25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய குடற்புழு நீக்க தினம்-2026 னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் துவக்கி வைத்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய குடற்புழு நீக்க தினம்-2026 னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர்  அவர்கள் துவக்கி வைத்தார்.

 விருதுநகர் மாவட்டம், காரியபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சியில்  (10.02.2026), பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்துத் துறை சார்பில், தேசிய குடற்புழு நீக்க தினம்-2026னை முன்னிட்டு, குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் மரு.என்.ஓ.சுகபுத்ரா, I A S., அவர்கள் துவக்கி வைத்தார்.விருதுநகர் மாவட்டத்தில்  ஒரு வயது குழந்தை முதல் 19 வயது வரையுள்ள 5,78,289 சிறுவர், சிறுமியர்களுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரை உள்ள 1,33,116 பெண்களுக்கும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்த சோகை, உடல் சோர்வு, மனச்சோர்வு,  மூளை வளர்ச்சி குன்றுதல் போன்ற பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் பொருட்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் பணிகளை  மாவட்ட ஆட்சியர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

 சுகாதார வசதிகள் குறைவாக உள்ள இடங்களில் மண்மூலம் குடற்புழு ஒட்டுண்ணிகளால் குடற்புழு  தொற்று பரவுவதால், குழந்தைகளின் வளர்ச்சியிலும் மற்றும் உடல்நலனிலும் குறைபாட்டை ஏற்படுத்துகிறது. இதனால் அவர்களுக்கு இரத்தசோகை ஏற்படுகிறது.  இதனால் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுகிறது.எனவே, திறந்தவெளி கழிப்பிடத்தை பயன்படுத்தாமலும் நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்வதனாலும்  இரத்தசோகை வராமல் தடுக்க முடியும்.இதனடிப்படையில், காரியாபட்டி வட்டம், ஆவியூர் ஊராட்சி ஒன்றிய  ஆரம்பப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு மதிய உணவு உண்ட பின்னர்   மாவட்ட ஆட்சியர் அவர்கள் குடற்புழு நீக்க  மாத்திரை வழங்கினார்.

 மேலும், இம்மாத்திரைகளை தவறாமல் வாங்கி  மென்று உட்கொள்ளுமாறும் மற்றும் இதனை மருத்துவர்களும், பள்ளி ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் எனவும், மேலும் விடுபட்ட சிறுவர், சிறுமியர்கள் மற்றும் பெண்களுக்கு வரும் 17.02.2026  அன்று குடற்புழு நீக்க  மாத்திரை வழங்கப்படும் எனவும்  மாவட்ட ஆட்சியர் அவர்கள் தெரிவித்தார்.இவ்விழாவில்,  இணை இயக்குநர் மரு.எஸ்.செந்தில்குமார், விருதுநகர் மாவட்ட சுகாதார அலுவலர் மரு.வே.யசோதாமணி,  மருத்துவ அலுவலர்கள் தலைமையாசிரியர், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ மாணவியர்கள் ஆகியோர்   கலந்து கொண்டனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News