25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய விளையாட்டு பாட்மின்டனில் இரண்டு தங்கம் வென்றார் சதிஷ்குமார்.

 இந்தியாவின் 38வது தேசிய விளையாட்டு உத்தரகாண்ட்டில் ஆண்களுக்கான ஒற்றையர் பாட்மின்டன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் தங்கப்பதக்கம் கைப்பற்றினார். இதன் பைனலில் தமிழக வீரர் சதிஷ் குமார் கருணாகரன், உத்தரகாண்ட்டின் சூர்யாக்ஸ் ராவத் மோதினார். இதில் சதிஷ்குமார்  21-17, 21-17 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பைனலில் தமிழகத்தின் சதிஷ் குமார், ஆத்யா ஜோடி, பைனலில் மகாராஷ்டிராவின் தீப் ராம்பியா, அக்சயா ஜோடியை எதிர்கொண்டது. இதில் தமிழக ஜோடி 21-11, 20-22, 21-8 போராடி வெற்றி பெற்று, தங்கம் வசப்படுத்தியது. 

பெண்களுக்கான பாட்மின்டன் ஒற்றையர் பைனலில் ஹரியானாவின் அன்மோல், உத்தரகாண்ட்டின் அனுபமாவை சந்தித்தார்.இதில் அன்மோல் 21-16, 22-20 என நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கப்ப தக்கம் வென்றார்.

பெண்கள் இரட்டையரில் கர்நாடகாவின் அஷ்வினி, ஷிகா ஜோடி  21-17, 15-21, 21-12 என காயத்ரி, மானசா ஜோடியை வென்று தங்கம் கைப்பற்றியது. தமிழ கத்தின் வர்ஷினி, அருள் பாலா ஜோடி வெண்கலம் வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News