25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடல்நல குறைவால் ஹிந்தி நடிகர் தர்மேந்திரா காலமானார் .

நடிகர் தர்மேந்திரா 1960ல் வெளியான தில் பி தேரா ஹம் பி தேரே என்ற ஹிந்தி திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமான இவர், 60 ஆண்டுகளுக்கு மேலாக பல படங்களில் நடித்து வந்தார். ஹிந்தி திரைப்படத் துறையில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கியவர்இவர் நடிப்பில் வெளியான ஷோலே ஹிந்தி படம், மிகப்பெரிய அளவில் ஹிட்டானதை அடுத்து நாடு முழுதும் தர்மேந்திரா பிரபலமானார். பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

300க்கும் மேற் பட்ட படங்களில் நடித்துள்ள இவர், ஹிந்தி சினி மாக்களில் அதிக ஹிட் படங்களை தந்த ஹீரோ என்ற சாதனையையும் படைத்துள்ளார். தர்மேந்திரா நடிப்பில் உருவான இக்கீஸ் படம், அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது. பிலிம்பேர் விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள தர்மேந்திரா, பா.ஜ., சார்பில் ராஜஸ்தானின் பிகானேர் தொகுதியில் இருந்து லோக்சபா எம்.பி.,யாகவும் தேர்வு செய்யப்பட்டார். 2012ல், நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷண் வழங்கி அப்போதை மத்திய அரசு கவுரவித்தது.

இந்நிலையில், சமீபத்தில் உடல்நலக் குறைவால், சுவாசக் கோளாறு மற்றும் இதயநோய் காரணமாக தர்மேந்திரா உயிரிழந்ததாக தகவல் வெளியானது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News