25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2024-25 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள்  விண்ணப்பிக்கலாம் என  மாவட்ட ஆட்சித்தலைவர்  அவர்கள் தகவல்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2024-25 ஆம் ஆண்டிற்கான மணிமேகலை விருதிற்கு தகுதியான சமுதாய அமைப்புகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தகவல்.

 தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரக பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகிய சமுதாய அமைப்புகளுக்கு 2024-25-ஆம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு, 2024-25-ஆம் ஆண்டு செயல் திட்டத்தின்படி தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தால் திட்டமிடப்பட்டுள்ளது.மணிமேகலை விருது பெறுவதற்கு விண்ணப்பிக்கும் சமுதாய அமைப்புகளை கீழ்க்காணும் 6 காரணிகளின் அடிப்படையில் தேர்வு செய்திடவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1. கூட்டம் தொடர்ந்து முறையாக நடத்தப்பட்டிருக்க வேண்டும்.
2. சேமிப்புத் தொகையினை பயனுள்ளதாக பயன்படுத்திருக்க வேண்டும்.
3. வங்கிக்கடன் பெற்றிருக்க வேண்டும்.
4. குழு உறுப்பினர்கள் பொருளாதார மேம்பாடு அடைந்திருக்க வேண்டும்.
5. திறன் வளர்ப்பு மற்றும் வாழ்வாதார பயிற்சிகள் வழங்கப்பட்டிருக்க வேண்டும்.
6. சமூக நல நடவடிக்கைகளில் பங்கெடுத்திருக்க வேண்டும்.

       அதன்படி, விருதுநகர் மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுயஉதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வட்டார அளவிலான கூட்டமைப்பு, கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள் மற்றும் நகர்புரப்பகுதிகளில் சிறப்பாக செயல்படும் சுய உதவிக்குழுக்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு, நகர அளவிலான கூட்டமைப்பு ஆகியவற்றிற்கு 2024-25-ம் நிதி ஆண்டிற்கு மணிமேகலை விருது வழங்குவதற்கு உரிய வழிகாட்டுதல்களை பின்பற்றி தகுதியுடைய சமுதாய அமைப்புகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News