25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில்  புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு  அமைச்சர்  அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிகளுக்கு அமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

விருதுநகர் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை ஏற்று, வத்திராயிருப்பு நகரத்தின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் அமையவுள்ள புதிய புறவழிச்சாலைத் திட்டத்திற்கு  வருவாய்த்துறை அமைச்சர் அவர்கள்  அடிக்கல் நாட்டி, பணிகளைத் தொடங்கி வைத்தார். இத்திட்டமானது 2026-2027ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு திட்டத்தின் (CRIDP) கீழ் செயல்படுத்தப்படுகிறது.இச்சாலையில் நீரோடைகள் மற்றும் குறுக்கீடுகளைக் கடக்க 25 பெட்டிப்பாலங்கள் (Box Culverts) மற்றும் 3 சிறு பாலங்கள் அமைக்கப்பட உள்ளன.போக்குவரத்து சீராக நடைபெற ஏதுவாக, டி-சந்திப்பு (T-Junction), நான்கு முனைச் சந்திப்பு மற்றும் மூன்று இடங்களில் ரவுண்டானாக்கள் (Roundabouts) என மொத்தம் 5 சந்திப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

இத்திட்டத்தின் மூலம் வத்திராயிருப்பு, சதுரகிரி, கூமாபட்டி, கான்சாபுரம், அர்ஜுனாபுரம், புதுப்பட்டி, கிழவன்கோவில், பிளவக்கல் மற்றும் அத்திகோவில் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் நேரடியாகப் பயனடைவார்கள். குறிப்பாக சதுரகிரி போன்ற ஆன்மீகத் தலங்களுக்குச் செல்லும் பக்தர்களுக்குப் போக்குவரத்து எளிதாகும்.இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் (விருதுநகர்) திருமதி பாக்கியலெட்சுமி, நெடுஞ்சாலை துறை பொறியாளர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News