25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு  ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைக்கு ஒப்பந்தப்புள்ளிகள் வரவேற்கப்படுகின்றன

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பெரியார், கோவிலாறு, குல்லூர்சந்தை மற்றும் இருக்கண்குடி ஆகிய 4-நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமைகளை 5-ஆண்டு காலங்களுக்கு குத்தகைக்கு விடுவது தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளும் பொருட்டு, குறைந்தபட்ச குத்தகைத் தொகை நிர்ணயம் செய்யப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும், எதிர்வரும் 05.01.2026-அன்று நடைபெறவுள்ள மேற்படி 4 நீர்த்தேக்கங்களின் மீன்பாசி குத்தகை உரிமையை குத்தகைக்கு எடுக்க விருப்பம் உள்ளவர்கள் அதற்கான விண்ணப்பங்கள் மற்றும் தொடர்புடைய விவரங்களை www.tntenders.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேலும், விவரங்களுக்கு, உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, அறை எண்: 228, இரண்டாம் தளம், பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம், கூரைக்குண்டு, விருதுநகர் – 626002 என்ற அலுவலக முகவரியிலோ அல்லது 04562-244707 என்ற தொலைபேசி எண் வாயிலாகவோ அல்லது adfisheriesvnr@gmail.com  என்ற மின்னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S, அவர்கள் தெரிவித்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News