விட்டுக் கொடுத்தல்.
மனித உரிமை (Human Rights) என்று வாய் கிழிய பேசும் மனிதர்கள் வீட்டில் மனைவிக்கு உரிமை தருகிறாரா? இல்லை. மனைவி கணவனுக்குஉரிமைதருகிறாரா? சற்று யோசித்துப்பாருங்கள். 100க்கு 99 சதவிகிதம்பேர் 'இல்லை'என்றுதான் சொல்கிறார்கள்.கணவனுக்கு டி.வி.யில் டிஸ்கவரி, பி.பி.சி.பிடிக்கும். மனைவிக்கு சீரியல் நேரம் வந்துவிட்டால் கொஞ்ச நேரம் பார்த்துக்கிறேன் என்றால் அவருக்கு கோபம். காலையிலிருந்து மாலைவரை நான் ஆபிஸிற்கு போய்விட்டு இப்பத்தானே வந்தேன். எனக்குப் பிடித்ததைத்தான் பார்ப்பேன். உரிமை மறுக்கப்படுகின்றது. கணவனுக்குப் பிடித்த படத்தைஹாலில்மாட்டினால்மனைவிக்குப்பிடிப்பதில்லை.எனக்கு ஏ.ஸி. பக்கத்தில் படுக்க வேண்டும். மனைவியோ ஐயோ குளிரடிக்குதே!காத்தாடி வேண்டும் இது மனைவி. கணவனுக்கு கர்நாடக சங்கீதம் பிடிக்கும். மனைவிக்கு வெஸ்டர்ன் மியூசிக் வேண்டும்.
ஒருவருக்கு ஊர் சுற்ற பிடிக்கும். மற்றவருக்கு வீட்டைவிட்டு வெளியே வருவதே பிடிக்காது. ஒரே நேரத்தில் ஒரே ரூமில் இருவருக்கும் எப்படி இரண்டு வித மியூசிக்கை கேட்கமுடியும். இளம் தம்பதியர்கள் அவரவர்களுடைய உரிமை ,விருப்பத்தை விட்டுக் கொடுக்காமல் ,சேர்ந்து வாழ விரும்புகின்றனர். எப்படி ஒரே விட்டில் இரண்டு பேரும்சேர்ந்து வாழ்கின்றனர். பொருளாதாரத்தில் சௌகரியமாக இருக்கும், வேலைக்குப் போகும் தம்பதியர்கள் ,தனித்தனி அறைகளில் தங்களுக்கு பிடித்தமான சூழ்நிலையில் வாழவே ஆசைப்படுகின்றனர். கணவன் மனைவியாக வாழ்வது மட்டும் தங்கள் பங்குங்கு அல்ல. அவரவர்களுடைய விருப்பு, வெறுப்புகளையும் மதிக்க வேண்டும்.
வசதி படைத்தவர்கள் தனித்தனிரூம், டி.வி, மியூசிக் டெக் என்று வைத்துக் கொள்ளலாம். இல்லாதவர்கள் இருக்கும் இடத்திலேயே அவரவர்களுக்கு தகுந்த மாதிரி, ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்வதே ,அர்த்தமுள்ள வாழ்க்கை.கணவன் மனைவியின் சாபத்திற்கோ, மனைவி கணவனின் சாபத்திற்கோ, ஆளாகாமல்அவரவர்களுடைய உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்.இவர்களின் மற்ற உறவினர்களுக்கு நோ.சான்ஸ். அவரவர் வேலையைப் பார்த்துச் செல்வதே மேல், கௌரவம் கூட. உரிமைக்கு மதிப்பளித்து உல்லாசமாக வாழக் கற்றுக் கொள்ளளுங்கள்.
0
Leave a Reply