25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உடலுக்கு குளுமையான உணர்வு தரும் மண்பானை தண்ணீர்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உடலுக்கு குளுமையான உணர்வு தரும் மண்பானை தண்ணீர்

மண்பாண்டங்கள் தான் ஆதிமனிதன் முதன்முதலில் பயன்படுத்தியது .சமைப்பது முதல் உணவு பொருட்களை சேமிப்பது வரை அனைத்து தேவைகளுக்கும் மண்பாண்டங்கள் பயன்படுத்தப்பட்டன. மண்பானை தண்ணீரை குடிக்கும்போது உடலுக்கு கிடைக்கும் தனித்துவமான சுவை, குளுமையான உணர்வுக்கு நிகர் வேறு எதுவும் இல்லை .

மண்பானையில் நிரப்பப்படும் தண்ணீர் இயற்கையாகவே குளிர்ச்சியாக மாறிவிடும்.அதாவது, பானையின் மேற்பரப்பில் உள்ள சிறிய துளைகள் வழியாக நீர் விரைவாக ஆவியாகும். அப்படி ஆவியாகும்போது பானையின் உட்புறத்தில் வெப்பத்தின் வீரியம் குறையும். அதனால் வெப்பநிலையும் கட்டுப்படும்.  மண்பானை ஒரு சிறந்த தண்ணீர் சுத்திகரிப்பு கருவி. மண்பானையில் தண்ணீரை ஊற்றி சில மணி நேரம் வைத்திருந்தால் அந்த தண்ணீரில் உள்ள அனைத்து நச்சு உப்புக்கள், தாதுக்களை மண்பானை உறிஞ்சி வெளியேற்றி விட்டு தூய்மையான குடிநீரை தருகிறது.   

இயற்கையாக வெப்பத்தணிப்பு செய்யப்பட்ட இந்த நீர்,மனித உடலுக்கு மிகவும் நன்மை தரும் என இயற்கை மருத்துவ நூல்கள் கூறுகின்றன. மண்பானையில் சேமிக்கப்படும் தண்ணீரை குடிப்பது வெப்ப பக்கவாதத்தை தடுக்க உதவும் .  தண்ணீரில் கலந்திருக்கும் சத்து மிகுந்த மண் தாதுக்கள் மற்றும் ஊட்டச்சத்துகள் உடலில் நீர்ச்சத்தை தக்க வைக்க உதவி செய்கிறது. உடலின் அதீத வெப்பத்தால் ஏற்படும் தாது உப்பு இழப்புகளை ஈடுகட்டுகிறது. மேலும், உடலின் அமில நிலை அதிகரிக்காமல் தடுக்கும் இயல்பு மண்பானையில் வைக்கப்படும் நீருக்கு உண்டு. இது போல பல நன்மைகள் மண்பானை குடிநீர் மூலம் கிடைக்கிறது என்பதை பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News