25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வெயில் காலத்தில் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வெயில் காலத்தில் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க...

ஒவ்வொருவருமே தங்களின் முகம் எப்போதும் பிரகாசமாகவும், சரும பிரச்சனைகளின்றியும் இருக்க வேண்டுமென்று விரும்புவோம். இதற்காக சருமத்திற்கு பலவிதமான பராமரிப்புக்களையும் கொடுத்து பாதுகாத்து வருவோம். ஆனால் கோடைக்காலம் வந்துவிட்டால், இவை அனைத்தும் பாழாகி, சருமத்தில் பலவிதமான பிரச்சனைகளை சந்திப்பதோடு, சருமமும் வெயிலால் கருமையாகத் தொடங்கும்ஆனால் நீங்கள் உங்கள் முகம் வெயில் காலத்தில் கருமையாகக்கூடாது என்று விரும்பினால், ஒருசில பொருட்களைக் கொண்டு தினமும் தவறாமல் பராமரிப்புக்களைக் கொடுக்க வேண்டும். முக்கியமாக ஃபேஸ் பேக்குகளைப் போட வேண்டும்.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி 3-5 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 15, 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2, 3 முறை பயன்படுத்தி வர, சருமம் பளிச்சென்று பிரகாசமாக இருக்கும்.

 ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் அரிசி மாவுடன், சிறிது தயிரை சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும். பின் அதை முகம், கழுத்து மற்றும் கருமையாக இருக்கும் கைகளில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு அதை 20 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 3 முறை பயன்படுத்தி வந்தால், கருமையாக இருக்கும் சருமம் வெள்ளையாக மாறுவதைக் காணலாம்.

ஒரு பௌலில் 1 டேபிள் ஸ்பூன் தயிரை எடுத்து, அத்துடன் 1/2 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.  பின் அதை முகம், கழுத்து மற்றும் கைகளில் தடவி சில நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். * பின்பு 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். * இந்த ஃபேஸ் பேக்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தி வந்தால், சரும கருமை விரைவில் நீங்கும். 

முதலில்4,5 ஸ்ட்ராபெர்ரியை துண்டுகளாக்கி, பிளெண்டரில் போட்டு, அத்துடன்1 டேபிள் ஸ்பூன் தயிர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். * பின் அதை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அதன் பின் குளிர்ந்த நீரால் முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு3 முறை பயன்படுத்தி வந்தால், முகம் பளிச்சென்று பொலிவோடு மின்னும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News