25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் மந்தனா, பிரதிகா சதம் அடித்து கோப்பையை கைப்பற்றி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் மந்தனா, பிரதிகா சதம் அடித்து கோப்பையை கைப்பற்றி வெற்றி.

இந்திய அணிக்கு கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பிரதிகா அசத்தல் துவக்கம் தந்தனர். மந்தனா 70 பந்தில் சதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு 233 ரன் சேர்த்த போது, மந்தனா (135 ரன், 80 பந்து, 7×6, 12×4) அவுட்டானார். சிறப்பான பேட்டிங்கை தொடர்ந்த பிரதிகா, ஒரு நாள் அரங்கில் தனது முதல் சதம் கடந்தார்.  

இந்திய பெண்கள் அணி ஒருநாள் அரங்கில் அதிகபட்சமாக 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு  435 ரன் குவித்தது. ஜெமிமா (4), தீப்தி (11) அவுட்டாகாமல் இருந்தனர். 

ஒருநாள் அரங்கில் அதிக சதம் அடித்த இந்திய வீராங்கனை வரிசையில் முதலிடத்தில் தொடர்கிறார் மந்தனா  (10) மிதாலி  (7), ஹர்மன்பிரீத் கவுர் (6) அடுத்து உள்ளனர்.

அயர்லாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய பெண்கள் அணி 304 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News