சிறுநீரில் கல் சேராமல் இருக்க முள்ளங்கி.
முள்ளங்கி கிழங்கு வகை வெள்ளை, சிவப்பு "ஆகிய நிறங்களில்தான் முள்ளங்கி கிடைக்கிறது. சில இடங்களில் மற்ற நிறங்களிலும் பயிராகிறது. நன்கு சாப்பிட்ட திருப்தி வேண்டும் என்பவர்கள் மட்டும் சிவப்பு முள்ளங்கியை அதிகமாகப் பயன்படுத்துங்கள்.
முள்ளங்கி, உடலுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கும். முள்ளங்கி இலை பசியைத் தூண்டி, சிறுநீரைப் பெருக்கி, தாது பலம் கொடுக்கும். இதைச் சமைத்து உண்டால் அதிகமாகச் சிறுநீர் கழிப்பது, நீர்ச்சுருக்கு, வயிற்று எரிச்சல், ஊதிய உடம்பு, வாதம், வீக்கம், காசநோய், கபநோய், இருமல் ஆகியவை தீரும்.
காலை, மாலை இருவேளையும் முள்ளங்கிச் சாற்றை அருந்தினால், சிறுநீரகக் கோளாறு நீங்கும். குழந்தைகள் மந்தமாக இல்லாமல் சுறுசுறுப்பாக இருக்கவும், நன்கு படிக்கவும், உடல் உறுதியுடன் வளரவும் முள்ளங்கியுடன் முள்ளங்கிக் கீரையையும் அடிக்கடி உணவில் சேருங்கள். காரணம், கீரையில் பாஸ்பரஸ், சுண்ணாம்புச் சத்து ஆகியவை அதிகமாக உள்ளன. இவை சுறுசுறுப்பை வழங்கும்.
சிறுநீரில் கல் சேராமல் இருக்க முள்ளங்கிச் சாம்பார் செய்து சாப்பிடலாம்.
நீர் அதிகமாக இருக்கிறது, கால்சியம், பொட்டாசியம், சுண்ணாம்பு, இரும்புச்சத்து ஆகியவை இருக்கின்றன.
வெள்ளை முள்ளங்கியின் பலன்கள்
அதிகக் குளிர்ச்சி தரும். வாயுவை வெளியேற்றும். சிறுநீரகக் கல் அடைப்பு, பித்தப்பை கல் உள்ளவர்கள் வாரம் இரண்டு நாள் சாப்பிட்டு வந்தால் கல் கரைந்து வெளியேறும். ஆஸ்துமா நோயாளிகள் வெள்ளை முள்ளங்கியைச் சாப்பிட வேண்டாம்.
சிவப்பு முள்ளங்கியின் பலன்கள்
சிவப்பு முள்ளங்கியில் கந்தகம், கால்சியம், வைட்டமின் சி சத்து ஆகியவை இருக்கின்றன.
கை, கால் மூட்டு வீக்கத்தைக் குறைக்கும். ரத்தத்தில் யூரிக் அமில அளவைக் குறைக்கும். மித உஷ்ணம் தரும், சிறுநீரை வெளியேற்றும். அதிக அசிடிட்டி உள்ளவர்கள் சாப்பிடலாம்.
0
Leave a Reply