25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர்  உத்தரவு.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மகளிர் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஜூன் 30-க்குள் பதிவு செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

விருதுநகர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்துத் தொழிற்சாலை விடுதிகள், தனியார் பணிபுரியும் மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் ஆகியவை, ‘தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் (ஒழுங்குமுறை) சட்டம் 2014’ மற்றும் அதன் 2015-ஆம் ஆண்டு விதிகளின்படி, வரும் *30.06.2026-க்குள்* தங்களது விடுதிகளைக் கட்டாயமாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மரு. என்.ஓ. சுகபுத்ரா, I A S., அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.

ஏற்கனவே பதிவு செய்து, புதுப்பிக்காமல் உள்ள விடுதிகள் உடனடியாகத் தங்களது உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறது. அரசின் விதிமுறைகளின்படி, உரிய உரிமம் பெறாமல் விடுதிகளை நடத்தினால் *2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதம்* விதிக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது.

விடுதிகள் பதிவு செய்வது தொடர்பான முழு விவரங்களையும், இதனுடன் இணைக்கப்பட்டுள்ள *QR Code* மூலம் காணொளி வாயிலாக அறிந்து கொள்ளலாம். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பதிவு செய்யாத அல்லது புதுப்பிக்காத விடுதிகள் மற்றும் நிறுவனங்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான விண்ணப்பங்கள் மற்றும் கருத்துருக்களைக் கீழே குறிப்பிட்டுள்ள முகவரியில் சமர்ப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர்  அவர்கள் தெரிவித்துள்ளார்.

முகவரி

மாவட்ட சமூக நல அலுவலர், மாவட்ட சமூக நல அலுவலகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், விருதுநகர் மாவட்டம் – 626002.

தொலைபேசி எண்: 04562-252701

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News