25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-ஐ மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-ஐ மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு தொடர்பான ஒரு நாள் கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி-I மற்றும் தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் சார்புத்தேர்வு (தாலுகா & ஆயுதப்படை) விரைவில் நடைபெற உள்ளது.இத்தேர்வுக்கு விருப்பமுள்ள விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தால் ஒருநாள் கருத்தரங்கு 10.04.2025 அன்று விருதுநகர் மருத்துவக்  கல்லூரி கலையரங்கத்தில் துறை சார்ந்த சிறந்த நிபுணர்களைக் கொண்டு நடத்தப்படவுள்ளது.

இந்நிகழ்வு TNUSRB SI  தேர்வர்களுக்கு காலை 9.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை மற்றும் TNPSC GROUP - 1 தேர்வர்களுக்கு மதியம் 1.30 மணியிலிருந்து மாலை 5.30 மணி வரை நடைபெறும். இந்நிகழ்ச்சியில் இத்தேர்வு குறித்து விளக்கங்கள் மற்றும் தெளிவுரை வழங்கப்படும். இந்த ஒருநாள் கருத்தரங்கில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள்  https://forms.gle/yqdmFbP1tGqBfA7Z6 என்ற  கூகுள் பார்ம் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினையோ அல்லது studycirclevnr@gmail.com  என்ற மின்னஞ்சல் மூலமாக தொடர்புகொள்ளலாம்.  எனவே TNPSC  குரூப்  1 மற்றும் TNUSRB SI  தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News