காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026 முன்னிட்டு டாஸ்மாக் மதுபான விற்பனைக் கடைகள் ஒரு நாள் மட்டும் தற்காலிகமாக மூடப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் எப்எல்-1/ எப்எல்-2 / எப்எல்-3 / எப்எல்-3A / எப்எல்-3AA / எப்எல் -4A மற்றும் எப்எல்-11 ஆகிய மதுபான உரிம ஸ்தலங்களை, 2003-ம் ஆண்டைய தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் விதி 12 துணை விதி (1) The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules, 1981-ன்படி, காந்தி ஜெயந்தி தினமான 02.10.2026 அன்று (ஒரு நாள் மட்டும்) தற்காலிகமாக மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் அவர்களால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேற்படி உத்தரவினை மீறி செயல்படும் டாஸ்மாக் நிறுவனப் எப்எல்-1/ எப்எல்-2 / எப்எல்-3 / எப்எல்-3A / எப்எல்-3AA / எப்எல் -4A மற்றும் எப்எல்-11 ஆகிய மதுபான ஸ்தலங்களின் உரிமதாரர்களின் மீது The Tamil Nadu Liquor (Licence and Permit) Rules,1981-ன்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஷரண்யா அறி I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply