25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யூத் கன்டெண்டர் சர்வதேச டேபிள் டென்னிசில் இந்திய 'சாம்பியன்கள் ' .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யூத் கன்டெண்டர் சர்வதேச டேபிள் டென்னிசில் இந்திய 'சாம்பியன்கள் ' .

சர்வதேச டேபிள் டென்னிஸ் சார்பில் ' யூத்' கன்டெண்டர் தொடர், ஜோர்டானில் இந்தியாவின்  அனன்யா, அன்கோலிகா  15 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் அனன்யா 3-0 என (11-8, 11-1, 11-3) நேர் செட்டில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். 

இந்தியாவின் ஹர்குன்வர் சிங், குஷால் ஆண்களுக்கான (19 வயது) பைனலில் ஹர்குன்வர் சிங் 3-1 என்ற செட் கணக்கில் (8-11, 11-8, 11-6, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

இந்தியாவின் வைஷ்ணவி, திவ்யான்ஷி 17 வயது பெண்களுக்கான பைனலில் மோதினர். இதில் திவ்யான்ஷி, 3-0 என (11-5, 11-3, 11-4) வெற்றி பெற்று, சாம்பியன் ஆனார்.

இந்தியாவின் திவ்யான்ஷி, அதர்வா ஜோடி  15 வயது கலப்பு இரட்டையரில் 3-0 என ஈரானின் நிஹால், அல் தஹேர் ஜோடியை வென்று சாம்பியன் ஆனது.

திவ்யான்ஷி, 2-3 என ஈரானின் செடயேசிடம் தோற்று, 19 வயது பிரிவு பைனலில் இரண்டாவது இடம் பிடித்தார்.

இந்தியாவின் சித்தாந்த் (15 வயது), அபிநந்த் (17 வயது), பெண்கள்பிரிவில்அனன்யா(17 வயது), ஷிரியா, வைஷ்ணவி (19 வயது) ஆண்கள் பிரிவில் 3வது இடம் பிடித்தனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News