25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் கொடியேற்ற வைபவம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அருள்மிகு திரௌபதி அம்மன் திருக்கோவில் கொடியேற்ற வைபவம்

ராஜபாளையத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க திரெளபதி அம்மன் கோவில் அமைந்துள்ளது. திரௌபதி அம்மன் கோவில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெற்று 13ஆம் தேதி பூக்குழி திருவிழா  நடைபெற உள்ளது. கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடத்தி ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இந்த கோவிலில் அருள்மிகு திரெளபதி அம்மன், ஸ்ரீ தர்மர், ஸ்ரீ பீமன், ஸ்ரீ அர்ஜுனன், ஸ்ரீ நகுலன் ஸ்ரீ சகாதேவன், பகவான் ஸ்ரீ கண்ணன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

2024 ஆம் வருடம் பங்குனி மாதம் நடைபெற உள்ள திருவிழாக்கள் வைபவங்கள் விபரம்.நாள் கால் வைபவம்

2024ம் வருடம் 20.03.2024 பங்குனி மாதம் 7ம் தேதி புதன்கிழமை காலை 9.00 மணிக்கு மேல் 10.25 மணிக்குள் நாள்கால் பூஜை செய்து வேலைகள் ஆரம்பிக்கும் வைபவம்.

கொடியேற்றம் வைபவம்

2024ம் வருடம் 03.04.2024 பங்குனி மாதம் 21 ம் தேதி புதன்கிழமை காலை 09.00 மணிக்கு மேல் 11.00 மணிக்குள் அம்மன் கொடியேற்றம் நடத்தும் வைபவம்.

அக்னிபிரவேச, பூக்குழி வைபவம்

2024ம் வருடம் 13.04.2024 பங்குனி மாதம் 31 ம் தேதி சனிக்கிழமை காலை 7.05 மணிக்கு மேல் 09.00 மணிக்குள் அக்னி பூஜைகள் ஆரம்பம்.

அன்று மாலை 4.00 மணிக்கு மேல் 5.25 மணிக்குள் அம்மன் வீதி உலா வந்து பூக்குழி வைபவம்.

2024ம் வருடம் 14.04.2024 சித்திரை மாதம் 01 ம் தேதி ஞாயிறுக்கிழமை மாலை 3.00 மணிக்கு மேல் 04.25 மணிக்குள் அம்மன் வீதி உலா மற்றும் மஞ்சள் நீராட்டு வைபவம்.

மேலே கண்ட அனைத்து வைபவங்களிலும் அனைத்து திருவிழாக்களிலும் அனைவரும் கலந்து கொண்டு திருவிழா நன்கு நடைபெற ஒத்துழைப்பு கொடுத்து அம்மன் திருவருள் பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

தலைவர்,

அருள்மிகு திரௌபதியம்மன் திருக்கோவில் இராஜபாளையம்

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News