25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மனநிலை சரியியாக உஜ்ஜீவனவல்லி தாயாரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மனநிலை சரியியாக உஜ்ஜீவனவல்லி தாயாரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

சத்திய ஷேத்திரம் எனப்படும் திருமயம் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். திருமங்கையாழ்வாரால் பாடப்பட்ட இத்தலம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளது.

சத்தியமூர்த்தி, அனந்த சயனமூர்த்தி என்ற இரு மூலவர்கள் இங்குள்ளனர். இதில் அனந்தசயன மூர்த்தி குகைக்கோயிலின்மூலவராகஇருக்கிறார்.கருடன், சித்திரகுப்தன்.மார்க்கண்டேயமகரிஷி,பிரம்மா, தேவர்கள்,ரிஷிகள் கின்னரர்கள்

பெருமாளைச் சுற்றிஇருக்கின்றனர். பாற்கடலில் பெருமாள் நித்திரையில் இருக்கும்போது ஒரு சமயம் மது, கைடபர் என்னும் அரக்கர்கள் ஸ்ரீதேவி, பூதேவியை கடத்தினர். அரக்கர்களுக்கு அஞ்சிய பூதேவி, பெருமாளின் திருவடியிலும், ஸ்ரீதேவி பெருமாளின் மார்பிலும் ஒளி ஒளிந்தனர். பெருமாளின் நித்திரையை கலைக்கமனமில்லாத ஆதிசேஷன், தன் வாயில் இருந்து விஷ ஜுவாலையை கக்கி அரக்கர்களை விரட்டினார். நித்திரை கலைந்த பிறகே பெருமாளுக்கு இந்த விஷயம் தெரிய வர, ஆதிசேஷனின் செயலைப் பாராட்டினார்.

இந்த வரலாற்றை அப்படியே சித்தரிக்கும் விதத்தில் கருவறை உள்ளது. மனநிலை சரியில்லாதவர்கள், நரம்பு தளர்ச்சி உள்ளவர்கள் இங்குள்ள உஜ்ஜீவனவல்லி தாயாரை வழிபட்டால் நற்பலன் கிடைக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News