பாலக் கீரை சட்னி.
தேவையான பொருட்கள்:
பாலக் கீரை - 1 கட்டு (சுத்தம் செய்து நறுக்கியது),
கடலை பருப்பு - 1 தேக்கரண்டி,
உளுத்தம் பருப்பு - 1 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் (அல்லது பச்சை மிளகாய்) - 3 முதல் 4,
சின்ன வெங்காயம் - 6 முதல் 8 (அல்லது 1 பெரிய வெங்காயம்),
பூண்டு - 3 பல்,
இஞ்சி - சிறிய துண்டு,
தேங்காய் துருவல் - 2 மேசைக் கரண்டி,
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு,
எண்ணெய் - தேவையான அளவு,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க:
கடுகு - 1 தேக்கரண்டி,
கருவேப்பிலை - சிறிதளவு,
பெருங்காயத்தூள் – சிறிதளவு
.
செய்முறை :
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.
அதனுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு மற்றும் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு நறுக்கி வைத்துள்ள பாலக் கீரையை சேர்த்து, கீரை சுருங்கும் வரை மிதமான தீயில் சில நிமிடங்கள் வதக்கி தனியாக எடுத்துக் கொள்ளவும்.
வதக்கிய பொருட்கள் நன்றாகக் குளிர்ந்ததும், அதனுடன் தேங்காய் துருவல், புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மிகர்ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
தாளிப்பு கரண்டியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கருவேப்பிலை மற்றும் பெருங்காயத்தூள் தாளித்து சட்னியில் கொட்டவும்.சுவையான பாலக் கீரை சட்னி தயார்.
வீடுகளில் இட்லி, தோசை மற்றும் சாதத்திற்கு தொட்டுக் கொள்ள செய்யப்படுகிறது.
0
Leave a Reply