25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்கள்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் கருங்காலி மரத்தின் மருத்துவ குணங்கள்.

 கருங்காலி வயிற்றில் உள்ள புண்களை ஆற்றி, அல்சர் பிரச்சனையை தீர்க்க வல்லது. மற்றும் வாய் துர்நாற்றம் போன்ற வாய் பிரச்சனைகளையும் குணப்படுத்தும் மருத்துவகுணம் கொண்டது.ஒரு பங்கு கருங்காலிக் கட்டையை எடுத்து எட்டு மடங்கு நீரை சேர்த்து நன்றாக காய்ச்சி அதில் கடுக்காய் தான்றிக்காய்,நெல்லிக்காய் போன்றவைகளை சேர்த்து நன்றாக கொதிக்கவைத்து பின் ஆற வைத்து வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நீரை அருந்தி வர உடலிலுள்ள கெட்ட நீரான விஷநீர் வெளியேறும். மற்றும் சளி, காய்ச்சல், நெஞ்சு சளி போன்றவற்றை வெளியேற்றி உடலில் உள்ள கழிவுகளை அகற்றி உடம்பை சீர்படுத்தும்.

இதை உபயோகித்து வந்தால் உடலில் உள்ள சர்க்கரையின் அளவு சீர்படும் மற்றும் உடம்பிலுள்ள இரும்புச்சத்தை அதிகரிக்கும், உடம்பை வலுப்படுத்தவும் உதவுகிறது. உடம்பில் தேங்கியுள்ள அதிகப்படியான பித்தத்தை வெளியேற்றுகிறது.கருங்காலி மரத்தின் வேரை நீரில் காய்ச்சி குடித்துவர இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து வெளியேற்றும். கருங்காலி மரப்பட்டையின் பொடியை நாவல் பட்டை பொடி, வேப்பம் பட்டை பொடி எடுத்து ஒன்றாக கலந்து அதை நாள்பட்ட மற்றும் ஆறாத புண்ணாகிய புண்ணானது விரைவில் ஆறும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News