25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


முதுமை ஒரு இனிமை பயணமாக மாற ,ஆரோக்கிய சிந்தனை !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதுமை ஒரு இனிமை பயணமாக மாற ,ஆரோக்கிய சிந்தனை !

முதுமை என்பது கொடுமை அல்ல, அனுபவம் தான், நம் கண் முன்னே விஞ்ஞான வளர்ச்சி கரை புரண்டு ஓடிக்கொண்டிருக்கிறது. இளைய தலைமுறைகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கவே நேரமில்லாமல் இருக்கின்றனர். இந்த மாதிரி கால கட்டத்தில் முதியவர்கள் நம்மை யாரும் கவனிக்கவில்லை என்ற சிந்தனை கூடவே கூடாது என்பது தான் உண்மை. முதுமை ஒரு இனிமை பயணமாக மாற நாம் செய்ய வேண்டியவை.

 

முதுமையில் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால் முதியவர்கள் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது .முக்கியமாக பொருளாதார நிதியிலும், உடம்பை பத்திரமாகப் பார்த்துக் கொள்வது மிக மிக அவசியம். இப்படி நம்மைத் தயார் படுத்திக் கொள்ள 40 வயதிலிருந்தே நாம் தொடங்கி விட வேண்டும். உடற்பயிற்சி செய்தல், கடைசி காலத்தில் நம்மை யாரும் கவனித்துக் கொள்ள மாட்டார்கள். நம்மை நாமே தான் பார்த்துக் கொள்ள வேண்டும். என்று நம் மனதை தயார் படுத்திக் கொள்ள வேண்டும். 

 

அந்திம காலத்திற்கு கண்டிப்பாக சேமித்தல். நாம்  சேமிக்கும் பணம் பல மடங்கு கூட்டக் கூடியசேமிப்புத் திட்டங்களில் சேமித்தல், உணர்ச்சி வசப்படாமல் இருத்தல் வேண்டும்..சின்னதொரு வீட்டில் நிம்மதியாக மனைவியுடன் இருத்தல்.மனைவியோ, கணவனோ இறந்து விட்டால் அதற்கு நாம் தயார் ஆக வேண்டும், பிறப்பு என்பது இறப்பதற்காகத் தானே ? வீட்டு வேலைகளை தம்பதிகள் பகிர்ந்து கொள்ள வேண்டும்.தியானம், யோகா, சிரிப்பது மிகமிக முக்கியம். 

 

மகனுடைய வீட்டிலோ, மகளுடைய வீட்டிலோ, இருக்க வேண்டி இருந்தால், அவர்களுக்கு சின்ன, சின்ன உதவிகளைச் செய்யலாம். பேரக் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்லுதல் ,காய்கறி வாங்கிக் கொடுத்தல், பால்காரன் வந்தால் வாங்கி, முடிந்தால்காய்ச்சிவையுங்கள்.நம்மால் முடிந்த வேலையைச் செய்யலாம், முடியா விட்டால் விட்டு விட வேண்டும். நம் குழந்தைகளுக்கு நாம் பாரமாக இருக்கக் கூடாது. பாவம் அவர்கள் என்று நினைக்க வேண்டும்.

 

பொருளாதாரத்தில் தன்னிறைவு மிகவும் அவசியம், சுய பச்சாதாபம் கூடவே கூடாது. முழங்கால் வலி வந்தால் முழங்காலைத் தட்டிக் கொடுத்து இத்தனை வருடம் என்னைச் சுமந்து சென்றாயே ! இப்பொழுது வலிக்கிறதா ? என்று தடவிக் கொடுத்து ஏற்றுக் கொள்ளவேண்டும். 

 

B.P கிடையாது, சுகர் கிடையாது, கொலஸ்ட்ரால் கிடையாது, பின் ஏன் எனக்கு ஹார்ட்அட்டாக் வந்தது என்று மிரண்டு விடக் கூடாது. எது வேண்டுமானாலும், எப்படியிருந்தாலும் வரும்.’It is ok’ நம் மனதை தைரியமாக ஏற்றுக் கொள்ளச் சொல்ல வேண்டும்.எதிர்பார்ப்புகளை குறைக்க வேண்டும், எந்த விஷயத்திலும் மற்றவர்கள் நம்மிடம் கேட்டால் மட்டுமே நம் அபிப்பிராயத்தைக் கூறலாம். வாயை மூடிக் கொள்வது உத்தமம். புதுசாக எதையாவது கற்றுக் கொள்ளலாம், மனதிற்குள் உள்ள எதிர்மறை சிந்தனை என்ற ஒட்டடையை அறவே ஒழித்து விட வேண்டும். மனதை காற்றோட்டமாக ஆரோக்ய சிந்தனை மட்டும் செய்யுங்கள்.

 

MENTAL HEALTH :-

 

M-   MEDITATION(தியானம்)

 

E - EXERCISE (உடற்பயிற்சி)

 

N - NO சொல்லுங்கள் ( இல்லை, முடியாது என்று சொல்லிப் பழகுங்கள்)

 

T - TALK (நன்றாக உங்கள் வயது நண்பர்களுடன் பேசுங்கள்)

 

A- ACCEPT (எதையும் ஏற்றுக் கொள்ள பழகுங்கள்)

 

L-  LAUGH (நன்றாகச் சிரியுங்கள்)

 

முதுமை ஒரு இனிமைப் பயணம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News