25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேர்தல் மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கான தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு .

விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் (24.02.2026) சட்டமன்றத்தேர்தல்-2026 முன்னிட்டு, மாவட்டத்தில் மண்டல அலுவலர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் மற்றும் மண்டல காவலர்களுக்கு தேர்தல் பணிகள் குறித்து பயிற்சி வகுப்பு மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந்த பயிற்சி வகுப்பில் மண்டல அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய உடனடி பணிகள், வாக்குச்சாவடி பணிகள், தேர்தல் தொடர்பாக  வாக்காளர் விழிப்புணர்வு பணிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரங்கள் கையாளுதல், வாக்குச்சாவடி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள், வாக்குப்பதிவு முடிவுற்றதும் செய்ய வேண்டிய பணிகள், தேர்தல் பணிகளில் உள்ள முக்கியமான படிவங்கள் மற்றும் சான்றிதழ்களை கையாளுதல் உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் திருமதி ரா.ஆனந்தி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) திருமதி பிர்தௌஸ் பாத்திமா, சிவகாசி சார் ஆட்சியர் திரு.முகமது இர்பான்,I A S ., அனைத்து மண்டல அலுவலர்கள் மற்றும் காவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News