25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


வயதான குழந்தைகள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

வயதான குழந்தைகள் .

தனியாக ஒரு ரூமில் போட்டு வேளா வேளைக்கு சாப்பாட்டை போட்டு விட்டு கதவை அடைத்து விடும் அவலம் வயதானவர்களுக்கு பல இடங்களில் உண்டு.வணக்கத்திற்குரிய வயதான பெரியவர்கள் வீட்டில்இருந்தால் பலருக்கு பாரமாக இருக்கிறது. சொன்னதையே சொல்லும் கிளிப்பிள்ளையாக இருப்பினும் மதிக்க வேண்டும்.

தினமும் 1மணி நேரம் அவர்களிடம் ஏதாவது ஒன்றைப் பற்றி பேசி அதைப்பற்றிய அபிப்பிராயத்தைக் கேட்டு விட்டு உங்களுடைய நிலையும் கூறவேண்டும். காலம் இப்படி இருக்கிறது இப்படித்தான் மாற வேண்டியிருக்கு என்று கருத்துப் பறிமாற்றமோ அவர்களிடம் சின்னச்சண்டையாவது போடுங்கள். அவர்கள் மனதில் நாள் பூராவும் அசை போட்டு சந்தோஷமாக இருப்பார்கள் வெளியூரில் இருக்கிறீர்களா?. தினமும் ஒரு போன்கால் எப்படி இருக்கிறீர்கள் என்று குசலம் விசாரித்து, மருந்து சாப்பிடுங்கள் என்று கூறினால் பக்கத்தில் இருக்கத் தேவையில்லை. அன்பு அவர்களுக்கு பக்கபலமாக இருக்கிறது. ஒரு விதத்தில் இவர்கள் வயதான குழந்தைகளே !

கடிதத்தில் அம்மாவின் கைவண்ணத்தையும், அப்பாவின் உபதேசத்தையும் கோடிட்டு எழுதுங்கள். இந்தக் கடிதம் போதும் ஒன்றிரண்டு மாதங்களுக்கு மறுபடியும் இன்னொரு கடிதம், சின்ன  GIFT கொடுங்கள். குறைந்த விலையாக இருந்தாலும், தனக்காக தன் குழந்தைகள் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே,அவர்களை ஆரோக்யமாக வைத்திருக்கும்.

உங்கள் குழந்தைக்கும், பாட்டி, தாத்தாவுடன் பேசவும், பழகவும் வாய்ப்பைக் கொடுங்கள். பெரியவர்கள் இல்லையா பக்கத்து வீட்டிலோ அல்லது முதியோர் இல்லத்திற்கோ சென்று பழக விடுங்கள். உங்கள் குழந்தைகள் உங்களை பிற்காலத்தில் நிச்சயமாக மதிப்பார்கள்.

பள்ளிகளில் ஏதேதோ Project Report கேட்கிறார்கள்.முதியவர்களிடம் பேசி அதிலிருந்து அவர்கள் கிரஹித்துக் கொள் வதை எழுதச் சொல்லலாம். பெரியவர்களுக்கு பொழுது போகும், குழந்தைகளுக்கும் பழைய கால வாழ்க்கையை தெரிந்து கொள்ள ஒரு சந்தர்ப்பம்.

சமூக சேவை செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் தனியாக இருக்கும் வயதானவர்களிடம் சில மணி நேரங்களைச் செலவிடுங்கள். இது பெரியதர்ம காரியம். பெரியவர்கள் மன அழுத்த நோய்களுக்கு, நாம் காரணமாகி விடக்கூடாது.

பெரியவர்களை மதித்து அவர்களுடைய வாழ்க்கையில்  பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டு இருபக்கமும் சந்தோஷமாக  வாழலாம்.அன்பிற்காக ஏங்கும் பெரியவர்களை ஒருபடி கூட மரியாதை கொடுத்து தர்மத்தையும் அவர்களுடைய நம்பிக்கையையும் காப்போம்.

                                                                      திருமதி.குணா பாஸ்கர் ராஜா 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News