மிளகாயை தாக்கும் நோய்களும், கட்டுப்படுத்தும் வழிமுறைகளும்....
மிளகாயைதாக்கும்நோய்களில் முக்கியமானது 'கொல்லிட்டோட்ரைக்கம்காப்சிசை' பூசணங்களால்வரக்கூடிய 'ஆந்த்ராக்னோஸ்'. நுனிக்கருகல், பழ அழுகல், பூ உதிர்தல், இலைப்புள்ளி போன்ற அறிகுறிகளை உண்டாக்கும். அதிக மகசூல் இழப்பை ஏற்படுத்தும்.நுனிக்கருகல் அறிகுறி கிளைகள் நுனியிலிருந்து ஆரம்பித்து பின்னோக்கி கருக ஆரம்பிக்கும். நாளடைவில் ஒரு சில கிளைகள் அல்லது செடியின் மேற்பாகம் முழுவதும் கரிந்து காய்ந்து விடும். கிளைகள் ஈரக்கசிவுடன் பழுப்பு நிறத்தில் காணப்படும்.
சில நாட்களில் இப்பகுதி சாம்பல் கலந்த வெண்மை அல்லது வைக் கோல் நிறத்தில் மாறும். நோயின் தீவிரம் அதிகமாகும் போது சில கிளைகள் அல்லது செடி முழுவதும் மடிந்து விடும். நோய் தாக்காத கிளைகளில் மட்டும் குறைந்த எண்ணிக்கையில் தரம் குறைந்த காய்கள் தோன்றும்நோய் தாக்கிய இலைகளில் பழுப்பு அல்லது கருப்பு நிறத்தில் நீரில் நனைந்த புள்ளிகள் பெரிதாகி ஒன்றி ணைந்து இலைகளை உதிரச் செய்யும். நோயினால் பாதிக்கப்பட்ட பூக்கள்' காய்ந்து உதிர்ந்து விடும். பூக்காம்புகள் சுருங்கி பூங்கொத்து வாடி விடும்.
பழங்களில் அழுகல் அறிகுறி தென்படும். ஒன்றிரண்டு சிறிய கரிய நிறப்புள்ளிகள் தோலின் மேல் தோன் றும். இவை விரிவடைந்து நீள்வட்ட வடிவ புள்ளிகளாக மாறும். புள்ளிகள் உட்குழிந்தும் கருமை கலந்த சாம்பல் அல்லது வைக்கோல் நிறமாகவும் புள் ளியைச் சுற்றி ஒரு மெல்லிய கருமை நிற வளையம் காணப்படும். பழங்களி னுள்ளும் விதைகளின் மேலும் பூசண வளர்ச்சி காணப்படும். நோய்த் தாக்கப்பட்ட பழங்கள் எளிதில் உதிர்ந்துவிடும்.
நிலத்தில் கிடக்கும் நோய் தாக்கிய இலைகள், பழங்கள், செடியின் பாகங்களில் இப் பூசண ம் நீண்ட காலம் உயிர்வாழும். தாக்கப்பட்ட பழங்களிலுள்ள விதைகள் மூலமாக வும் காற்று, மழைத்துளிகள் மூலம் நோய் வேகமாகப் பரவும். பல நாட்கள் அதிக பனி பெய்யும் போது நோயின் தீவிரம் அதிகமாகும். டிசம்பர் முதல் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யும் பயிர்களை தாக்கி சேதப்படுத்துகிறது.நோய் தாக்காத தரமானப் பழங்களி லிருந்து விதைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பயிர் சுழற்சி செய்வதன் மூலம் மண்ணில் நோய்க் கிருமிகளின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். சரியான இடைவெளியில் நடவு செய் வதால் பயிர்களுக்கு இடையே நல்ல காற்றோட்டம், காற்றின் ஈரப்பதம் சரி யான அளவில் கிடைப்பதால் நோய்ப் பரவல் குறையும்.
நிலத்தில் உதிர்ந்து கிடக்கும் நோய் தாக்கிய பழங்கள், இலை, கிளைகளை அகற்றி எரிக்க வேண்டும். நோய் தாக் கிய பழங்களை தனியாக அறுவடை செய்து சேமித்து வைக்க வேண்டும்.விதைப்பதற்கு 24 மணி நேரம் முன் பாக ஒரு கிலோ விதைக்கு 4 கிராம் டிரைகோடெர்மா விரிடி அல்லது காப்டான் அல்லது 2 கிராம் செரசான் கலந்த பின் விதைக்க வேண்டும்.ஏக்கருக்கு 300 லிட்டர் தண்ணீரில் 600 கிராம் சினப் அல்லது மான்கோ செப் அல்லது 750 கிராம் தாமிர ஆக்ஸி குளோரைட் கலந்து 15 நாட்கள் இடை வெளியில் 3 முதல் 4 முறை தெளிக்க வேண்டும்.
0
Leave a Reply