25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரம்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்வே சர்வதேச செஸ்: கார்ல்செனை வீழ்த்தி பிரக்ஞானந்தா அபாரம்!

 நார்வே செஸ் போட்டியின் 3-வது சுற்றில், தமிழக வீரர் பிரக்ஞானந்தா உலக 'நம்பர் ஒன்' வீரரான மாக்னஸ் கார்ல்செனை 46-வது நகர்த்தலில் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். (கார்ல்செனை இவர் வீழ்த்துவது இது 2-வது முறை).

 இந்த வெற்றியின் மூலம் 3 புள்ளிகளைப் பெற்ற பிரக்ஞானந்தா, மொத்தமாக 4½ புள்ளிகளுடன் 2-வது இடத்திற்கு முன்னேறினார். தோற்ற கார்ல்சென் கடைசி இடத்தில் உள்ளார்.

 மற்றொரு இந்திய வீரரான குகேஷ், பிரான்சின் அலிரெஜாவுடன் மோதிய ஆட்டம் 'டிரா' ஆனது. பின் வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'ஆர்மகேட்டன்' சுற்றில் குகேஷ் தோல்வியடைந்து 1 புள்ளியைப் பெற்றார்.

 3-வது சுற்று முடிவில் பிரான்சின் அலிரெஜா 7½ புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News