25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர்.

திருமங்கலத்தில் இருந்து ராஜபாளையம் வரை 71.6 கிலோ மீட்டர் தூரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி முழுமை அடையும் நிலையை எட்டியுள்ளது. பலஇடங்களில் மேம்பால பணிகள் மட்டுமே முடிவடைய வேண்டிய நிலையுள்ளது. இந்நிலையில் கிருஷ்ணன் கோவிலில் இருந்து ஸ்ரீவில்லிபுத்துார் புதிய பஸ்ஸ்டாண்ட் வரையுள்ள நான்கு வழிச்சாலையில் பல கனரகவாகனங்கள், கார்கள்,  இளைஞர்களும் பைக் ரேஸில், அதி வேகத்தில் வந்து விபத்தில் சிக்கும் நிலை கடந்த சிலநாட்களாக ஏற்பட துவங்கியுள்ளது.  ஒருகார் கவிழ்ந்து நான்கு பேர் காயமடைந்தனர்.டூவீலரில் சென்ற எஸ்.ஐ. ஒருவர் தவறிவிழுந்து பலியானார்.வெளி மாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்கள் கிருஷ்ணன் கோவிலுக்குள் செல்லாமல் நான்கு வழிச்சாலையிலேயே பயணிக்கின்றன. இவர்கள் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே சர்வீஸ் ரோட்டில் இறங்கும் போது வேகத்தை கட்டுப் படுத்தாமல் விபத்து ஏற்படுகிறது.விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வாகன ஓட்டிகள் எதிர் பார்க்கின்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News