சுகப்பிரசவம்
மருத்துவ காரணங்கள் அல்லாமல், வலிகளை தாங்க முடியாமலும், சிசேரியனை நோக்கி செல்லும் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது.ஆனால் ஆரோக்கியமான உடல்வலிமையோடு மனவலிமையும் கை கூடினால் சுகப்பிரசவம் எளிதான ஒன்று.
மனஅழுத்தம் பிரசவத்திற்கு முதல் எதிரி.பிரசவம் எனக்கு எளிதில் நிகழும் என்ற கருத்தை மட்டுமே மனதில் வைத்து கொண்டு அந்த காலகட்டத்தை சந்தோசமாக அனுபவியுங்கள்.கர்ப்ப காலத்தின் பொழுது மேற்கொள்ளப்படும் எளிய உடற்பயிற்சிகள் தொடை மற்றும் இடுப்பு தசைகளை வலுவாக்குகின்றன.மேலும் பிறப்புறுப்பையும் இளக்கமாக்கி சுகபிரசவம் எளிதாக நடைபெற உதவுகின்றது. ஆனால் இத்தைகைய உடற்பயிற்சிகள் முறையாக நிபுணர்களின் ஆலோசனையின் பெயரில் மேற்கொள்ள வேண்டும் இல்லையெனில் சிலநேரம் ஆபத்தாய் முடியக்கூடும்.
எளிதான சுகப்பிரசவத்திற்கு தாயின் உடல் எடையும் வயிற்றில் உள்ள குழந்தையின் எடையும் குறிப்பிட்ட விகிதத்தில் இருப்பது அவசியம்.கர்ப்ப காலத்தின் பொழுது தாய்மார்கள் அவ்வப்போது எடையை பரிசோதித்துக் கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.தேவையற்ற கலோரிகள் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
பிரசவத்துக்கு 10 நாட்களுக்கு முன்பாக சில சமயம் வலி வரும் அப்போ அது பிரசவ வலி தானா என்று தெரிந்து கொள்ள, ஒரு முட்டை (நாட்டுக்கோழி யாக இருந்தால் சிறப்பு) சிறிது மிளகு, 1 ஸ்பூன் விளக்கெண்ணை சேர்த்து ஆம்லெட் போட்டு சாப்பிட்டால் அதே நாளோ அல்லது மறு நாளோ குழந்தை வலி இல்லாமல் சுகப்பிரசவம் ஆகும். வலி வரும் போது எல்லாம் இதை செய்து சாப்பிடலாம்.
0
Leave a Reply