25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


களாக்காய் சாப்பிட்டால்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

களாக்காய் சாப்பிட்டால்

மிகவும் அதிகம் கிடைக்கும் அதே நேரத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் களாக்காய் சாப்பிட்டால் மிகப்பெரிய அளவில் உடலுக்கு நல்லது என நமது முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். தென்னிந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் களாக்காய் மிக அதிகமாக கிடைக்கும். புளிப்பு இனிப்பு மற்றும் அமிலத்தன்மை கொண்டாய்ந்த களாக்காய் மேற்கு தொடர்ச்சி மலைகளில் அதிகம் வளர்கின்றன. 

 ஆகஸ்ட் முதல் அக்டோபர் வரை களாக்காய் சீசன் உண்டு. வைட்டமின் சி பி இரும்பு சத்து மாங்கனிசியம் பொட்டாசியம் காப்பர் உள்பட பல சத்துக்கள் இந்த களாக்காயில் உள்ளன. களாக்காய் சாப்பிடுவதால் உடலில் நீர்ச்சத்து அதிகரித்து சீரான ரத்த ஓட்டத்திற்கு வழிவகிக்கிறது. மேலும் உடலின் உள் உறுப்புகளுக்கு தேவையான சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கும். தலை முடியை வலிமையாக்கும், கூந்தல் ஆரோக்கியமாகவும் நீளமாகவும்  பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். கருப்பையில் உள்ள கழிவுகளை வெளியேற்றும், சீரான மாதவிடாய் ஏற்படுத்த உதவும் ஆகிய பல நன்மைகள் களாக்காய் சாப்பிடுவதால் உண்டாகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News