25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆரோக்கியம்

May 23, 2025

வாழைப்பழ வகைகளும், ஆரோக்கிய பலன்களும்

செவ்வாழைசெவ்வாழையில் வைட்டமின் ஏ, சி, கால்சியம், இரும்புச்சத்து, பீட்டாகரோட்டின் உள்ளன.செவ்வாழை சாப்பிட, குதிகால் வலி போகும். விந்துஅணுக்கள் அதிகரிக்கும்.நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். பார்வைத்திறன் மேம்படும்.பல்வலி நீங்கும். ஈறுகள் உறுதியாகும்.தினசரி செவ்வாழைப்பழம் சாப்பிட்டுவர சொறி, சிரங்கு, தோல் வெடிப்பு நீங்கும்.நரம்புத்தளர்ச்சி குணமடையும். நோய்த்தொற்றுக்கள் நீங்கும். ரஸ்தாலி (ரசகதலி)பொட்டாசியம் அதிகமாக இருப்பதால், வயிற்று எரிச்சலைக் குறைப்பதுடன் அல்சரையும் சரிசெய்கிறது. அதிக அளவு நார்ச்சத்து உள்ளதால், செரிமானப் பிரச்னைகளைப் போக்கும்.ரஸ்தாலியில் உள்ள வைட்டமின் பி6 மற்றும் குளுக்கோஸ், மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.வாத உடல் உள்ளவர்கள், ரஸ்தாலியை அளவாகச் சாப்பிடலாம்.வயிற்றுப்போக்கைக் கட்டுப்படுத்தும்.  மொந்தன் வாழை  ( பச்சை வாழை)மொந்தன் வாழை சாப்பிட, மலச்சிக்கல் நீங்கும். வாந்தியை நிறுத்தும்.இரும்புச்சத்துடன் அதிக அளவு மாவுச்சத்தும் இருப்பதால், நன்கு பசி தாங்கும். உடல் வளர்ச்சியை மேம்படுத்தும். தினம் ஒன்றோ, இரண்டோ உணவுக்குப் பின் சாப்பிட்டால், உடல் வெப்பத்தைத் தணிக்கும். சில வகை காமாலையைக் கட்டுப்படுத்தும்.மொந்தன் வாழைக்காயைச் சாப்பிடுவதால், வயிறு இரைச்சல், கழிச்சல், வாயில் நீர் ஊறுதல், இருமல் நீங்கும்.இந்தப் பழத்துக்கு `பொந்தன் வாழை’ என இன்னொரு பெயரும் உண்டு. நாட்டு வாழைநாட்டுவாழையின் தோல் பகுதி தடிமனாக இருக்கும். தோலிலும் சத்துக்கள் அதிகம்.மலச்சிக்கல், குடல்புண்ணைக் குணப்படுத்தும்.மக்னீசியம் அதிகமாக இருப்பதால், உடல்நலம் காக்கும்.கால்சியம் அதிகமாக உள்ளதால், எலும்புகளுக்கு வலு கொடுக்கும்.பெண்கள் நாட்டு வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, உடலுக்கு சக்தி பெருகும்.மாதவிடாய்க் கோளாறுகளைச் சரிசெய்யும். வெள்ளைப்போக்கைக் கட்டுப்படுத்தும்.அதிகம் இனிப்புச்சுவை கொண்டுள்ளதால், சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.   கதலிகதலியில், `நெய்க் கதலி’ என்றொரு வகையும் உள்ளது.நெய்க் கதலி மலைப்பகுதிகளில் அதிகம் விளையும். அதிக இனிப்புச்சுவை உடையது. மாவுச்சத்து அதிகம் என்பதால், குழந்தைகள் உடல் வளர்ச்சி பெற உதவும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. ரத்தசோகை பிரச்னை உடையவர்கள் சாப்பிட்டுவந்தால், ரத்தம் பெருகும்.மலச்சிக்கலைத் தீர்க்கும். குடல்புண்ணைக் குணப்படுத்தும்.சித்தமருத்துவ மருந்துகளுக்கு அதிகம் பயன்படுகிறது.பெண்களின் உடல்நலம், மாதவிடாய் பிரச்னைகள், உடல் சூடு ஆகியவற்றைப் போக்கும்.  பேயன் ( நாட்டு வாழை )கடினமான தோல் கொண்ட இனிப்புச்சுவை உள்ள பழம். இதன் தோலிலும் சத்துக்கள் அதிகம்.அதிக உடல் வெப்பத்தை பேயன்பழம் சாப்பிடுவதன் மூலம் சமன்படுத்தலாம்.குழந்தைகளுக்கு ஏற்படும் கணையச்சூட்டைத் தணிக்கும் இயல்பு கொண்டது.உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. உடல் எடையை அதிகரிக்கும்.மலச்சிக்கலை நீக்கும். குடல் புண்ணைக் குணப்படுத்தும்.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.மாவுச்சத்து அதிகம் உள்ளதால், குழந்தைகளின் வளர்ச்சிக்குச் சிறந்தது.குளிர்ச்சியான உடல்வாகு உடையவர்கள் இந்தப் பழத்தைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில், இது நுரையீரலில் சளியைக் கோத்து நுரையீரல் கோளாறுகளுக்கு வழிவகுத்துவிடும். மலை வாழைவாத நோய்க்காரர்களைத் தவிர மற்றவர்கள் இந்தப் பழத்தைச் சாப்பிடலாம்.நல்ல ருசியும் வாசனையும் கொண்ட பழம். இது, உடலின் வலிமையை அதிகரிக்கும்.சிறு மலைப்பழம் என்றொரு வகை உண்டு. இது, மிகவும் இனிப்பாக இருக்கும். ரத்தசோகையை நீக்கும். ரத்த விருத்தி ஏற்பட்டு, உடல் வலுப் பெறும்.மலச்சிக்கல் நீங்கும். மாதவிடாயின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கைக் கட்டுப்படுத்தும்.இந்தப் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டுவர, உடல் அழகு பெறும்.  பூவன் பழம்தினசரி உணவு உண்ட பின், பூவன் வாழைப்பழத்தைச் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும். செரிமான சக்தியை அதிகரிக்கும்.தசைகளை வலுவாக்கும்.தினமும் பூவன் வாழைப்பழம் உண்டுவர, உடல் சோர்வு, தளர்வு நீங்கி, புத்துணர்ச்சி உண்டாகும்.ஆஸ்துமா, நெஞ்சுச்சளி பிரச்னை, குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள், சர்க்கரை நோயாளிகள் பூவன் வாழைப்பழத்தைத் தவிர்ப்பது நல்லது.இரண்டு நாட்களுக்கு, ஒரு வேளை உணவைத் தவிர்த்துவிட்டு, அதற்கு பதில், பூவன் வாழைப்பழத்தை சாப்பிட்டால், செரிமானப் பிரச்னைகள் நீங்கும். 

May 22, 2025

உடல்நலத்திற்கு நன்மை செய்யும் வெங்காயம்

மனிதர்களின் பழமையான உணவுப்பொருட்களில் ஒன்று வெங்காயம். இது சுவைக்கு மட்டுமல்ல, உடல்நலத்திற்கும் பெரும் பலனளிக்கிறது. தற்போது வெயில் காலம் தீவிரமாக இருக்கும் நிலையில் உடல் சூட்டை தணிக்க ஒரு வெங்காயத்தை நறுக்கி, தண்ணீரில் கொதிக்க வைத்து குடிப்பதன் மூலம் நம் உடலில் நீர்ச்சத்தை பாதுகாக்கலாம். குழந்தைகளுக்கு வெப்ப நோய்கள் வராமல் இருக்க, வெங்காயத்தை மோரில் கலந்து கொடுத்தாலோ அல்லது நெய்யில் வறுத்து சாப்பிடவைத்தாலோ சிறந்த பலன் கிடைக்கும். தினமும் சிறிதளவு வெங்காயத்தை பச்சையாக சாப்பிடுவதால் கொலஸ்ட்ரால் அளவு குறையும். வெங்காயத்தில் உள்ள சல்பர் எனும் சத்து, ரத்தத்தை சுத்திகரித்து மாரடைப்பைத் தடுக்கும். அதேசமயம், இதில் உள்ள அலர்ஜி எதிர்ப்பு தன்மை சுவாசக் குழாய்களைத் தூய்மைப்படுத்தி ஆஸ்துமா போன்ற பிரச்சனைகளிலிருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், வெங்காயத்தில் உள்ள ஆன்டி-செப்டிக் தன்மை, காசநோயைத் தடுக்கும். உடலில் தேக்கமாயிருக்கும் நச்சுகளை வெளியேற்றும் திறனும் வெங்காயத்துக்கு உண்டு. மூளையின் செயல் திறனை ஊக்குவிக்கவும், நினைவாற்றலை மேம்படுத்தவும் வெங்காயம் உதவுகிறது. எனவே, நம் உணவில் வெங்காயத்திற்கு முக்கிய இடம் அளிக்க வேண்டும். இது உணவல்ல, ஒரு இயற்கை மருந்து.

May 20, 2025

ஐஸ் கட்டி நீர் தெரபி

குளிர்ந்த நீரில் குளிப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும். இது "ஐஸ் கட்டி  தெரபி" என அழைக்கப்படுகிறது.கடுமையான உடல் உழைப்பிற்கு பின் ஏற்படும் தசை வலியை குறைக்க இது உதவும். ரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துகளை விரைவாக வழங்கும். உடலில் ஏற்படும் வீக்கம், வலி குறைந்து தசைகள் புத்துணர்ச்சி பெறும். கழிவுப்பொருட்களை வெளியேற்றும் தன்மை கொண்டது.தூங்குவதற்கு முன்பு 5-10 நிமிடங்கள் ஐஸ் கட்டி  நீரில் குளிப்பது, ஆழ்ந்த தூக்கத்துக்கு உதவும்.மன அழுத்தம், சோர்வை குறைத்து, மூளையின் செயல்பாட்டை உற்சாகமூட்டும். நெதர்லாந்து ஆய்வுகளின்படி, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. 

May 19, 2025

உடலுக்கு புத்துணர்வு தரும் நடைப்பயிற்சி

உடலின் ஒவ்வொரு உறுப்பும் தன்னை புதுப்பித்துக் கொண்டு இயங்க உடலில் வளர்சிதை மாற்றம் என்ற செயல்பாடு முக்கியமானது. மனிதர்களுக்கு இந்த வளர்சிதை மாற்ற செயல்பாடு இயற்கையாகவே அமைந்தது. வாழ்க்கை முறை, உழைப்பு இல்லாத நிலைக்கு மாற்றம் பெற்றதால் உடலின் இயங்கு தன்மை குறைந்து நோய்கள் அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க நடைப்பயிற்சி மட்டுமே உதவும் என மருத்துவ ஆய்வுகள் கூறுகின்றன.ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வில், தினமும் சுமார் 40 நிமிடங்கள் விறுவிறுப்பான நடைப்பயிற்சியில் ஈடுபடுபவர்க ளுக்கு, உடல் எடை கட்டுப்பாட்டில் இருப்பதும், மரபணுக்கள் மாற்றம் சரியாக இருப்பதும் தெரிய வந்தது. பொதுவாக, ஒருவருக்கு மன அழுத்தம் அதிகரிக்கும் போது அவர்கள் தங்களை அறியாமல் இனிப்பு பொருட்களை உட்கொள்வது இயல்பு. ஆனால், அது நாளடைவில் சர்க்கரை நோயை உருவாக்கும்.இன்றைக்கு, ஆண், பெண் வேறுபாடு இல்லாமல் கீல்வாதம் அனைவரையும் பாதிக்கிறது. ஆய்வுகளின்படி வாரந்தோறும் 5 முதல் 6 மைல்கள் நடைபயிற்சி செய்வது கீல்வாதம் உடலில் பாதிப்பு ஏற்படுத்துவதை தடுக்கிறது.நடைப்பயிற்சி கால் மூட்டுகள் இலகுவாக இயங்க உதவுகிறது.அமெரிக்கன் கேன்சர் சொசைட்டி ஆய்வின்படி, நடைப்பயிற்சி மார்பக புற்று நோயை உருவாக்கும் அபாயத்தை குறைக்கிறது. வாரத்திற்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரம் நடந்த பெண்களுக்கு புற்றுநோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. பொதுவாக, நடைப்ப யிற்சி நோய் எதிர்ப்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது. எவ்வளவு இக்கட்டான சூழ்நிலையிலும் எதையும் திறமையாக சமாளிக்கும் சக்திவாய்ந்த மனநிலையை தருவதுடன், கவலை, சோகம், சோர்வு மற்றும் உந்துதல் இல்லாமை போன்ற எதிர் மறை உணர்ச்சிகளை தடுத்து புத்துணர்வு தரும் ஒன்றாக நடைப்பயிற்சி இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

May 09, 2025

உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியகுங்குமப்பூவை (சிவப்பு தங்கம்')  கர்ப்பிணிகளுக்கு தருகிறார்கள் .

குங்குமப்பூ, குரோகஸ் பூக்களின் உலர்ந்த ஆரஞ்சு - சிவப்பு சூலகமுடி ஆகும். குங்குமப்பூ செடி, மத்திய தரைகடல் பகுதிகளில் தோன்றியது.. உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப் பொருளாகும். இது, குரோகஸ் சட்டிவஸ் எனப்படும் மலரில் இருந்து கிடைக்கிறது.குங்குமப்பூவுக்கும் சிவப்பு நிறத்துக்கும் தொடர்பே கிடையாது. பாலில் குங்குமப் பூவைப் போடும்போது பாலின் நிறம் மாறுகிறது என்பதற்காக, அதைச் சாப்பிடுவதால் குழந்தையும் அந்த நிறத்தில் பிறக்கும் என்பது அர்த்தமில்லை. இது முற்றிலும் தவறான நம்பிக்கை.ஆனால், குங்குமப்பூவுக்கு ஒரு வாசனைப் பொருளாக நிறைய மருத்துவ குணங்கள் உள்ளன. உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியகுங்குமப்பூவை  கர்ப்பிணிகளுக்கு தருகிறார்கள். இனிப்புச் சுவையுள்ள நறுமணப் பொருட்களான குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவை குழந்தையின் வளர்ச்சிக்கு துணைபுரியக் கூடியவை. குங்குமப்பூ, ரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்வதால் மனஅழுத்தம் குறையும். எனவேதான், கர்ப்பிணிப் பெண்கள் நல்ல மனநிலையில் இருக்க குங்குமப் பூவை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.கருவுற்ற பெண்ணுக்கு குங்குமப்பூ, அதிமதுரம் போன்றவற்றை வழங்கும் சடங்கு இன்றும் பல இடங்களில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. குங்குமப்பூவை சிறிதளவு சூடான பாலில் 10 நிமிடங் கள் ஊறவைத்து கையால் நசுக்கிவிட்டு பாலோடு கலந்து குடிக்கலாம். குங்குமப்பூவில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது. எனவே இது நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்.குங்குமப்பூவை அதிக அளவில் எடுத்துக்கொண் டால் சிலருக்கு வாந்தி, மயக்கம்,வயிற்றுப்போக்கு ஏற்படலாம். அதனால் குறைவான அளவு எடுத்துக் கொள்வது நல்லது. ஒரு கனமான வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கவும். நன்கு சூடானதும் அடுப்பை அணைத்து விடவும். அந்த வாணலியில் குங்குமப்பூவை போட்டு வைக்கவும். ஓரிரு நிமிடங்கள் கழித்து கையால் நசுக்கி பொடி செய்யவும். இதை ஒரு சிறிய டப்பாவில் போட்டு வைத்து தேவைப்படும்போது பயன்படுத்தலாம். 

May 08, 2025

உடலுக்கு குளுமையான உணர்வு தரும் மண்பானை தண்ணீர்

மண்பாண்டங்கள் தான் ஆதிமனிதன் முதன்முதலில் பயன்படுத்தியது .சமைப்பது முதல் உணவு பொருட்களை சேமிப்பது வரை அனைத்து தேவைகளுக்கும் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. மண்பானை தண்ணீரை குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் தனித்துவமான சுவை, குளுமையான உணர்வுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை .மண்பானையில் நிரப்பப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக மாறிவிடும்.அதாவது, பானையின் மேற்பரப்பில் உள்ள சிறிய துளைகள் வழியாக நீர் விரைவாக ஆவியாகும். அப்படி ஆவியாகும்போது பானையின் உட்புறத்தில் வெப்பத்தின் வீரியம் குறையும். அதனால் வெப்பநிலையும் கட்டுப்படும்.  மண்பானை ஒரு சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவி. மண்பானையில் தண்ணீரை ஊற்றி சில மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நச்சு உப்புக்கள், தாதுக்களை மண்பானை உறிஞ்சி வெளியேற்றி விட்டு தூய்மையான குடிநீரை தருகிறது.   இயற்கையாக வெப்பத்தணிப்பு செய்யப்பட்ட இந்த நீர்,மனித உடலுக்கு மிகவும் நன்மை தரும் என இயற்கை மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிப்பது வெப்ப பக்கவாதத்தை தடுக்க உதவும் .  தண்ணீரில் கலந்திருக்கும் சத்து மிகுந்த மண் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவி செய்கிறது. உடலின் அதீத வெப்பத்தால் ஏற்படும் தாது உப்பு இழப்புகளை ஈடுகட்டுகிறது. மேலும், உடலின் அமில நிலை அதிகரிக்காமல் தடுக்கும் இயல்பு மண்பானையில் வைக்கப்படும் நீருக்கு உண்டு. இது போல பல நன்மைகள் மண்பானை குடிநீர் மூலம் கிடைக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

May 06, 2025

எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துவேம்பு ஜூஸ்.

 பழங்காலத்திலிருந்தே, வேம்பு அதன் பாக்டீரியா எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் வலி நிவாரணி பண்புகள் காரணமாக பல்வேறு தொற்று நோய்களை குணப்படுத்தவும், எடையை குறைக்கவும் உதவுகிறது. வேம்பு இலையில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட முக்கிய சத்துக்கள் உள்ளன. வேப்பஞ்சாறு, எலுமிச்சை சாறு மற்றும் தேன் இவற்றை ஒன்றாக கலந்து தினமும் பருகி வந்தால் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும்.வேப்ப இலையில் நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் அந்த இலைகளில் உள்ள நார்ச்சத்தானது செரிமானத்தை சீராக்கி நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருக்க உதவுகிறது. இதனால் உங்கள் குடல் இயக்கம் மேம்பட்டு மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க வேம்பு உதவுகிறது. எடை இழப்புக்கு அதிகரித்த வளர்சிதை மாற்ற விகிதம் மிகவும் முக்கியமானது. வேம்பில் உள்ள ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவு கலோரிகளை எரித்து உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகிறது..தினமும் வேம்பு ஜூஸ் அருந்தி வந்தால் நச்சுக்கள் வெளியேறி இரத்தம் சுத்திகரிக்கப்படுவதன் மூலம் உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் ராசாயனங்கள் வெளியேறுகிறது. இதனால் உடலில் இருந்து ஆரோக்கியமற்ற நச்சுக்கள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.வேப்பிலையில் உள்ள பல்வேறு பயோகெமிக்கல் பொருட்கள், குழந்தைகள் அதிகம் அவஸ்தைப்படும் குடல் புழுக்களை அழித்து பிரச்சனையில் இருந்து விடுவிக்கும். அதற்கு குழந்தைகளுக்கு காலையில் வெறும் வயிற்றில் சிறிது வேப்பிலை கொழுந்தை சாப்பிட கொடுக்கலாம் அல்லது வேப்பிலையை ஜூஸ் வடிவிலும் கொடுக்கலாம்..

May 02, 2025

பான் பட்டாவின்(வெற்றிலை) நன்மைகள்..

உணவுக்குப் பிறகு, மக்கள் ஏன் வெற்றிலையை மெல்லுகிறார்கள் குடல், வாய்வு எதிர்ப்பு, கார்மினேட்டிவ் மற்றும் குடல்-பாதுகாப்பு குணங்கள் இதை பரிந்துரைக்கப்பட்ட துணைப் பொருளாக ஆக்குகின்றன. வெற்றிலையிலிருந்து வளர்சிதை மாற்றம் அதிகரிப்பது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது மற்றும் குடல்களால் அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதை ஊக்குவிக்கிறது.பான் இலைகள் சுவாச மண்டலத்திலிருந்து சளியை அகற்ற உதவும் மற்றும் வலுவான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளன. வெற்றிலை மூச்சுக்குழாய் அழற்சி, சளி, இருமல் மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களுக்கு சிகிச்சையளிக்க உதவும்.இருமல் மற்றும் சளிக்கு சிகிச்சையளிக்க வெற்றிலையைப் பயன்படுத்துவதற்கு பல்வேறு முறைகள் உள்ளன. சளி அல்லது இருமலுக்கு சிகிச்சையளிக்க, நொறுக்கப்பட்ட வெற்றிலையை சூடான கடுகு எண்ணெயில் ஊறவைத்து உங்கள் மார்பில் தடவவும். சில வெற்றிலைகளை அரைத்து சாறு எடுத்து, பின்னர் ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் இரண்டு டீஸ்பூன் சாறுடன் கலக்கவும். இதை ஒரு நாளைக்கு இரண்டு முறை, சாப்பிட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு எடுத்துக் கொள்ளுங்கள்.பூஞ்சை எதிர்ப்பு மற்றும் கிருமி நாசினி பண்புகள்வெற்றிலையில் பாலிபினால்கள், குறிப்பாக கிருமிகளுக்கு எதிராக இரு மடங்கு பாதுகாப்பை வழங்கும் சாவிகோல் அதிகமாக இருப்பதால், அவை குறிப்பிடத்தக்க கிருமி நாசினி பண்புகளைக் கொண்டுள்ளன. இது பெரும்பாலும் ஆர்க்கிடிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. பூஞ்சை தொற்றுகள் அதன் குறிப்பிடத்தக்க பூஞ்சை எதிர்ப்பு பண்புகளால் உடனடியாக நிவாரணம் பெறுகின்றன. வெற்றிலை பேஸ்ட்டைப் பயன்படுத்துவதால் பாதிக்கப்பட்ட பகுதியில் பூஞ்சை தொற்றுகள் நீங்கும்.

Apr 30, 2025

நோய் எதிர்ப்பு சக்தியை மஞ்சள் பலப்படுத்தும் .

 மஞ்சளில் குர்குமின் உள்ளது. இது அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் காண்டுள்ளது. வெறும் வயிற்றில் மஞ்சள் கலந்த தண்ணீரைக் குடிப்பதால் பித்தப்பையில் பித்தம் உற்பத்தியாகிறது. அதன் மூலம் நீங்கள் உண்ணும் உணவு எளிதில் ஜீரணமாகும்.மஞ்சளில் குர்குமின் உள்ளடக்கத்தின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மூட்டு வலி மற்றும் கீல்வாதம் போன்ற நிலைகளுடன் தொடர்புடைய மூட்டுக்களின் இறுக்கத்தன்மையைப் போக்க உதவுகிறது. நாள்பட்ட வீக்கம் இதய நோய் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளுக்கு தீர்வு தரும்.மஞ்சளில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பண்புகள் தொற்று மற்றும் நோய்க்கு எதிராக உடலின் பாதுகாப்பு வழிமுறைகளை மேம்படுத்த உதவுகிறது.பாரம்பரிய இந்திய உணவு வகைகளில் மஞ்சள் தொடர்ந்து சமையலில் பயன்படுத்தப்படுகிறது. ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளதால், மஞ்சள் பொடி சைவத்தில் மட்டுமின்றி அசைவ சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது.சமைப்பதை தவிர மஞ்சள்  தூள் அல்லது மஞ்சள் கொம்பு பல மூலிகை மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்த மஞ்சள் உதவுகிறது. குர்குமின் உள்ளடக்கம் எடை இழப்பு மற்றும் கொழுப்பைக் குறைக்க உதவும் என்று சில ஆய்வுகள் காட்டுகின்றன. ஒரு கிளாஸ் மஞ்சள் தண்ணீர் மற்றும் வழக்கமான உடற்பயிற்சியுடன் நாள் தொடங்குவது எடை இழப்பு முயற்சிகளுக்கு உதவும்.

Apr 28, 2025

மரிக்கொழுந்து

வீட்டுத்தோட்டங்களில் வளர்க்கப்படும்  மரிக்கொழுந்து ஒரு பூஞ்செடியாகும். மரிக்கொழுந்து ஒரு பயனுள்ள மூலிகைப்பூவாகும். சாம்பல் நிறம் கலந்த பச்சை நிறத்தில் காணப்படும். வாசனைக்காக பூக்களில் சேர்த்து கட்டப்படும் பூ . இது மருத்துவ பயன்பாடுகளில் மகத்தானது. மரிக்கொழுந்து இலைகளை அரைத்து அதனை நீரில் கலந்து குடித்தால் வயிற்று வலி குணமாகும். உடலில் உள்ள காயங்கள், புண்கள் மற்றும் சொரியாசிஸ் போன்ற தோல் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு, அரைத்த மரிக்கொழுந்து விழுதுகளை தேய்த்து வருவது நல்லது. வீடுகளில் இதனை வளர்ப்பது ஆரோக்கியத்துக்கும், சுற்றுச்சூழலுக்கும் நன்மை தரும்.

1 2 ... 17 18 19 20 21 22 23 ... 37 38

AD's



More News