25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


கிரிக்கெட் ஐ.சி.சி.,  தரவரிசை பவுலர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் முகமது சிராஜ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

கிரிக்கெட் ஐ.சி.சி.,  தரவரிசை பவுலர்கள் பட்டியலில் முன்னேறிய இந்தியாவின் முகமது சிராஜ்

இங்கிலாந்து பயணத்தை வெற்றிகரமாக முடித்த இந்திய அணியினர் தாயகம் திரும்பினர். இந்திய வேகப்பந்துவீச் சாளர் முகமது சிராஜ் 31, பீல்டிங் பயிற்சியாளர் 

திலிப் உடன் லண்டனில் இருந்து மும்பை வந்தார். அங்கிருந்து, தனது சொந்த ஊரான ஐதராபாத் சென்றார் சிராஜ். ஐதராபாத் விமான நிலையத்தில் இந்திய ரசிகர்கள் சிராஜுக்கு  உற்சாக வரவேற்பு அளித்தனர்.  

லண்டன், ஓவல் மைதானத்தில் நடந்த கடைசி டெஸ்டில் இந்தியாவின் முகமது சிராஜ், இரு இன்னிங்சிலும் சேர்த்து 9  விக்கெட் (4+5) சாய்த்து, 9 ஆட்ட நாயகன் விருது வென்றார்.இத்தொடரில் 5 போட்டியிலும் விளையாடிய சிராஜ், 1113 பந்துகள், 185.3 ஓவர் வீசி, 23 விக்கெட் கைப்பற்றினார் 

இதனிடையே டெஸ்ட் போட்டியில் சிறந்த வீரர்களுக்கான ஐ.சி.சி.,  தரவரிசை பவுலர்கள் பட்டியலில் (674 புள்ளி), 27வது இடத்தில் இருந்து முதன் முறையாக 15வது இடத்துக்கு முன்னேறினார் இந்தியாவின் சிராஜ்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News