25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்  டிரா.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஆசிய கால்பந்து தகுதி போட்டியில்  டிரா.

 2027ல் ஆசிய கோப்பை கால் பந்து தொடர்  சவுதி அரேபியாவில் நடக்க உள்ளது. இதற்கான மூன்றாவது கட்ட தகுதிச்சுற்றில் 24 அணிகள் பங்கேற்கின்றன. உலகத் தரவரிசையில் 134 வது இடத்திலுள்ள இந்திய அணி 'சி' பிரிவில் ஹாங்காங், சிங்கப்பூர், வங்கதேசம் அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.

இந்திய அணி மூன்றாவது போட்டியில், தரவரி சையில் 158 வது இடத்திலுள்ளசிங்கப்பூர் அணியை எதிர்கொண் டது. கோல் கீப்பர் குர்பி ரீத்சிங் கேப்டனாக கள மிறங்கினார். முதல் பாதி ஸ்டாப்பேஜ்' நேரத்தில் சிங்கப்பூர் வீரர் இக் ஷான் பன்டி, ஒரு கோல் அடித்தார். இந்திய அணி 0-1 என பின் தங்கியது.

இரண்டாவது பாதி போட்டியின் கடைசி நிமிடத்தில் (90 வது) ரஹிம் அலி, கோல் அடித்து கைகொடுக்க, தோல்வியில் இருந்து தப்பியது இந்திய அணி. முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது. இந்தியா, சிங்கப்பூர் அணிகள் மீண் டும் அக். 14ல் கோவாவில் நடக்கும் போட்டியில் மோத உள்ளன.

இதுவரை 3 போட்டியில் 2 டிரா, 1 தோல்வியுடன் இந்திய அணி, 2 புள்ளி மட்டும் பெற்று, பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News