25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >>


தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  பல்வேறு  திறன் அடிப்படையிலான  பயிற்சிகள்  வழங்கப்படுகிறது. 
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ)  மூலமாக  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு  பல்வேறு  திறன் அடிப்படையிலான  பயிற்சிகள்  வழங்கப்படுகிறது. 

 தாட்கோ  சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்துடன் இணைந்து ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு   உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), ஆடை வடிவமைப்பு (ம)  மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் (Glam and Cosmetology Salon Management)   ஆகிய பயிற்சிகள்  வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சியில்  சேர   ஆதிதிராவிடர்  மற்றும்  பழங்குடியின   இனத்தை  சார்ந்தவர்களாகவும், உலக தர உணவு சேவை மற்றும் சூழலியல் சுற்றுலா திறன்பயிற்சி (Global Food & Beverage Service Eco-Tourism), உயர் தொழில்நுட்ப AI பயிற்சி (Advanced Artificial Intelligence(AI)), போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 25 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும்,  ஆடை வடிவமைப்பு (ம) மேலாண்மை திறன் பயிற்சி (Apparel & Designing Management) மற்றும் அழகுக்கலை (ம) சிகை அலங்கார மேலாண்மை திறன் பயிற்சி(Glam and Cosmetology Salon Management)   போன்ற பயிற்சிகளுக்கு 18  முதல் 40 வயது  வரை  உள்ளவர்களாகவும் கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.  

இப்பயிற்சியினை முழுமையாக முடிக்கும் இளைஞர்களுக்கு சான்றிதழ்  மற்றும் வேலை வாய்ப்பிற்கு வழி வகை செய்யப்படும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3.00 இலட்சத்திற்குள்  இருக்க வேண்டும்.இப்பயிற்சியினை  பெற தாட்கோ இணையதளமான (www.tahdco.com)  என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம். இப்பயிற்சிக்கான கால  அளவு  மூன்று மாதங்கள்  ஆகும்.  மேலும் சென்னையில்  உள்ள  விடுதியில்  தங்கி  படிக்கும்  வசதி  மற்றும்  உணவுக்கான    செலவினம் தாட்கோ மூலமாக  வழங்கப்படும். தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் பதிவு செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News