25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


விவாசயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 19 (பத்தொன்பது) இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

விவாசயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்ய 19 (பத்தொன்பது) இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது, விவசாயிகள் விளைவித்த நெல்லை நேரடியாக விற்பனை செய்து பயன்பெறலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் கே.எம்.எஸ் 2025-2026 பருவத்தில் விவசாயிகளிடமிருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்கு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் வத்ராப், கான்சாபுரம், முஷ்டாக்குறிச்சி,  இராமசாமியாபுரம், தம்பிப்பட்டி, தேவதானம், சேத்தூர், மேட்டுப்பட்டி, சுந்தரபாண்டியம், முடுக்கன்குளம் மற்றும் சென்னிலைக்குடி ஆகிய இடங்களில் 11 (பதினொன்று) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறந்து செயல்பட்டு வருகின்றன.

  மேலும், தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ள மேலூர் துரைச்சாமியாபுரம், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன்நல்லமங்களம், கோவிலூர், முகவூர், கம்மாப்பட்டி, கீழகாஞ்சிராங்குளம் மற்றும் ஏ.முக்குளம் ஆகிய பகுதிகளில் 8 (எட்டு) நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை குவிண்டால் ஒன்றுக்கு சன்ன ரகம் (GR”A”) ரூ.2545/- மற்றும் பொது ரகம் (common) ரூ.2500/-ம் விவசாயிகள் வங்கிக் கணக்குகளில் ECS மூலம் வரவு வைக்கப்படும்.

 எனவே, விருதுநகர் மாவட்ட அனைத்து விவசாயிகளும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் செயல்படுத்தப்படும் மேற்குறிப்பிட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  அறுவடை செய்த நெல்லினை விற்பனை செய்து பயனடையுமாறும், நெல் கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் நெல்லினை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். மேலும் வியாபாரிகள் நெல் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

 மேலும், நெல் கொள்முதல் தொடர்பாக தேவையான விபரங்களுக்கு தமிழ்நாடு  நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல அலுவலக  தொலைபேசி  எண். 04562 252607-ல் தொடர்பு கொள்ளலாம் எனவும் மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News