவில் உற்பத்தி ஆகும். இதனை கொல்லாம் பழம் என்றும் அழைப்பார்கள். இந்த பழத்தில் கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் பி, இரும்பு, கார்போஹைட்ரேட், பொட்டாசியம் போன்ற சத்துகள் நிறைந்துள்ளன. இதில் நார்ச்சத்து அதிகளவில் இருப்பதால் நீரின் அளவு அதிகமாக இருக்கும். இதனை கோடை காலங்களில் சாப்பிடுவதால் உடலுக்கு குளிர்ச்சியைத் தரும். இதை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி முந்திரி பழத்தில் அதிகமாக உள்ளது. இதில் இருக்கும் பொட்டாசியம் ரத்த அளவை கட்டுப்படுத்துகிறது. எலும்பு வளர்ச்சிக்கும் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்கவும் முந்திரி பழம் பயன்படுகிறது. 

Jun 05, 2025

பன்னீர் ரோஜாவில் உள்ள மருத்துவ குணங்கள்

பன்னீர் ரோஜா  இந்திய மருத்துவத்தில் ஒரு சிறப்பு வாய்ந்த மூலிகையாக பயன்படுத்தப்படுகிறது. பன்னீர் ரோஜா மலச்சிக்கலை தீர்க்கிறது. இதன் மொட்டுகளை அரைத்து சாப்பிடுவதன் மூலம் மலச்சிக்கலில் இருந்து விடுபடலாம். பன்னீர் ரோஜா அஜீரணத்தைச் சரிசெய்யும் தன்மை கொண்டது. பன்னீர் ரோஜா சாறு அல்லது கசாயம் குடிப்பதன் மூலம் பித்தம் மற்றும் உடலில் சூட்டை குறைக்க முடியும். பன்னீர் ரோஜாவில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் இளமையை  இருக்க உதவியாக இருக்கும். பன்னீர் ரோஜா சருமத்துக்கு நல்ல பொலிவு மற்றும் மென்மை அளிக்கிறது. இதன் பூக்களை எடுத்து அதைப் பசும்பாலில் கலந்து முகத்தில் பூசினால் சருமம் பளபளப்பாக மாறும்.பன்னீர் ரோஜாவில் அடங்கியுள்ள வைட்டமின் சி, சருமத்திற்கு அழகையும் பாதுகாப்பையும் அளிக்கக்கூடியது. அரைத்த பன்னீர் ரோஜா இதழ்கள் மற்றும் தயிர் ஆகியவற்றை சம அளவில் கலந்து முகத்தில் தடவினால் முகத்தில் ஏற்பட்ட கரும்புள்ளிகள் மறைந்து விடும். சருமம் பளபளப்பை இழந்து எண்ணெய் வடிவதால் முகப்பருக்கள் தோன்றுகின்றன. இந்த பிரச்சனை அகல இரு பன்னீர் ரோஜா இதழ்கள், கற்றாழை ஜெல் ஒரு டீஸ்பூன் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து தடவலாம்.20 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் முகத்தை கழுவினால் பருக்களால் ஏற்படும் சரும பாதிப்புகள் அகலும்,  

Jun 03, 2025

வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்கள்.

 கருங்காலி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, அல்சர் பிரச்சனையை தீர்க்க வல்லது. மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருத்துவகுணம் கொண்டது.ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய் தான்றிக்காய்,நெல்லிக்காய் போன்றவைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின் ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள கெட்ட நீரான விஷநீர் வெளியேறும். மற்றும் சளி, காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவற்றை வெளியேற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடம்பை சீர்படுத்தும்.இதை உபயோகித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீர்படும் மற்றும் உடம்பிலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும், உடம்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடம்பில் தேங்கியுள்ள அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றுகிறது.கருங்காலி மரத்தின் வேரை நீரில் காய்ச்சி குடித்துவர இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கருங்காலி மரப்பட்டையின் பொடியை நாவல் பட்டை பொடி, வேப்பம் பட்டை பொடி எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் ஆறாத புண்ணாகிய புண்ணானது விரைவில் ஆறும்.

Jun 02, 2025

இதய ஆரோக்கியத்திற்கு கடுகு எண்ணெய்

இதய ஆரோக்கியத்தை பொருத்தவரை, பல ஊட்டச்சத்துக்கள் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று கூறப்பட்டு வருகிறது.பழங்கள், காய்கறிகள்,கடுகு எண்ணெய்,உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது .இதில்ஆக்சிஜனேற்றிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் கொழுப்பு அமிலங்களை கொண்டுள்ளதால், இந்த எண்ணெயை பயன்படுத்துவதால் இதயத்திற்கு நல்லது. இந்த எண்ணெயில் ஆரோக்கியமான கொழுப்புகள் அதிகம் இருப்பதால், இதனை பயன்படுத்துவது இதய நோய் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது.மேலும், ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும் பண்புகள் கடுகு எண்ணெயில் உள்ளது. ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுவதுடன், உயர் ரத்த அழுத்தம் மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் ஆகிய நோய்களை கடுகு எண்ணெய் பயன்படுத்துவதால் தவிர்க்கலாம். என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Jun 01, 2025

ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட. நன்னாரி வேர்

மூலிகைகளில் மிகுந்த மணம் கொண்டது நன்னாரி.நல் + நாரி, அதாவது நல்ல மணம் கொண்டது என்று பொருள். இதற்கு ஆனந்த மூலம், பாதாள மூலிகை என்ற பெயர்களும் உண்டு. இதன் தாவரவியல் பெயர் ஹெமிடெஸ்மஸ் இன்டிகஸ் என்றும் இந்தி யன் சரசபெரில்லா எனவும் அழைக்கப்படுகிறது.நன்னாரி வேர் ஏராளமான மருத்துவ குணங்களை கொண்டது. இது வெளிநாட்டினருக்கு தெரிந்தும் அவர்களுக்கு எளிதில் கிடைப்பது இல்லை. ஆனால், தமிழ்நாட்டில் எங்கும் கிடைக்கும் இதனை பலரும் பயன்படுத்துவது இல்லை.  அன்றாடம் பயன்படுத்த வேண்டிய மூலிகையில் இது மிக முக்கியமான ஒன்று.கொடி வகையை சேர்ந்த நன்னாரியின் வேரானது சித்தா ஆயுர்வேத மருத்துவத்திலும், ஓமியோபதி மருத்துவத்திலும் அதிக அளவில் பயன்படுகிறது. நன்னாரி வேரை குடிநீரில் போட்டு வைத்து அந்த நீரை குடித்து வந்தால் உடல் வெப்பத்தை சமநிலைப்படுத்தும்.குடிப்பதற்கு இதமாகவும், சிறுநீர் போக்கை அதிகரிக்கவும், ரத்தத்தில் கலந்த நச்சுக்களை அகற்றிரத்தத்தை தூய்மைப்படுத்தவும் உதவுகிறது.கோடைக்காலம் வந்து விட்டால் நா வறட்சியை தணிக்க நன்னாரி குடிநீர் மிக நல்லது. இது உடலின் உள் வெப்பத்தை தணிக்கிறது. ஒரு புதிய பானையில் சுத்தமான மெல்லிய துணியில் நன்னாரி வேரை, கட்டிப் போட்டுவிட்டு அந்த நீரை குடித்தால் உடல் குளிர்ச்சி பெறும்.உடலுக்கு உடனடி ஆற்றல் தரக்கூடிய சில சத்தூட்டங்கள் நன்னாரி வேரில் காணப்படுகின்றன. இதனால், வெளிநாடுகளில் விளையாட்டு வீரர்கள் நன்னாரி கலந்த பானங்களை அடிக்கடி குடிக்கின்றனர். உடற்பயிற்சி செய்யும்போது உடலில் ஏற்படும் அதீத வெப்பம் தணிந்துஉடலுக்கு புத்துணர்வு கிடைக்க நன்னாரி உதவுகிறது.

May 30, 2025

கொழுப்பை குறைக்கும் கொத்தவரை

கொத்தவரை செடி வகை தாவரம்.சீனிஅவரைஎன்றும்அழைப்பர்.செடிமூன்றுமுதல், நான்குஅடிஉயரம்வரைவளரும்.இது, நைட்ரஜன் சத்தை மண்ணில்அதிகரிக்கச் செய்து, வளம் பெருக்கும்.மிதமான சூரிய ஒளியும், ஈரப்பதமானகாலநிலையும் இருந்தால் பலவகைமண்ணிலும் வளரும். இந்தியாவின்வடமேற்கு பகுதி மற்றும் அண்டை நாடானபாகிஸ்தானில் அதிகம் பயிரிடப்படுகிறது.கொத்தவரையில் வைட்டமின்கள், கால்ஷியம், பாஸ்பரஸ், பொட்டாஷியம், இரும்பு, தாது உப்புக்கள் அதிகம் உள்ளன. குறைந்த எரிசக்தியும், அதிக நார்ச்சத்தும் உடையது. புரோட்டீன், கார்போ ஹைட்ரேட் சத்துகளும் நிறைந்துள்ளன.நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு இதமான உணவுகளில் ஒன்று. உடல் எடை, கொழுப்பை குறைக்கும், மலச்சிக்கலை போக்கும். இதில் உள்ள நார்ச்சத்து,ரத்தத்தில் கெட்ட கொழுப்பு அளவை குறைக்கும். உயர் ரத்த அழுத்தத்தை மட்டுப்படுத்தும். இதய சம்பந்தமான நோய்களை தடுக்க உதவும். போலிக் அமிலம் உள்ளதால், கர்ப்பிணிப் பெண்கள் உணவில் அதிகம் சேர்த்து கொள்ளலாம்.கொத்தவரையில்உள்ள சத்துகள், மூளை மற்றும் நரம்புகளை அமைதிப்படுத்தும். மன அழுத்தத்தை குறைக்கும். இதை அளவோடு உண்பதே உடலுக்கு உகந்தது.

May 27, 2025

நோய்த் தொற்றையும் எதிர்க்கும் ஆற்றலை தரும் வெள்ளப் பூண்டு.

வெள்ளைப் பூண்டு, வெங்காய குடும்பத்தைச் சேர்ந்த தாவரம். சித்த மருத்துவத்தில், 'லசுனம்' என அழைக்கப்படுகிறது. மத்திய ஆசியா பகுதியை தாயகமாக உடையது. பின், உலகெங்கும் பரவியது. உற்பத்தியில் அண்டை நாடான சீனா உலக அளவில் முதலிடத்திலும், நம் நாடு இரண்டாம் இடத்திலும் உள்ளன.பூண்டில் பல வகைகள் உள்ளன.அவற்றில் மலைப்பூண்டும், நாட்டுப் பூண்டும் உணவில் சிறப்பிடம்பெறுகின்றன.மலைப்பூண்டின் பல், பெரிதாக இருக்கும் .நாட்டுப்பூண்டின் பல், சிறிதாக இருக்கும்.உணவில் சேர்த்துக் கொள்வதால், உணவுக்கூழ் வயிற்றில் எளிதாக கரையும். வயிற்றுப் பொருமல் நீங்கும். நோய் தடுப்பு மண்டலத்திற்கு உறுதுணையாவதுடன், நோய்த் தொற்றையும் எதிர்க்கும் ஆற்றலை தருகிறது.இதய தொடர்பான நோய்களை தடுக்கும் மிகச்சிறந்த மருந்து, வெள்ளைப் பூண்டு.ரத்தத்தில் வெள்ளை அணு செயல்பாட்டை அதிகரிக்க செய்கிறது. உடலில் சேரும் ஊளை சதையை கரைக்கிறது. தண்டுவட செயல்பாட்டுக்கு சிறந்த மருந்தாக உள்ளது.ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நீரிழிவை குணப்படுத்துகிறது. மாதவிடாய் கோளாறுக்கும் மருந்தாகிறது.வடக்கு ஆப்ரிக்க நாடான எகிப்து பகுதியில் உள்ள பிரமிடுகளில், இறந்த உடல்களை பதப்படுத்த பூண்டு முதன்மையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் கடவுளுக்கு செலுத்தும் காணிக்கைப் பட்டியலில் பூண்டுக்கு முதன்மை இடம் தந்துள்ளனர் எகிப்தியர்.தமிழகத்தில் வீட்டு வாசலில் வேப்பிலையைக் கட்டி தொங்க விடுவது வழக்கம். அதுபோல, பண்டைய கிரேக்கத்தில் பூண்டு தொங்கவிடும் வழக்கம் இருந்துள்ளது.முதல் உலகப்போரில் வீரர்கள் காயத்தை குணப்படுத்தும் மருந்தாக பயன்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடான இங்கிலாந்தின், கபா துறைமுகத்தில் இருந்து, மெசினா துறைமுகம் வந்தடைந்த கப்பலில் ஏற்றியிருந்த சரக்கில், பிளேக் நோய் தொற்று இருந்தது. இது பரவியதால் ஏராளமானோரை காவு வாங்கியது. இச்சம்பவம், 'பிளாக் டெத்' என வரலாற்றில் நினைவு கூறப்படுகிறது. பேரழிவை ஏற்படுத்திய பிளேக் நோயில் இருந்து தப்பிக்க மாமருந்தாக மக்களுக்கு பயன்பட்டது பூண்டு. 

May 26, 2025

நுரையீரலை பாதுகாக்க

 நுரையீரல் என்பது மனிதனின் உடலில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்ற நிலையில், நுரையீரலை பாதுகாக்க சில உணவுகளை எடுத்துக் கொள்ளவேண்டும்என்றுஅறிவுறுத்தப்பட்டுள்ளது.பூண்டு, இஞ்சி, மஞ்சள் ஆகியவற்றை உணவுடன் சேர்த்துக் கொண்டால், அவை நச்சுக்களை அழிக்கும் தன்மை உடையவை என்பதால், நுரையீரலுக்கு பாதுகாப்பாக இருக்கும். அதேபோல், ஆப்பிள் தொடர்ந்து சாப்பிட்டால், நுரையீரல் நோய்கள் வராமல்தடுக்கப்படும்.பிளாக்பெர்ரி, ப்ளூபெர்ரி, ராஸ்பெர்ரி போன்ற உணவுகளில் ஆன்ட்டி ஆக்சிடன்ஸ் அதிகமாக இருப்பதால், திராட்சையில் மினரல்ஸ் மற்றும் வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், நுரையீரலை சுத்தம் செய்ய பயன்படும்.மாதுளம் பழம், பிஸ்தா, வரமிளகாய் மற்றும் வைட்டமின் சி அதிகம் உள்ள வெங்காயம்ஆகியவையும்நுரையீரலைபாதுகாக்கும்உணவுகள்ஆகும்.நுரையீரல்பாதிக்கப்படாமல்இருக்கவேண்டுமென்றால், சோடா மற்றும் மதுபானத்தை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாகவெறும் நீரை மட்டுமே பருக வேண்டும்.

May 25, 2025

உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் தரும் வேர்க்கடலை

வேர்க்கடலை சாப்பிடுவதால் உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன. வேர்கடலை சிறந்த புரதம் மூலமாகும், இதனை சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றலையும், சுறுசுறுப்பையும் பெறலாம்.வேர்கடலையில் மாங்கனீஸ், மெக்னீசியம், பாஸ்பரஸ், நியாசின், இரும்புச்சத்து போன்ற முக்கிய தாதுக்கள் உள்ளன. இவை எலும்பு மற்றும் உடல் வளர்ச்சிக்கு உதவுகின்றன.வேர்கடலை நீரிழிவு உள்ளவர்களுக்கு.ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்வதில் உதவுகிறது.வேர்கடலை சாப்பிடுவது நன்மையான கொழுப்புகளை வழங்கி இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.இதன் நியாசின் மற்றும் ஆன்டிஆக்ஸிடெண்ட்கள் மூலமாக, திசுக்களில் பாதிப்புகள் வராமல் பாதுகாக்க உதவும்.வேர்கடலை சுலபமாக கிடைக்கக்கூடிய, சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கிறது, அதிக அளவு நார்ச்சத்து மற்றும் புரதம் உள்ளதால், வயிற்று நிறைவுடன் உணர முடியும். ஜங்க் உணவுகள்சாப்பிடும் குணத்தை குறைக்கலாம்.இது அதிக உணவு அருந்துவதை கட்டுப்படுத்தி எடை குறைய உதவுகிறது.       

1 2 ... 16 17 18 19 20 21 22 ... 37 38

AD's



More News