நெஞ்செரிச்சல் இருந்தால்.....
வயிறு முட்ட சாப்பிட்ட உடனே படுப்பதை தவிருங்கள். 2 மணிநேரம் கழித்து படுங்கள்.
அதிகமாக சாப்பிடாதீர்கள். வயிறு நிறைந்த பிறகு சாப்பிடுவது உங்களுக்கு எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
சாப்பிடும் போது உணவை முழுசு முழுசாக விழுங்காதீர்கள். கொஞ்சம் கொஞ்சமாக மென்று சாப்பிடுங்கள்.
காரசாரமான உணவுகள், அமில உணவுகள் சிட்ரஸ் உணவுகளை தவிருங்கள். இவை எதுக்களித்தல் பிரச்சனையை ஏற்படுத்தும்.
உடல் பருமனாக இருப்பவர்களுக்கு இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். எனவே உடல் எடையை குறைக்க முற்படுங்கள். தக்காளி மற்றும் வெங்காய ஜூஸ் குடிக்காதீர்கள். பலருக்கு இரவில் எதுக்களித்தல் பிரச்சினை அதிகமாக இருக்கும். இதனால் நிம்மதியாக தூங்க முடியாமல் அவதிப்படுபவர்கள். படுக்கும் போது உயரமான தலையணையில் தலையை வைத்து படுங்கள்.
அசிடிட்டி மற்றும் எதுக்களித்தல் பிரச்சனை அதிகமாக இருந்தால் மருத்துவரை அணுகி விடுவது நல்லது.
காபி சாக்லேட் எலுமிச்சை , ஆரஞ்சு இதெல்லாம் கொஞ்சம் தள்ளி வைங்க. வயிறு கொஞ்சம் அமைதியா இருக்கும்.
PCOS இருக்கறவங்க கவனத்துக்கு. நீங்க பால் பொருட்கள் ,வெள்ளை அரிசி, மைதான்னு சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட்டுகள். அப்புறம் ஸ்வீட் ஐட்டம்ஸ், சர்க்கரை , இதெல்லாம் அவாய்ட் பண்ணுங்க. உங்க உடல்நலத்துக்கு நல்லது.
0
Leave a Reply