25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா, பெல்ஜியம் அணிகள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதியில் நாளை மோதுகின்றனர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, பெல்ஜியம் அணிகள் ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி காலிறுதியில் நாளை மோதுகின்றனர்.

ஜூனியர் உல கக் கோப்பை ஹாக்கி 14வது சீசன்  சென்னை, மதுரையில் ,மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடந்தன.

'பி' பிரிவில் இடம் பெற்ற இந்தியஅணி ,சிலி (7-0)  ஓமன் (17-0) சுவிட்சர்லாந்தை (5-0) வீழ்த்தி, புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, காலிறுதிக்கு முன்னேறியது. தவிர, ஸ்பெயின், நெதர்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, அர்ஜென்டினா, நியூசிலாந்து, பெல்ஜியம் என மொத்தம் 8 அணிகள்காலிறுதிக்குள் நுழைந்தன. 

நாளை சென்னையில் நடக்கும் நான்காவது காலிறுதி போட்டியில் இந்திய அணி, ''டி' பிரிவில் இரண்டாவது இடம் பெற்ற பெல்ஜியத்தை எதிர்கொள்கிறது. 

மற்ற காலிறுதி போட்டிகளில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி-பிரான்ஸ், ஸ்பெயின்-நியூசிலாந்து, நெதர்லாந்து-அர்ஜென்டினா அணிகள் போட்டி  போட உள்ளனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News