25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சஞ்சீவி மலையில் படி பூஜை விழா. >> ராஜபாளையம் 6-வது மைல் குடிநீர் தேக்கம் நிரம்பி, 2-வது குடிநீர் தேக்கத்துக்கும் தண்ணீரை சேமித்து வைக்கவும் நகராட்சி தலைவர் பவித்ரா ஷியாம், ஆணையாளர் நாகராஜன் உத்தரவு. பொதுமக்கள் மகிழ்ச்சி. >> பாரம்பரிய கொத்தலு திருவிழா, ராஜூக்கள் சமூகம் சார்பில்ராஜபாளையத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டது. >> ராஜபாளையம் சர்வசமுத்திர அக்ரஹாரம் தெரு சந்தான வேணுகோபால சுவாமி கோயிலில் மகாதேவ அஷ்டமி. >> விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு ஒன்றியத்திற்குட்பட்ட கோபாலபுரம் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான 10 நாட்கள் தொழில் முனைவோர் பயிற்சி முகாம். >> ராஜபாளையம் வேட்டை வெங்கடேச பெருமாள் கோயிலில் திருக்கல்யாண விழா. >> நீர்வரத்து அதிகரித்ததால், அய்யனார் கோயில் ஆற்றைக் கடந்து வழிபாட்டிற்கு செல்ல வனத்துறை தடை விதித்தனர். >> இராஜபாளையம் பீமா ஜூவல்லரி இராஜபாளையம் ஓராண்டை நிறைவு செய்கிறது. >> நீரின் ஆழம் குறித்து எச்சரிக்கை பலகை தேவை . >> அய்யனார் கோயில் ஆற்றில் கனமழையால் வெள்ளப்பெருக்கு.  >>


ஆரோக்கியம்

May 19, 2024

மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவை

மணத்தக்காளிக் கீரையின் ஒவ்வொரு பாகமும் மருத்துவப் பயன் கொண்டது. இலை, தண்டு, காய், கனி, வேர் அனைத்துமே உபயோகப்படக்கூடியது. கசப்புத்தன்மை கொண்டது  மணத்தக்காளிக் கீரை.சருமத்தில் ஏற்படும் பிரச்னைகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்திற்கு மிகச்சிறந்த கீரைகளுள் கீரையும் ஒன்று. குளிர்ச்சியை சுபாவமாகக்கொண்ட மணத்தக்காளிக் கீரை வறண்ட பகுதிகளிலும் விளையக்கூடியதுமணத்தக்காளிக் கீரையின் காய், பச்சை மணியைப் போல  இருக்கின்ற படியால் மணித்தக்காளி என்று அழைப்பார்கள். ஆகமிளகுபோல இருப்பதால் மிளகு தக்காளி என்றும் சொல்வார்கள். வறண்ட இடத்திலும் விளையும் மணத்தக்காளிக் கீரை, நீருள்ள இடங்களிலும் ஏராளமாய் செழித்து வளரும். வெள்ளை நிறத்தில் மருபூக்கள் பூக்கும். . இது பொதுவாக குப்பைகள் இருக்கும் இடத்தில் வளர கூடியது.மணத்தக்காளிக் கீரையின் அனைத்துப் பகுதிகளும் உண்பதற்கு ஏற்றவையே. இதில் அதிகளவு புரதம், மாவுச்சத்து, தாதுப்உப்புக்கள் நிறைந்துள்ளன. மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்து கூட்டு, பொரியல், குழம்பு வைக்கலாம்.மணத்தக்காளிக் கீரையினை சாறெடுத்து வாயிலிட்டு சிறிது நேரம், தொண்டையில் வைத்து, கொப்புளித் துவந்தால் வாய்ப்புண் ஆறும். கூடவே வாய் துர்நாற்றமும் நீங்கும்.மணத்தக்காளிக் கீரையின் சாறை எடுத்து, அதிகாலையில் வெறும் வயிற்றில் ஒரு அவுன்ஸ் பருகிவந்தால் வயிற்றுப்புண் சீக்கிரம் ஆறிவிடும். குறைந்தது பத்து நாட்களாவது பருக வேண்டும்.இதய பல வீனம் கொண்டவர்கள் வாரம் மூன்று முறை இந்த மணத்தக்காளிக் கீரையுடன் இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு கலந்து சமையல் செய்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலமாகும்.உடல் வலி தீரும். களைப்பை அகற்றும். உடலிலுள்ளநச்சுநீரை வெளியேற்றும். வாந்தியைப் போக்கும். இக்காயை வற்றலாக்கி வறுத்து உண்ணலாம் .காது வலியைப் போக்கும். வயிற்றுப் பொருமலை தணிக்கும். காய்ச்சலைப்போக்கும்.கருப்பப்பைக்கு வலிமை தரும்.பிரசவத்தை எளிமையாக்க உதவுகிறது.மலச்சிக்கலைப் போக்கும்.மணத்தக்காளிக் கீரையின் வேர், மூலிகை மருந்துகள் தயாரிக்க பெரும் பங்காற்றுகிறது.பொதுவாய் மணத்தக்காளிக் கீரையை அவ்வப்போது சாப்பிட்டுப் வந்தால், உடல் நலம் பெறுகிறது. ரத்தம் சுத்தமாகி முகம் வசீகரமாகிறது. மணத்தக்காளிக் கீரை சிறந்த மருத்துவ உணவாக நமக்கு பயன்படுகிறது. எனவே மணத்தக்காளிக் கீரையை அடிக்கடி பயன்படுத்துங்கள்.

May 17, 2024

சர்க்கரை நோயை கட்டுக்குள்வைத்திருக்க உதவும், இயற்கையான உணவுகள்

கசப்பு நிறைந்தஇலைகள், சிலவகைநோய்களுக்கு அருமருந்தாகின்றன..குறிப்பாக, ரத்தத்தில்இன்சுலின் அளவைகட்டுப்படுத்தவும் இதுபோன்றகசப்பு இலைகள்உதவுகின்றன..உதாரணத்துக்குமுருங்கைக்கீரை, வேப்பிலை, கறிவேப்பிலை, அகத்திக்கீரையைசொல்லலாம். இதில், மாவிலையையும் சேர்த்துகொள்ளலாம். வெறும்வயிற்றில் நான்கைந்துஇலைகளை மென்றுவிழுங்குவது, ரத்தத்தில்சர்க்கரையின் அளவைசீராக வைத்திருக்கஉதவுகிறதாம்..அமிர்தவல்லிஇலையை . டீ போலதயாரித்து குடிக்கலாம்,அல்லது ஜூஸ்தயாரித்தும் குடிக்கலாம்அல்லது கறிவேப்பிலையைபோல, இந்தஇலையையும் கழுவி, மென்று சாப்பிடலாம்.ரத்தத்தில் உள்ளஇன்சுலின் அளவைகட்டுப்படுத்த இந்தஇலையும் உதவுகிறது. இந்த அமிர்தவல்லிஇலையை பவுடராக்கி, ஒரு கிளாஸ்தண்ணீரில், ஒருஸ்பூன் கலந்துஇரவு தூங்கும்முன்பு ஊறவைத்துவிடவேண்டும். மறுநாள்காலை எழுந்ததுமேகுடித்து வந்தால்நீரிழிவு நோய்கட்டுக்குள் இருக்கும். ஆனால், இதுபோன்றுஉள்ளுக்குள் மருந்தாகஎடுத்து கொள்ளும்போதுடாக்டர்களின் ஆலோசனையைபெறுவது கட்டாயமாகும்.நாவல் கொட்டைகளும்நீரிழிவு நோயாளிகளுக்குமிகச்சிறந்த மருந்தாகின்றன..நாவல் கொட்டையைதூள் செய்து, சாப்பிட்டு வருபவர்களைபரிசோதனை செய்ததில்அவர்களது சர்க்கரைஅளவும், சிறுநீரில்வெளியேறிய சர்க்கரைஅளவும் குறைந்திருந்ததாம். நாவல் பழத்தின்கொட்டைகளை,7 நாட்கள்நிழலில் காயவைத்து, அதை இரண்டாகஉடைத்து வெயிலில்காய விடவேண்டும்.. இந்தகொட்டைக்குள் காணப்படும்பச்சை நிறம்முழுமையாக காயவேண்டும். இந்தகொட்டைகளை மிக்ஸியில்அரைத்து, சலித்துகொள்ள வேண்டும். இதில், தினமும்2 வேளை, ஒருடீஸ்பூன் அளவுவெந்நீரில் கலந்துகுடித்து வந்தால், ஒரு மாதத்தில்சர்க்கரையின் அளவுகட்டுக்குள் வந்துவிடும். நாவல் கொட்டைபவுடரை, மருத்துவரின்முறையான ஆலோசனையைபெற்று சாப்பிட்டு, பயனடையலாம்.சர்க்கரையை கட்டுக்குள்வைத்திருக்க, கருஞ்சீரகவிதைகளும் உதவுகின்றன.. இதற்கு முக்கியகாரணம், இந்தவிதையிலுள்ள தைமோகுயினன்என்ற பொருள்தான்.. எனவே, ரத்தத்தில்சர்க்கரையின் அளவுஅதிகரித்துவிட்டால், எதிர்ப்புசக்தி நிறைந்தஇந்த கருஞ்சீரகத்தைபயன்படுத்தலாம்.. இந்தகருஞ்சீரகத்தை அரைத்து, ஒரு டம்ளர்தண்ணீரில், கால்டீஸ்பூன் அளவுகலந்து சாப்பிட்டுவந்தாலும், ரத்தசர்க்கரை அளவுகட்டுக்குள் வரும்.. ஆனால், சர்க்கரைஅளவு கட்டுக்குள்இருப்பவர்கள், கருஞ்சீரகத்தைதொடர்ந்து எடுத்துகொள்ள கூடாது. இதனால், ரத்தத்தில்சர்க்கரை அளவுகுறைந்துவிடும். எனவே, மருத்துவர்களின் ஆலோசனையைபெற்றே இதனைபயன்படுத்த வேண்டும்.

May 16, 2024

மூளைக்குள் கட்டி (Brain Tumor) நோய் வருவதைத் தடுக்க.....

உடலின் மற்ற பாகங்களில் வரும் நோய்களை விட மூளைக்குள் ஏதாவது பிரச்னை என்றால் அதைக் குணப்படுத்துவது ஒரு சவாலாகவே பார்க்கப்படுகிறது. மூளைக்குள் கட்டி(BrainTumor) என்ற அபாயகரமான நோய் வருவதைத் தடுக்க நாம் உண்ண வேண்டிய உணவுகள் . ஒரு நோய் வந்த பின் அதைக் குணப்படுத்துவதை விட, அது வராமல் தடுப்பதே நலம் அதிகளவு ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அடங்கிய ஸ்ட்ரா பெரி, ப்ளூ பெரி, ராஸ் பெரி, பிளாக் பெரி போன்ற பெரி வகைப் பழங்கள்.லைக்கோபீன் என்றொரு கூட்டுப்பொருள் தக்காளியில் மிக அதிகம் உள்ளது. இது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டது.காலிஃபிளவர், புரோக்கோலி, பிரஸ்ஸல் ஸ்பிரௌட் போன்ற க்ரூஸிஃபெரஸ் காய்கறிகள் உடல் மற்றும் மூளையின் ஆரோக்கியம் காக்க மிக அதிக அளவில் உதவி புரிபவை.மூளை ஆரோக்கியத்தை அதிகளவு மேம்படுத்தவும், ஒட்டுமொத்த உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை வலுப்படுத்தவும் உதவக் கூடியது மஞ்சள் என்ற மசாலாப் பொருள்.பீன்ஸ் காயானது உடலில் கட்டிகளும் கேன்சரும் உருவாவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளதோடு, ஏற்கெனவே கேன்சர் நோயாளியாயிருந்து குணமான ஒருவருக்கு மீண்டும் அந்நோய்த் தாக்குதல் வராமலிருக்கவும் பாதுகாப்பளிக்கிறது.பாதாம், வால் நட், பிஸ்தா போன்ற தாவர விதைக் கொட்டைகள் மூளையில் கேன்சர் கட்டிகள் உருவாகும் அபாயத்தைத் தடுத்து நிறுத்தக்கூடியவை. மேலும் மூளையில் உண்டாகும் வேறு எந்தவிதமான கோளாறுகளுக்கும் தீர்வு அளிக்கும் வல்லமையும் கொண்டவை . மூளை உள்பட, உடலின் எந்த பகுதியிலும் உற்பத்தியாகும் கேன்சர் செல்களை முற்றிலும் அழிக்கக்கூடிய சக்தி பூண்டில் உள்ள அல்லிசின் (Allicin) என்ற பொருளுக்கு உண்டு.மூளைக்குள் கேன்சர் செல் வளர்வதைத் தடுத்து நிறுத்தி அவற்றை அழிக்கக்கூடிய வல்லமை கொண்டது ஃபிளாக்ஸ் விதைகள் (Flax seeds).மூளைக்குள் கட்டி(BrainTumor) நோய் வருவதைத் தடுக்க உணவுகளைத் தினசரி நாம் எடுத்துக்கொள்ளும் உணவுடன் சேர்த்து உட்கொண்டு நம் மூளை மற்றும் உடலின் ஆரோக்கியம் காப்போம்.

May 10, 2024

கொடியில் படரும் வெற்றிலை பூப்பது, காய்ப்பது, கனிவது என்று எதுவும் இல்லாத வெறும் இலைதான்

வெறும் இலையிலேயே அவ்வளவு மருத்துவ குணங்கள் நிரம்பி உள்ளன..வெற்றிலையை ஆற்றுப்படுகையில் வியாபார ரீதியாக அதிகம் பயிரிடுகிறார்கள். கருப்பு நிறமுடன் நல்ல காரமாக இருப்பது கம்மாறு வெற்றிலை. கற்பூர மணத்துடன் சிறிது காரமாகவும் இருப்பது கற்பூர வெற்றிலை ஆகும். வெற்றிலைக்கு நல்ல மணமும் காரமும் உண்டு. இது கொடி பதியம் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது. வெற்றிலை சீதம் நீக்கும், வெப்பம் தரும், அழுகல் அகற்றும், உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தை தூண்டும், நாடி நரம்பை வளமாக்கும், வாய்நாற்றம் போக்கும், வெற்றிலைச் சாறு சிறுநீரை பெருக்குவதற்குப் பயன்படுகிறது. வெற்றிலை சாற்றுடன் நீர் கலந்த பாலையும் தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.கம்மாறு வெற்றிலை சாறு15 மில்லிஅளவு வெந்நீரில் கலந்து கொடுக்க வயிறுஉப்புசம், மந்தம், ஜன்னி, சீதளரோகம், தலைவலி, நீர் ஏற்றம், வயிற்று வலி ஆகியவை குணமாகும்.வெற்றிலையில் சிறிதுஆமணக்கு எண்ணெய் தடவி லேசாகவாட்டி இரவில் தூங்கும்போது கட்டிகளின் மேல்வைத்து கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ்வெளிப்படும்.சுக்கு, மிளகு, திப்பிலி சம அளவு கலந்த திரிகடுகு சூரணத்துடன் வெற்றிலைச் சாறு, தேன்கலந்து சாப்பிட ஆஸ்துமா குணமாகும்.வெற்றிலைச் சாறுநான்கு துளி காதில் விட எழுச்சியினால் வரும் வலி குணமாகும். வெற்றிலைகள் இரண்டைகிள்ளி தேங்காய் எண்ணெயில் போட்டுகாய்ச்சி இறக்கி ஆறிய பின்இரண்டு சொட்டு எண்ணெய் காதில்விட காதில் சீழ் வடிதல்குணமாகும்.வெற்றிலை சாற்றைமூக்கில் விட, விடாமல் மூக்கில் வழியும் சளி குணமாகும்.வெற்றிலையின் வேரைசிறிதளவு எடுத்து வாயிலிட்டு மென்றுவர குரல் வளம் உண்டாகும். எனவே, இசைக்கலைஞர்கள் இதனைஅதிகம் பயன்படுத்துகிறார்கள்.நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்கு வெற்றிலைச் சாறும்இஞ்சிச் சாறும் சம அளவுகலந்து அருந்தி வர நன்மைஏற்படும்.அஜீரணத்தைப்  போக்கிபசியைத் தூண்ட வெற்றிலையோடு மிளகுசேர்த்து கஷாயம் செய்து குடித்து வரலாம்.வெற்றிலை, துளசி, கற்பூரவல்லி இவை மூன்றையும் சம அளவு எடுத்து நன்கு சுத்தம் செய்து சுடுதண்ணீரில்போட்டுகொதிக்கவைக்கவும்.பின்னர் மூன்றையும் எடுத்து நன்றாக சாறு பிழிந்து சிறு குழந்தைகளுக்குக் கொடுக்க நெஞ்சு சளி அப்படியே கரைந்து விடும். பெரியவர்களும் சற்று அளவு அதிகமாக அருந்தினால் நல்ல பலன் கிடைக்கும்.ஒரு வெள்ளைப் பூண்டு பல்,5 வெற்றிலை காம்புகள் அதே அளவு2 சிட்டிகை திப்பிலி மூன்றையும் அரைத்து உள்ளுக்கு காலை, மாலை கொடுக்க குழந்தைக்கு சளி குறையும்.இரண்டு வெற்றிலையை நசித்து சாறெடுத்து சிறிதளவு கஸ்தூரி கலந்து காலை ஒரு வேளை மட்டும் உள்ளுக்குக் கொடுத்தால் குழந்தையின் வாந்தி நின்று விடும்.வெற்றிலையை அரைத்து கீழ்வாத வலிகளுக்கும் வீக்கம் முதலியவற்றுக்கும் வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்து கசக்கி பிழிந்து சாறு எடுத்து பத்து மாத குழந்தைகளுக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி இருமல் குணமாகும். அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.காரமுள்ள கருப்பு வெற்றிலை பத்து எடுத்து நைசாக அரைத்து காலை, மாலை சருமத்தில் இரண்டு நாள் பூசி ஒரு மணி நேரம் கழித்து குளித்தால் அரிப்பு நீங்கும்.கஸ்தூரி சிறிதளவு ஒரு வெற்றிலையில் வைத்து மென்று சாப்பிட்டு வர இதய வலி குணமாகும்.இரண்டு வெற்றிலையை வாங்கி வாயில் அதக்கி வைத்துக்கொண்டு சாரத்தை விழுங்கிக்கொண்டே இருக்க எப்பொழுது பிரயாணம் செய்தாலும் வாந்தி வராது.

May 09, 2024

லிவருக்கு தீங்கு விளைவிக்கும் உணவுகள் 

 கல்லீரல்.உடலில் புரதங்கள், கொலஸ்ட்ரால் மற்றும் பி த்த உற்பத்தி முதல் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய செயல்பாடுகளைச் செய்யும் உறுப்பு .உப்பில் சோடியம் உள்ளது. அளவிற்கு அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்கி, கல்லீரலில் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.மைதா தாதுக்கள், நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் என எதுவுல் இல்லாதது இது கல்லீரலுக்கு பெரிதும் பாதிப்பை ஏற்படுத்தும்.சோடாவில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. இவை கல்லீரலுக்கு பெரும் தீங்கு விளைவிக்கும்.வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவையும் ஏற்படுத்துகின்றன. மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ளும் தவறை செய்யாதீர்கள்.துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அவற்றில் அஜினோமோட்டோ பயன்படுகிறது.இதனால், உங்கள் கல்லீரலின் செயல் திறன் பலவீனமடைகிறது.சர்க்கரை கல்லீரலை அதிக அளவில் சேதப்படுத்தும். சர்க்கரை ஆல்கஹாலை போலவே கல்லீரலை சேதப்படுத்தும்.தினமும் ஆல்கஹால் அருந்தினால், அது கல்லீரலை சேதப்படுத்தும். இதனால் ரத்த வாந்தி, மஞ்சள் காமாலை, புற்றுநோய் போன்ற நோய்கள் ஏற்படும்

May 08, 2024

ரோஜா குல்கந்து நன்மைகள்

ரோஜாமலரிலிருந்துதயாரிக்கப்படும்மருத்துவகுணமிக்கஉணவுப்பொருள்தான்குல்கந்து.மணம்தரும்பொருளாகஉணவுப்பதார்த்தங்களில்சேர்த்துசமைப்பதால்சுவையோடுஆரோக்கியமும்மேம்படுகிறது. இதில்அரோமேட்டிக்வோலடைல்ஆயில், டானிக்ஆசிட், காலிக்ஆசிட்போன்றவைஅடங்கியுள்ளன.ரோஜா குல்கந்து துவர்ப்பு சுவையுள்ளதால் இரத்தக் குழாய்க்கும், இதயத்திற்கும் கல்லீரலுக்கும் வலிமையூட்டும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.வயிற்றின் செரிமான அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது. செரிமானம் சீரான முறையில் நடைபெற உதவுகிறது. பசியைத் தூண்டி குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக உள்ளது. வயதானவர்களின் வாய்வுத் தொல்லையை போக்குகிறது. குல்கந்தை வெந்நீருடன் அருந்த மலம் இறுகி மலச்சிக்கல் உண்டாகி இருப்பதை போக்குகிறது.வெந்நீருடன் கர்ப்பிணிகள் இதை சாப்பிட, வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் சரியாகும். வெப்பத்தினால் ஏற்படும் பலவீனம், சோர்வையும் இது போக்குகிறது. இது சிறுநீரகக் கடுப்பை குணமாக்கும். நன்னாரி சர்பத்துடன் குல்கந்து சேர்த்து கலந்து அருந்த உடல் வலிமையாகும். உடல் அரிப்பு மற்றும் வெப்ப நோய்களை இது விரட்டுகிறது.கொப்புளங்கள், நாப்கின் பயன்பாட்டால் வரும் புண்கள், சரும அரிப்பு போன்றவற்றிற்கு நல்ல மருந்தாகப் பயன்படுகிறது. ரோஜா குல்கந்து பருகும் பானங்கள் மற்றும் உணவுகளில் நறுமணப் பொருளாக சேர்க்கப்படுகிறது. இயற்கையான ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்டுகள் இதில் நிறைந்துள்ளன.அரிப்பு மற்றும் வெப்ப கொப்பளங்களுக்கு அவிபத்திகர சூரணம் என்ற ஆயுர்வேத மருந்துடன் குல்கந்து சேர்த்து சாப்பிட, நல்ல நிவாரணம் கிடைக்கும். குல்கந்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சருமத்தின் சுருக்கங்களைப் போக்கி சரும பளபளப்பைத் தருகிறது.வியர்வையால் உண்டாகும் வாடையைப் போக்குகிறது. உடல் உஷ்ணம் உள்ள ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைந்து மலட்டுத்தன்மை ஏற்படும். அவர்கள் குல்கந்தை சாப்பிட்டு வந்தால் விந்தணுக்கள் பெருகி ஆண்மை குறைபாட்டை சரிசெய்யும்.பலவிதங்களில் பயன்படும் குல்கந்தை உட்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்வோம்பூச்சிக்கொல்லி மருந்துகள் இல்லாமல் கிடைக்கப்பெற்ற ரோஜா இதழ்கள்200 கிராம், பெரிய கற்கண்டு100 கிராம் மற்றும் தேன் இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்றாக இடித்து காற்று புகாத டப்பாவில் வைக்கவும். இதனை பெரியவர்கள் 2 டீஸ்பூன் அளவு, சிறியவர்கள் 1 டீஸ்பூன் அளவும் சாப்பிடலாம்

May 05, 2024

வெங்காயத் தண்ணீரை நாம் குடிக்கும்போதுகிடைக்கும்ஆரோக்கியநன்மைகள்!

அன்றாட உணவில் உபயோகித்து வரும் வெங்காயத்தில் உடலுக்குத் தேவையான வைட்டமின்C, வைட்டமின்B6, பொட்டாசியம், ஃபொலேட் போன்ற ஊட்டச் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயத்தை நறுக்கி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி அந்தத் தண்ணீரை நாம் குடிக்கும்போது, மேலே கூறிய அனைத்து ஊட்டச் சத்துக்களாலும் செறிவூட்டப்பட்ட ஒரு நல்ல ஆரோக்கிய பானம் . இந்த பானத்தை அருந்துவதால்  பல நன்மைகள்உடலுக்குக் கிடைக்கும் .ஆனியனில் குர்செடின்(Quercetin) போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன. இவை உடம்பிலுள்ள ஃபிரிரேடிகல்களின் அளவை சமநிலைப்படுத்தி ஆக்ஸிடேட்டிவ் ஸ்ட்ரெஸ்ஸைக் குறைக்க உதவுகின்றன. இதிலுள்ள வைட்டமின்C சத்தானது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் தொற்று நோய்க் கிருமிகளை எதிர்த்துப் போராட முடிகிறது. உடலிலுள்ள நோய்களையும் விரைவில் குணமடையச் செய்ய முடிகிறது..ஆனியன் வாட்டர் சளி, இருமல் போன்ற நோய்களை குணப்படுத்தவும் செய்யும். இதை உணவுக்கு மணமூட்டவும், சூப், சாலட், ஸ்டூ மற்றும் மரினேட் செய்வதற்கும் உபயோகிக்கலாம்.ஆனியனை சமைக்காமல் உட்கொண்டால் அது உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கவும், கொழுப்பின் அளவை சமநிலைப்படுத்தவும் உதவும். இதன் மூலம் இதய ஆரோக்கியம் வலுப்பெறும்.ஆனியனில் பிரிபயோட்டிக் ஃபைபர் சத்து உள்ளது. இது ஜீரண மண்டல உறுப்புகளில் வாழும் நன்மை தரும் பாக்டீரியாக்களின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவி புரிந்து செரிமானம் சிறப்பாக நடைபெற உதவுகிறது.ஆனியன் வாட்டர் அருந்துவது தினசரி குடிக்க வேண்டிய நீரின் அளவு சமநிலைப்படவும், உடலை நீரேற்றத்துடன் வைக்கவும் உதவும். ஆனியன் குறைந்த அளவு கலோரி கொண்டது. இதை உணவில் சேர்ப்பதால் கலோரி அளவு அதிகரிக்காமல் உணவுக்கு சுவை கூட்ட முடியும். சர்க்கரை சேர்த்த பானங்களுக்குப் பதிலாக ஆனியன் வாட்டர் குடித்தால் உடல் எடை அதிகரிக்காமல் பராமரிக்க முடியும்.ஆனியன் வாட்டர் சரும ஆரோக்கியம் காக்கவும் உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் சருமம் வயதான தோற்றம் தருவதைத் தடுக்கவும்,  அப்பழுக்கற்ற சுத்தமான மேனி வண்ணம் பெறவும் உதவி செய்கின்றன.

May 03, 2024

தாமரை விதை “மக்கானா “

மக்கானா, தமிழில் தாமரை விதை என்று அழைக்கப்படுகிறது. இதன் ஊட்டச்சத்து காரணமாக பலரும் இதை சாப்பிட ஆரம்பித்துவிட்டனர். ஆனால் எப்படி சாப்பிடுவது, இன்னும் சுவையான உணவாக இதை எப்படி உட்கொள்வது .மக்கானாவை வறுத்து பவுடர் போல் பொடியாக்கிக்கொள்ளுங்கள். பின் பாலில் கொதிக்க வையுங்கள். க்ரீமியாக கிடைக்கும். பின் அதில் உங்களுக்கு பிடித்த பழங்களை கட் செய்து அதன் மேல் பாதாம் நட்ஸுகளை தூவுங்கள். பின் அதன் மேல் அப்படியே தேனை ஊற்றுங்கள். இப்போது அது கூடுதல் ஆரோக்கியம் நிறைந்த வாய்க்கு ருசியான உணவாகிவிட்டது.வறுத்த மக்கானாவை பவுலில் சேர்த்து அதோடு கோஸ் இலைகள், காய்கறிகள், பழங்கள் சேர்த்துக்கொள்ளுங்கள். பின் டிரெஸ்ஸிங் க்ரீம்கள்( தயிர் அல்லது பனீர் அரைத்து சேர்க்கலாம்) சேர்த்து கலந்துவிட சுவையான மக்கானா சாலட் தயார். பனீர், சிக்கன், சோயா, வேக வைத்த பயிர் வகைகள் ஆகியவற்றையும் சேர்க்கலாம்.வறுத்த மக்கானாவில் வெங்காயம், தக்காளி, கொத்தமல்லி மற்றும் ஸ்பைசி சாட் பொடிகள் சேர்த்து அதோடு எலுமிச்சை சாறு பிழிந்து கலந்து சாப்பிடலாம். கூடுதல் க்ரஞ்சி சுவைக்கு மாதுளை பழம் சேர்த்து மக்கானா சாட்  சாப்பிடலாம்.வறுத்த மக்கானாவில் நெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அதன் மீது உப்பு, மிளகுத்தூள், சாட் மசாலா சேர்த்து கலந்து சாப்பிடலாம்.மிக்ஸ் வித் மக்கானா : வறுத்த மக்கானாவுட்ன் நட்ஸ் , விதைகள், டிரை ஃப்ரூட்ஸ் ஆகியவை சேர்த்து கலந்து சாப்பிடலாம்.பால் நன்கு காய்ச்சி கொதிக்க வைத்து பின் வறுத்த மக்கானா சேர்த்து கலந்துவிடுங்கள். அதில் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பாயாசம் போல் வந்ததும் இறக்கிவிடுங்கள். இப்போது நெய் ஊற்றி முந்திரி, பாதாம் வறுத்து அதில் சேர்த்து கலந்துவிட்டு குடிக்கலாம். அசத்தல் சுவையாக மக்கானா கீர்  இருக்கும்.

May 02, 2024

Rosemary ரோஸ்மேரி இலைகள்..

ரோஸ்மேரி இலைகள், அதன் தனித்துவமான வாசனை மற்றும் சுவைக்காக சமையல், மருத்துவம் போன்றவற்றில் பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு மூலிகையாகும்.ரோஸ்மேரி இலைகளில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் நிரம்பியுள்ளன. இது ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் சேதத்திலிருந்து செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள ரோஸ்மரினிக் அமிலம் மற்றும் கார்னோசிக் அமிலம் போன்றவை, அழற்ச்சி மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு பண்புகளைக் கொண்டிருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ரோஸ்மேரி இலைகள் மூளையின் அறிவாற்றல் மற்றும் நினைவாற்றலுக்கு பெரிதும் உதவுகிறது. ரோஸ்மேரியின் நறுமணம், மூளையைத் தூண்டி, சிறந்த தெளிவு, கவனம் மற்றும் மனநிலையை ஏற்படுத்துகிறது. இதைத் தொடர்ச்சியாக நம் உணவில் சேர்த்துக் கொண்டால், நினைவாற்றல் இழப்பு பிரச்சனைகள் தவிர்க்கப்படுமாம். ரோஸ்மேரி இலைகள் நம்முடைய செரிமானத்தை மேம்படுத்தி, செரிமான அசௌகர்யம், வீக்கம் மற்றும் அஜீரணத்தைப் போக்க உதவுகிறது. ரோஸ்மேரி டீ குடிப்பது அல்லது ரோஸ்மேரி இலைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால், செரிமான மண்டலம் வலுப்பெற்று, குடல் அமைப்பின் ஒட்டுமொத்த ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. இந்த பண்பு உடலில் ஏற்படும் வீக்கத்தை குறைக்க குறைக்க உதவுகிறது. நோய்த் தொற்றுகளுக்கு எதிராக உடலை பாதுகாக்க செயல்படுகின்றன. எனவே உங்கள் உணவில் ரோஸ்மேரியை சேர்ப்பது மூலமாக, நோய் நொடியின்றி ஆரோக்கியமாக வாழலாம். பாரம்பரிய வைத்திய முறையில் ரோஸ்மேரி இலைகள் சருமம் மற்றும் முடிக்கு ஆரோக்கியம் தர பயன்படுத்தப்படுகிறது. இதில் ஆக்சிஜனேற்ற பண்பு, சருமத்தை ஆக்சிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்கிறது. ரோஸ்மேரி இலைகளை தலைக்குப் பயன்படுத்தினால், உச்சந்தலைக்கு ஊட்டம் கிடைத்து மயிர்க் கால்கள் வலுப்பெற உதவும்.  இதை நாம் உணவுப் பொருளாக எடுத்துக் கொள்வது பாதுகாப்பானது என்றாலும், அதை மிதமாகப் பயன்படுத்த வேண்டும். குறிப்பாக ஏற்கனவே உங்களுக்கு உடலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் தகுந்த மருத்துவரின் ஆலோசனை பேரிலேயே இதை உணவாக எடுத்துக் கொள்வது நல்லது.

May 01, 2024

ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும் மோர்

கோடை வெயிலில் மோர் குடித்தால் புத்துணர்ச்சி பெறலாம். இதுஉங்கள் ஆற்றல் அளவை அதிகரிக்கிறது.மோர் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். சிலர்இதை இரவு உணவோடு குடிக்க விரும்புகிறார்கள்,மற்றவர்கள் மாலையில் குடிக்கிறார்கள். இந்த பானத்தை நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம். ஆனால் யாராவது வயிறு தொடர்பான பிரச்சனைகளால் அவதிப்பட்டால் வெறும் வயிற்றில் மோர் குடிப்பது நல்லது என்று கருதப்படுகிறது.ஒரு கிளாஸ் மோர் குடிப்பதால் கால்சியம், வைட்டமின்கள், பொட்டாசியம், புரோபயாடிக்குகள், பாஸ்பரஸ், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது.மோர் செரிமானத்தை ஊக்குவிக்க உதவுகிறது. மலச்சிக்கல் உள்ளவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் ஆரோக்கியமான பாக்டீரியா மற்றும் லாக்டிக் அமிலம் உள்ளது, இது உங்கள் குடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கிறது..உடல் ஆரோக்கியமான தசைகள், தோல் மற்றும் எலும்புகளை உருவாக்க மோர் உதவுகிறது. இதில் பாலை விட குறைவான கலோரிகள் மற்றும் அதிக கால்சியம், வைட்டமின் பி12 மற்றும் பொட்டாசியம் உள்ளது. நாளின் எந்த நேரத்திலும் நீங்கள் குடிக்கலாம்.தயிரை ஒருபிளெண்டரில் போட்டுமூன்று முதல்ஐந்து நிமிடங்கள்வரை கலக்கவும்.அதில் குளிர்ந்தநீரை சேர்த்துமீண்டும் குறைந்தவேகத்தில் மூன்றுமுதல் ஐந்துநிமிடங்கள் வரைகலக்கவும். இப்போதுஅதனுடன் கருப்புஉப்பு, புதினாதூள், சீரகத்தூள்சேர்த்து கலந்துகுடிக்கவும்.

1 2 ... 18 19 20 21 22 23 24 25 26 27

AD's



More News