25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழக அணி7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடரில் தமிழக அணி7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது.

இந்திய போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் உள்ளூர் ஒருநாள் தொடர், ஜெய்ப்பூரில் நடந்த ('சி') போட்டியில் மும்பை, பஞ்சாப் அணிகள் மோதின.

பஞ்சாப் அணிக்கு அன்மோல்பிரீத்  சிங் (57), ராமன்தீப் சிங் (72) கை கொடுத்தனர். 45.1 ஓவரில் 216 ரன் எடுத்தது, அடுத்து களம் இறங்கிய, மும்பை அணி 215 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பஞ்சாப் அணி 1 ரன்னில்  வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

ஆமதாபாத்தில் நடந்த 'ஏ ' பிரிவு போட்டியில் தமிழகம், கேரளா மோதின. 50 ஓவரில் கேப்டன் ஜெகதீசன் (139) சதம் அடிக்க , தமிழக அணி 294/8 ரன் எடுத்தது.

கேரள அணி 40.2 ஓவரில் 217 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. தமிழக அணி 77 ரன்னில் வென்றது. 7 போட்டியில் 12 புள்ளியுடன் (3 வெற்றி, 4 தோல்வி), 5வது இடம் பிடித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News