25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஜூனியர் உலகக் கோப்பை சர்வதேச ஹாக்கியை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகமாற்ற ஆக்கி போட்டிக்கு டிக்கெட் இலவசம் !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலகக் கோப்பை சர்வதேச ஹாக்கியை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாகமாற்ற ஆக்கி போட்டிக்கு டிக்கெட் இலவசம் !

சென்னை மற்றும் மதுரையில் வருகிற 28-ந்தேதி முதல் டிசம்பர் 10-ந்தேதி வரை 14-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி(21 வயதுக்குட்பட்டோர்)நடக்கிறது. இதில்இந்தியா,ஆஸ்திரேலியா, ஜெர்மனி, நெதர்லாந்து, பெல்ஜியம், அர்ஜென்டினா உள்பட 24 அணிகள் பங்கேற்கின்றன. அவை 6 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோத உள்ளன. இதில் இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. சிலி, ஓமன், சுவிட்சர்லாந்து ஆகியவை அந்த பிரிவில் உள்ள மற்ற அணிகளாகும். இந்திய அணி 28-ந்தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் சிலியை எதிர்கொள்கிறது.

தமிழ்நாட்டில் முதல்முறையாக நடக்கும் இந்த போட்டியை பார்க்க டிக்கெட்டுகள் இலவசம் என ஹாக்கி  இந்தியா அறிவித்துள்ளது. www.ticketgenie.inஎன்ற இணையத் தளத்திலோ அல்லது ஆக்கி இந்தியாவின் அதிகாரபூர்வ செயலியிலோபதிவு செய்து டிஜிட்டல் டிக்கெட்டுகளை பெற்று போட்டியை நேரில் பார்க்கலாம்.ஒரு நபருக்கு 4 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும்.

ஆக்கி இந்தியா தலைவர் திலிப் திர்கே கூறுகையில், 'இலவச டிக் கெட்டுகளை வழங்குவதன் மூலம் தமிழகம் மற்றும் அதற்கு அப்பால் உள்ள மாணவ,மாணவிகள், இளம் விளையாட்டு வீரர்கள், அவரது குடும்பத்தினர், ஆக்கி பிரியர்களுக்கு போட்டியை நேரில் பார்ப்பதற்கான கதவினை திறப்பதே எங்களது இலக்கு. சர்வதேச ஹாக்கி யை அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாற்ற உறுதிபூண்டுள்ளோம்' என்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News