25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ்   பிரக்ஞானந்தாவை வென்றார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிராண்ட் செஸ் மூன்றாவது தொடரில் குகேஷ் பிரக்ஞானந்தாவை வென்றார் .

 10வது சீசன் (மொத்தம் 3 தொடர்). கிராண்ட் செஸ் தொடரின் மூன்றாவது தொடர் குரோஷியாவில் நடக்கிறது.உலக சாம்பியன், இந்தியாவின்குகேஷ், பிரக்ஞானந்தா, நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் 10 பேர் பங்கேற்கின்றனர். முதலில் 'ரேபிட்' முறையில் போட்டி நடக்கிறது.

முதல் நாளில் 3 சுற்று நடந்தன. முதல் சுற்றில் குகேஷ், போலந்தின் ஜான்டுடாவிடம் தோல்வியடைந்தார். குகேஷ், அடுத்த சுற்றில் பிரான்சின் அலிரே சாவை வென்றார். 3வது சுற்றில் குகேஷ் - பிரக்ஞானந்தா மோதினார்.குகேஷ், 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

முதல் 3 சுற்று முடிவில் கார்ல்சன் (4.0), ஜான் டுடா (4.0), அமெரிக்காவின் வெஸ்லே (4.0), குகேஷ் (4.0) 'டாப் -4' இடங்களில் உள்ளனர். முதல் இரு சுற்றில் 'டிரா' செய்த பிரக்ஞானந்தா (2.0) கடைசி இடத்தில் (10) உள்ளார்.

ஜூனியர் செஸ்: இந்தியா 3 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம்7 பதக்கம் கைப்பற்றியது. இந்தியா அபாரம்

ஜார்ஜியாவில் வளர்ந்து வரும் நட்சத்திரங்களுக் கான உலக கோப்பை ஜூனியர் ,சர்வதேச செஸ் கூட்ட மைப்பு ('பிடே') சார்பில் ('கேடட்') தொடர் நடந்தது.  10 வயதுக்கு உட்பட்டோருக்கான ஓபன் பிரிவில் பைனலில் இந்தியாவின் சர்பர்தோ மானி தங்கப்பதக்கம் வென்றார்.

பெண்கள்பிரிவு.

(10 வயது) பைனலில் இந்தியாவின் திவி பிஜேஷ், சீனாவின் ஜிஹான் செனை வீழ்த்தி, தங்கம் கைப்பற்றினார். வெண்கலப் பதக்கத்துக் கான போட்டியில் இந்தியாவின் ஷர்வானிகா (தமிழகம்), ரஷ்யாவின் வோல்கோவாவை வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News