25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வாக்காளர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 07 சட்டமன்ற தொகுதிகளிலும், அமைந்துள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும். 2026-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக் கொண்டு சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் அளிக்க வேண்டும்.மேலும், வாக்காளர்கள் இணையவழியாகவும் நேரடியாக இந்திய தேர்தல் ஆணையத்தின் https://voters.eci.gov.in/  என்ற இணையதளம் மற்றும் “Voters Help Line” என்ற கைபேசி செயலி மூலம் விண்ணப்பம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்கள் பூர்த்தி செய்தல், இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் சந்தேகம் ஏதும் இருப்பின் கட்டணமில்லா தொலைபேசி எண் 044-1950 என்ற எண்ணை தொடர்பு கொண்டு விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம்.

மேற்படி இணையவழியில் விண்ணப்பிக்க இயலாதவர்கள் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை 19.12.2025 (வெள்ளி) முதல் 18.01.2026 (ஞாயிறு) வரை வரை வட்டாட்சியர், வருவாய் கோட்டாட்சியர் மற்றும் அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலங்களிலும் அளிக்கலாம்.
மேலும் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 27.12.2025 (சனிக்கிழமை), 28.12.2025 (ஞாயிறுக்கிழமை), 03.01.2026 (சனிக்கிழமை) மற்றும் 04.01.2026 (ஞாயிறுக்கிழமை) ஆகிய நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. இம்முகாம்களில் புதியதாக பெயர் சேர்க்க, பெயர் நீக்கம் செய்ய, பெயர் திருத்தம், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற விரும்புபவர்கள் அதற்கான விண்ணப்பங்களை அளிக்கலாம்.

எனவே, பொது மக்கள் சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை வாக்குச்சாவடி மையங்களிலும், தேர்தல் பதிவு அலுவலகத்திலும், இணையவழியாகவும் சரிபார்த்துக் கொள்ளவும், புதியதாக பெயர் சேர்த்தல்,  நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம் செய்ய விரும்புபவர்கள் இந்த வாய்ப்பினை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News