ராஜபாளையம் ராஜுக்கள் கல்லூரியில் தேசிய கருத்தரங்கம்.
ராஜபாளையம் ராஜூக்கள் கல்லூரியில் பழங்குடியினர் பற்றிய இரண்டு நாள் தேசிய கருத்தரங்கம் கல்லூரியில் கருத்தரங்க அறையில் நடைபெற்றது. புது தில்லி இந்திய வரலாற்று ஆராய்ச்சி கவுன்சில் நிதிநல்கையுடன் ஆங்கிலத்துறையும் இணைந்து இந்த கருத்தரங்கை நடத்தியது. "தென்னிந்தியப் பழங்குடியின வழிபாட்டு விழாக்கள், சடங்குகள் மற்றும் வாய்மொழிப் பாரம்பரிய நோக்கில் தமிழ்நாடு". என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் ஆங்கிலத்துறை பேராசிரியை முனைவர் சி.பி.ஸ்வாதி முத்து வரவேற்புரை ஆற்றினார்.
கல்லூரி முதல்வர் முனைவர் சி.ராமகிருஷ்ணன் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக புது டெல்லி ஐ.சி.எச்.ஆர். ஆய்வின் துணை இயக்குனர் முனைவர் நிதின்குமார் கலந்து கொண்டு கருத்தரங்க தொடக்க உரையாற்றினார். புதுடெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வரலாற்று ஆய்வு மைய இணைப்பேராசிரியை முனைவர் கௌரி தேய் சிறப்புரையாற்றினார். கொடைக்கானல் அன்னை தெரசா பெண்கள் பல்கலைக்கழகப் பதிவாளர் முனைவர் பி.ஜெயப்பிரியா கருத்தரங்க கட்டுரைத் தொகுப்பு முதல் நூலை பெற்றுக்கொண்டு உரையாற்றினார். விருதுநகர் ஸ்ரீ வித்யா இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் முனைவர் எஸ். ராஜாராம் வாழ்த்துரை வழங்கினார்.
இரண்டு நாட்களில் ஐந்து கருத்தரங்க அமர்வுகளில் கோயம்புத்தூர், உடுமலைப்பேட்டை சென்னை, மதுரை, திருநெல்வேலி, போன்ற இடங்களில் இருந்து மூத்த ஆய்வாளர்கள் ஆய்வு மாணவர்கள் பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்களது கட்டுரைகளை வாசித்தனர். கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக பேராசிரியைகள் முனைவர் எஸ்.கவிதா, முனைவர் எஸ்.மீனா பிரியதர்ஷினி, சிவகாசி எஸ்.எஃப்.ஆர் மகளிர் கல்லூரி வரலாற்றுத்துறைப் பேராசிரியைகள் முனைவர் மேகலா, முனைவர் வெண்ணிலா, ராஜுக்கள் கல்லூரி வரலாற்றுத்துறைத்தலைவர் ஆர்.ஜெகன்நாத் ஆகியோர் அமர்வுத் தலைவர்களாக செயல்பட்டனர். நிறைவு விழாவில் திருநெல்வேலி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் ஏ.நவீனா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி சுயநிதிப் பிரிவு ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஆர்.ராமராஜ் வாழ்த்துரை வழங்கினார். நிறைவாக ஆங்கிலத்துறைப் பேராசிரியை பி.ஆர்.சுகன்யா நன்றி கூறினார்.
கருத்தரங்கில் சிவகாசி ராஜராஜன் தலைமையில் பழம் பொருட்கள் கண்காட்சியும் நடைபெற்றது.நிறைவாக ஆங்கிலத்துறை பேராசிரியர் முனைவர் பி.ஆர்.சுகன்யா நன்றியுரை ஆற்றினார். ஆங்கிலத்துறை மற்றும் வரலாற்றுத்துறைப் பேராசிரியர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0
Leave a Reply