25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடரில் இந்தியா 24 பதக்கங்களை வென்றது.

மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஜப்பானில், ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல்.3' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத் 17-21, 21-19, 21-10 என ஜப்பானின் புஜிஹராவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

இந்தியாவின் பிரமோத் பகத், மணிஷா ராம தாஸ் ஜோடி, கலப்புஇரட்டையர் 'எஸ்.எல். 3- எஸ். யு. 5' பிரிவு பைனலில் 21-19 என சகநாட்டை சேர்ந்த நிதேஷ் குமார், துளசிமதி முருகேசன் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. 

ஆண்கள் இரட்டையர் 'எஸ்.எல்.3-4' பிரிவு பைனலில் இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-17, 18-21, 21-16 என சகநாட்டை சேர்ந்த ஜெகதீஷ் தில்லி, நவீன் சிவகுமார் ஜோடியை வீழ்த்தி தங்கம் வென்றது. இத்தொடரில் பிர 'மோத் பகத் 'ஹாட்ரிக்' தங்கம் வென்றார்.

இந்தியாவின் நவீன் சிவகுமார் ,ஆண்கள் ஒற்றையர் 'எஸ்.எல். 4' பிரிவு பைனலில் , 21-14, 21-14 என சகவீரர் சுகந்த்தை வீழ்த்தி தங்கம் வென்றார். ஆண்கள் ஒற்றையர் 'எஸ். எச். 6' பிரிவு பைனலில்இந்தியாவின் கிருஷ்ணா நாகர் 23-20, 21-13 என அமெரிக்காவின் மைல்ஸ் கிரேஜெவ்ஸ்கியை தோற்கடித்து தங்கம் வென்றார் .

பெண்கள் ஒற்றையர் 'எஸ்.யு. 5' பிரிவு பைன லில் இந்தியாவின் துளசி மதி முருகேசன் 21-15, - 21-15 என சகவீராங் கனை மணிஷாவை வீழ்த்தி தங்கத்தை வென்றார் . இத் தொடரில் இந்தியாவுக்கு 9 தங்கம், 6 வெள்ளி, 9 வெண்கலம் என, 24 பதக்கங்கள் கிடைத்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News